Monday, 28 January 2013

சுவையான... தேப்ளா

Delicious Thepla
சப்பாத்தி மற்றும் பூரி போன்றவற்றை செய்வதைப் போன்று, தேப்ளா செய்வதும் மிகவும் எளிது. பெயரைப் பார்த்து பயப்பட வேண்டாம். இதுவும் சப்பாத்தி மற்றும் பூரியைப் போன்றது தான். 
 
இந்த தேப்ளாவை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 1 கப் 
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
ரவை - 2 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை எள் - சிறிது 
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 
தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 
இஞ்சி - சிறிய துண்டு 
பூண்டு - 2 பல் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
 பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, ரவை, எள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் அந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
 இப்போது சூப்பரான தேப்ளா ரெடி!!!
 
 இதனை அப்படியே சாப்பிடலாம். இதற்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. 
 
குறிப்பு : இதனை பூரி போன்றும் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home