Monday, 28 January 2013

மாம்பழ ஸ்குவாஷ்


தேவையானவை:  

மாம்பழச் சாறு,
 தண்ணீர் - தலா இரண்டரை கப்,
சர்க்கரை - 5 கப்,
மாம்பழ எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்,
சிட்ரிக் ஆசிட் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (கே.எம்.எஸ்) - கால் டீஸ்பூன்.

 
செய்முறை:

தண்ணீரை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் சிட்ரிக் ஆசிடை சேர்க்கவும்.

பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து, ஆறவிட்டு வடிகட்டவும்.

 மாம்பழச்சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். சுத்தம் செய்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.
 

பொதுவான குறிப்பு: ஸ்குவாஷ் வகைகளை, தயாரித்த மறுநாள்தான் பயன்படுத்த வேண்டும்.
 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாசுக்கு ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பரிமாறவும்.
இதில் விட்டமின் 'ஏ' சத்து நிறைந்துள்ளதால் கண் நோய்களைக் குணப்படுத்தும். 
கார்போ ஹைட்ரேட்டும் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home