Sunday, 27 January 2013

பெப்பர் சில்லி சிக்கன்

சிக்கன் ரெசிபியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் சிக்கனை நன்கு காரமாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக சிக்கனில் சிக்கன் 65 தான் அனைவருக்கும் பிடிக்கும். 
 
ஆனால் அந்த மாதிரியான வகையில் தான் சில்லி சிக்கனும் இருக்கும். மேலும் சில்லி சிக்கனில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான பெப்பர் சில்லி சிக்கனை எப்படி செய்வது என்று பார்ப்போமா!!!

delicious pepper chilli chicken
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 1/2 கிலோ 
முட்டை - 1 
கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் 
தயிர் - 1/4 கப் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 4 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 கரம் 
மசாலா தூள் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
கேசரி பவுடர் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 
 முதலில் சிக்கனை நன்கு கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் முட்டை, கார்ன் ஃப்ளார், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகுத் தூள், கேசரி பவுடர், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொரித்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி, கொத்தமல்லி தூவி ஒரு முறை பிரட்டி இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையான பெப்பர் சில்லி சிக்கன் ரெடி!!!


Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home