Saturday, 19 January 2013

உண்மையில் இருக்கும் சில கிறிஸ்துமஸ் மரங்கள்!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியமான ஒன்று தான் கிறிஸ்துமஸ் மரம். இந்த மரமானது அனைத்து கிறித்துவர் வீடுகளிலும், இந்த பண்டிகையின் போது இருக்கும். அதேப்போல் இந்த மரங்கள் பல வகைகளில் வைக்கப்படும். சிலர் இந்த மரத்தை கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து, அதனை அலங்கரித்து கொண்டாடுவார்கள். ஆனால் வெளிநாடுகளான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சிலர் தங்கள் வீட்டின் தோட்டத்திலேயே கிறிஸ்துமஸ் மரத்தினை வளர்த்து, அலங்கரித்து கொண்டாடுவார்கள். ஏனெனில் இவை அங்கு அதிகம் வளர்கின்றன.

 அவர்களும் வளர்க்கின்றனர்.
ஆனால் இந்தியாவில் இந்த மாதிரியான மரங்களை வளர்ப்பதில்லை. இருப்பினும் இந்தியாவில் உள்ள ஒரு சில குளிரான இடங்களில் இந்த மரங்களை வளர்க்கலாம். ஏனெனில், உண்மையாக இருக்கும் கிறிஸ்துமஸ் மரங்கள் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வளரக்கூடியது. எனவே தான் அத்தகைய மரத்தை இந்தியாவில் வளர்க்க முடியவில்லை. மற்றொரு அதிசயம் என்னவென்றால், அந்த மரங்கள் குறைந்தது ஒரு வருடத்திற்கு பசுமையாக இருக்கக்கூடியது. சரி அத்தகைய மரத்தை தான் நம்மால் வளர்க்க முடியவில்லை. ஆனால் அத்தகைய மரங்களை வாங்கி வந்து வீட்டில் அலங்கரிக்கலாம். சரி, இப்போது அவ்வாறு உண்மையாக கிறிஸ்துமஸ் மரத்தைப் போன்று இருக்கும் மரங்களுள் சிலவற்றைப் பார்ப்போமா!!!


சிவப்பு பைன் (Red Pine)

சிவப்பு பைன் மரத்தின் தாவரவியல் பெயர் பைனஸ் ரிகாலஸ் (Pinus regalus) ஆகும். இந்த மரங்கள் பொதுவாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும். இது ஒரு வகையான ஊசியிலை மரங்களாகும். இந்த மரங்கள் மிகவும் உயரமாக, கிறிஸ்துமஸ் மரத்தைப் போன்ற கிளைகளைக் கொண்டது.

 

வெள்ளை பைன் (White Pine)

இதுவும் பைனஸ் வகையைச் சேர்ந்த மரமாகும். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் பைனஸ் ஸ்ட்ரோபஸ் (Pinus strobus). இந்த மரங்கள் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும். இதில் உள்ள இலைகள் கிறிஸ்துமஸ் மரத்தில் உள்ள இலைகளைப் போன்று, மென்மையாகவும் பஞ்சு போன்றும் இருக்கும். மேலும் இது அடர்ந்த கிளைகளைக் கொண்ட, ஓர் கூர்மையான ஊசியிலை மரமாகும்.

 

ஆஸ்திரேலிய பைன் (Austrian Pine)

ஆஸ்திரேலிய பைன் மரத்தினை பைனஸ் நிக்ரா (Pinus nigra)என்றும் அழைப்பார்கள். இதில் உள்ள இலைகள் அடர்ந்த பச்சை நிறத்தைக் கொண்டது. இதனை கருப்பு பைன் என்றும் அழைப்பர். மேலும் இந்த மரத்தின் முனைகளானது கொத்தாக காணப்படும்.

 

வெள்ளை ஸ்புரூஸ் (White Spruce)

பீசியா க்ளாக்கா (Picea glauca) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெள்ளை அல்லது நார்வே ஸ்புரூஸ் மரமானது, குறுகிய கால கிறிஸ்துமஸ் மரமாகும். இந்த மரத்தில் உள்ள ஊசிகள் போன்று இருக்கும் கிளைகள்/இலைகள் விரைவில் உதிர்ந்துவிடும். ஆனால் இது பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும்.

 

கொலோராடோ ப்ளூ ஸ்புரூஸ் (Colorado Blue Spruce)

பீசியா புங்கன்ஸ் என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் கொலோராடோ ப்ளூ ஸ்புரூஸ் கூட ஒரு வகையான கிறிஸ்துமஸ் மரமாகும். இதன் பெயரில் உள்ள நீல நிறமானது, இந்த மரத்தின் ஒரு பகுதியில் இருக்கும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home