Friday, 1 February 2013

குடைமிளகாய் பன்னீர் மசாலா

பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் ருசியாக இருக்கும். அந்த பன்னீருடன், குடைமிளகாயை சேர்த்து, ஒரு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
 தேவையான பொருட்கள்: 
பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது) 
குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது) 
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 3 (அரைத்தது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 
டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வெட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். 
Capsicum Paneer Masala

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். 
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும். 
அடுத்து நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, பின் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து கிளற வேண்டும். 
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 
பின் வறுத்து வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை போட்டு, ஒரு 3 நிமிடம் கிளறி இறக்கிவிட வேண்டும். 
இப்போது சுவையான குடைமிளகாய் பன்னீர் மசாலா ரெடி!!! 
இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home