Friday, 25 January 2013

கேரட் குருமா

Delicious Carrot Kurma
கேரட் கண்களுக்கு மிகவும் சிறந்த ஒரு காய்கறி. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பார்வைக் கோளாறு ஏற்படாமல் தடுக்கலாம். இந்த கேரட்டை பச்சையாகக் கூட சாப்பிடலாம். அதே கேரட்டை மூலப்பொருளாக கொண்டு குருமாவும் செய்யலாம். 
 
இப்போது அந்த கேரட் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


தேவையான பொருட்கள்: 
 
 கேரட் - 1/2 கிலோ (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
தேங்காய் - 1/2 கப் (துருவியது) 
பச்சை மிளகாய் - 6 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது) 
ஏலக்காய் - 2 
இலவங்கம் - 2 
பட்டை - 1 துண்டு 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான 
அளவு எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை: 
 
 முதலில் கேரட்டை தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், இலவங்கம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்கு வதக்கி, மஞ்சள் தூள், வேக வைத்துள்ள கேரட், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவை ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
குழம்பானது சற்று கெட்டியானதும், அதனை இறக்கி விட வேண்டும். 
 
இப்போது சூப்பரான கேரட் குருமா ரெடி!!! 
 
இதனை சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். குறிப்பு: வேண்டுமெனில் இத்துடன் உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home