Wednesday, 23 January 2013

செடியை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமா!!!

Basic Rules Grow Healthy Plants
வீட்டில் தோட்டத்தை போடுவது ஒரு பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல, ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தான். இப்போதெல்லாம் பொழுதுபோக்குக்காக தோட்டத்தைப் போட்டு, செடிகள் சரியாக வளரவில்லை என்று வருத்தப்பட்டால் மட்டும் போதுமா என்ன? செடிகள் சரியாக வளராமல் வாடுவதற்கு, அவற்றை முறையாக கவனிக்கத் தெரியாததே பெரும் காரணமாக இருக்கும். ஆகவே செடிகள் நன்கு ஆரோக்கியமாக செழித்து வளர ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளைப் பின்பற்றி செடிகளை வளர்க்கலாமா!!!

* முதலில் செடியை வைக்கும் முன், அந்த செடியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்து செடிகளும் வெவ்வேறு இனம் மற்றும் குடும்பத்தை சேர்ந்தது. உதாரணமாக, காக்டஸ் செடியை எடுத்துக் கொண்டால், அதனை மண்ணில் வளர்க்க முடியாது. நீரில் தான் வளரும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், எந்த செடி எப்படி வைத்தால் நன்கு வளரும் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். 
 
* அனைத்து செடிகளும் ஒரே மண்ணில் வளராது. அதற்கு என்று ஒரு சிறப்பான மண் இருக்கும். சில செடிகள் களிமண்ணில் வளரும். சில செடிகள் சாதாரண மண்ணில் வளரும். ஆகவே சரியான மண்ணை தேர்ந்தெடுத்து வளர்த்தால், அந்த செடி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வளரும். 
 
 * சில செடிகள் விதைகள் மூலம் வளரும், சில செடிகள் அதன் கன்றுகள் மூலம் வளரும். ஆகவே இதனை தெரிந்து கொண்டு, எதை நம் வீட்டுத் தோட்டத்தில் வைத்தால் நன்கு வளரும் என்று யோசித்து, வைத்தால் நல்லது. அதிலும் புதிதாக தோட்டம் வைப்பவர்கள், கன்றுகளை வைத்து வளரும் செடிகளை வளர்ப்பது நல்லது. ஏனெனில் விதைகளை வைத்து வளர்ப்பதில் சற்று கடினமானது, மேலும் அதனை அப்போது புதிதாக தோட்டம் வைப்பவர்களால் சரியாக பராமரிக்க முடியாது. 
 
* செடிகளில் இரு வகைகள் உண்டு. வற்றாத செடி மற்றும் பருவக்கால செடி. வற்றாத செடிகளின் விதைகளை விதைத்தால், எந்த நேரத்திலும் செடி வளரும். ஆனால் பருவக்கால செடிகளை அந்தந்த பருவத்திற்கு ஏற்பவே வைக்க வேண்டும். 
 
* ஒவ்வொரு செடிகளுக்கும் ஒவ்வொரு மாதிரி தண்ணீரானது தேவைப்படும். சில செடிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது, ஒருசிலவற்றிற்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றினால் போதும். ஆகவே தோட்டத்தில் வைக்கும் செடிக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். 
 
* ஒரு சில தாவரங்களுக்கு வெயில் தேவைப்படும், ஒரு சிலவற்றிற்கு நிழலே போதுமானது. ஏனெனில் தாவரங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஒளிச்சேர்க்கையை சூரிய வெப்பத்திலிருந்து தான் பெறுகிறது. மேலும் சூரிய வெளிச்சம் அளவுக்கு அதிகமாக பட்டால், செடிகள் வாடிவிடும். ஆகவே எந்த தாவரங்களை எங்கு வைத்தால் நன்கு வளரும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
* மேலே சொன்னவற்றை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. முக்கியமாக எந்த கிளைமேட்டில் வைத்தால் நன்கு தாவரங்கள் வளரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, வெப்ப மண்டலத்தில் வளரும் செடிகளை, பனிப்பொழிவு காலத்திலும் வளரும் என்று நினைத்தால், அது தவறு. ஆகவே இதனையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home