மழைக்காலத்தில் அழகாய் ஜொலிக்க!- Beauty for rainy season
மழைக்காலத்தில் வெளியில் போகும் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி விடுகிறார்கள். காரணம் மழைகாலத்தில் நமது உடல் தோலானது உலர்ந்து விடுகிறது. தொடர்ச்சியாக நம் மீதுபடுகின்ற ஈரக்காற்றினால் முடியும் கூட உலர்ந்து விடுகிறது.
மழை நேரங்களில் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை. வீட்டில் இருந்தபடியே அழகைப் பராமரித்தால் மழைக்காலம் பற்றி கவலைப்பட தேவை இல்லை.
மழைக்காலத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்தால் போதுமானது. குளிக்கச் செல்லும் போது முதலில் கூந்தலில் நன்றாகச் சீவி கண்டிஷனிங் மாஸ் ஏதாவது ஒன்றை போட்டுக் கொண்டு ஹேர் கிளிப்பின் உதவியுடன் கூந்தலை மூடி வைத்துக்கொள்வது அவசியம். வெந்நீரில் இருந்து வரும் ஆவியை அதில் படும்படி காட்ட வேண்டும்.
கண்டிஷனிங் மாஸ்க் தயாரிப்பது எப்படி?
தேவை: கண்டிஷனர் ஷாம்பு, ஆலிவ் எண்ணை, பழுப்பு வினிகர், கிளிசரின், விளக்கெண்ணை, எல்லாவற்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.
இவற்றை ஒன்றாகக் கலக்கினால் கண்டிஷனிங் மாஸ்க் கிடைக்கும். இந்த மாஸ்க்கை தலைமுடியில் பூசி வைத்து கால் மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும்.
மழை நாட்களில் வெந்நீர் பயன்படுத்தி குளித்தால் தோல் நிறம் மாறாமல் இருக்கும்.
குளிப்பதற்கு முன்பு மேனி முழுவதும் தேங்காய் எண்ணையை தடவிக் கொள்ளவும்.
முழங்காலில் இருந்து கணுக்கால் வரை தேவையற்ற முடிகளை அகற்றும் பசை தடவி மசாஜ் செய்து கொண்டால் மழைநாட்களில் இந்த இடங்களில் (பங்கஸ்) பூஞ்சை தாக்குதல் இருக்காது.
பாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கிரீம் ஒன்றைத் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கடைசியில் சாக்ஸ் ஒன்றை எடுத்து அதன் மூலம் கால்களை மூடிவைக்க வேண்டும்.
ஒரு டிரேயில் சிறிது வெந்நீரை எடுத்துக்கொண்டு அதில் உங்கள் கால்களை 3 நிமிடங்கள் ஊறவைத்து கை விரல்களால் மசாஜ் செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் உடல் முழுவதும் இறுக்கம் விடுபட்டது போல் இருக்கும்.
மழைகாலங்களில் குளிப்பதற்கு முன்பு வெந்நீராக இருந்தாலும் அல்லது குளிர்ந்த நீராக இருந்தாலும் அதில் ஒரு பிடிவேப்பிலையைப் போட்டு வைத்திருந்து பின்னர் குளிக்கலாம்.
பெண்கள் மழை நாட்களில் தவறாமல் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். மஞ்சள் நல்ல கிருமி நாசினியாக இருந்து சருமத்தை பாதுகாக்கும்.
மழைகாலத்தில் மருதாணி போட்டுக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மருதாணி குளிர்ச்சி என்பதால் சளி பிடித்துவிட வாய்ப்புண்டு. மழை நாட்களில் ஈரமான துணிகளின் காரணமாக தோல் எரிச்சல், பூஞ்சைபாதிப்பு, போன்றவை வர வாய்ப்புண்டு. எனவே ஈரத்துணியை கழற்றியவுடன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணை தடவி வைத்து பின்னர் கழுவி விடலாம்.

Labels: அழகு குறிப்புகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home