Wednesday, 30 January 2013

நிம்மதியான தூக்கத்தைப் பெற சில டிப்ஸ்..

 
 
தூக்கம் என்பது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் உள்ள அழுத்தம் மற்றும் இறுக்கம் குறையத் தூக்கம் உதவுகிறது. பகலில் உடல் வருத்தி உழைக்கும் போதும் .உடற்பயற்சி செய்யும் போதும் ஏற்படும் தசைக் கிழிவுகளை (muscle damage), நாம் தூங்கும் பொழுது உடல் தானே சரி செய்து கொள்கிறது. நம்மை தூங்க வைப்பது எது என்று தெரியுமா? மூளையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் "மெலடோனின்" என்னும் சுரப்பி தான். இந்த சுரப்பியில் இருந்து வரும் நீர்மமானது இரத்தத்தில் கலந்து, உடலின் வெப்பத்தையும் விழிப்புவுணர்வையும் குறைப்பதனால் நமக்கு தூக்கம் வருகிறது. 
 
வெயில் மற்றும் வெளிச்சம் இந்த சுரப்பியின் தயாரிப்பைத் தடுப்பதனாலேயே பகலில் நாம் தூங்குவது குறைவாக உள்ளது. எனினும் நம்மில் சிலர் வெயிலோ, மழையோ, புயலோ, இடியோ, எந்த நேரத்தில் வந்தாலும் தூங்கத் தயாராக இருப்போம், அது நமது சிறப்பு அப்படித்தானே? உங்களுக்கு தெரியுமா உடலில் ஒரு கடிகாரம் இருக்கிறது, அது 24 மணி நேரமும் நமது உடலில் ஒவ்வொரு வேலைகளையும் சுரப்பிகளின் மூலமாக செயல்படுத்தும். சீனா மக்கள் இதனை 2 மணி காலவரையாகப் பிரித்துள்ளனர். 
 
ஒவ்வொரு 2 மணி நேரத்திலும், ஒவ்வொரு உறுப்பு சுத்திகரிக்கப்பட்டு ,பின்னர் செயல்படுத்தப்படுகிறது. தூக்கம் கெடுவதினாலும், பகலில் தூங்குவதினாலும் இந்த சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. சரி, இப்பொழுது எப்படி தூக்கத்தை சரிசெய்வது என்றும், எப்படி நன்றாக தூங்குவது என்பதையும் பார்ப்போம்.

உணவுகள் 
 
இரவில் படுக்கும் போது பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட உணவான மைதா, ரவை போன்றவற்றையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், பிரட் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உடனே செரிமானம் அடைவதால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனே அதிகரித்துவிடும். எனவே பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், அவை மெதுவாக செரிமானமடைந்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்.


மூலிகை டீ
 
 இரவில் படுக்கும் நேரம் சாப்பிட்டு உடனே தூங்கக் கூடாது. ஏனெனில் தூங்கும் போது வயிறு அதன் வேலை நிறுத்த ஆரம்பிக்கும். அப்போது வயிற்றில் உணவு இருந்தால், அது குழம்பிப் போய், வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்திவிடும். பின் நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது. எனவே இரவில் தூக்கம் கலையாமல், நிம்மதியான தூக்கத்தைப் பெற மூலிகை டீ குடித்துவிட்டு தூங்கினால், உண்ட உணவானது எளிதில் செரிமானமடைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

உடற்பயிற்சி
 
 யோகா, பிரணயாமம், தியானம் ஆகியவை உடலில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து, ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அதுமட்டுமின்றி உடற்பயிற்சியும், முச்சுப்பயிற்சியும் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாகும். எனவே தூங்கும் முன் சிறிது நேரம் யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்துவிட்டு தூங்குவது நல்லது.

சரியான நேரம் தூங்கி எழுதல் 
 
நாம் எல்லோருக்கும் விடுமுறை நாளென்றால் இன்னும் கொஞ்சம் தூங்கத் தோன்றும். ஆனால் அது நல்ல பழக்கம் இல்லை. விடுமுறை நாளோ, வேலை நாளோ, ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவது நல்லது. இவ்வாறு செய்தல் உடல் சீராக இயங்கும். காலையில் விழிக்கும் பொது தலைவலி, உடல்வலி இருக்காது. ஒவ்வொரு நாளும் 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம்

இருட்டான அறை 
 
வெளிச்சம் மெலடோனின் செயல்பாட்டைத் தடுப்பதினால், தூங்கும் அறையானது இருட்டாக இருப்பது அவசியம். எனவே வெளிச்சத்தைத் தவிர்க்க கதவு, ஜன்னல்களுக்குத் திரைச்சீலை போட வேண்டும். அனைத்து விளக்குகளையும் அணைப்பது அவசியம். அதே போல, எழுதவுடன் அறை முழுவதும் வெளிச்சம் வரும் வகையில் விளக்குகளைப் போடுவது அவசியம். இவ்வாறு செய்தல் உடல் தன் செயல்பாட்டை நமக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளும்.

அக்குபஞ்சர் மருத்துவ முறை 
 
அக்குபஞ்சர் என்பது ஊசிகளின் மூலமாக உடலில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் (pressure points) அழுத்தம் தந்து, உடலிலுள்ள கோளாறுகளைச் சரி செய்யும் மருத்துவ முறை. எனவே அக்குபஞ்சர் மருத்துவர்களை அணுகி, இந்த சிகிச்சை மூலம் மெலடோனின் அளவைக் கட்டுப்படுத்தவோ, அதிகரிக்கவோ முடியும். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், "பின்தூங்கி முன்னெழு" என்றில்லாவிட்டாலும் நன்றாகத் தூங்கி புத்துணர்ச்சியுடன் எழுவோம்!!!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home