சுக்கு காபி
என்னென்ன தேவை?சுக்கு - 50 கிராம்,
ஏலக்காய் - 5,
வெல்லம் - 50 கிராம்,
பால் - 1 கப்.
எப்படிச் செய்வது?
சுக்கையும் ஏலக்காயையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு, அரைத்த பொடியில் 2 டீஸ்பூன் சேர்த்து, தேவையான அளவு வெல்லத்தையும் பொடித்துப் போட்டுக் கொதிக்க விட்டு, இறக்கி, வடிகட்டவும்.
மற்றொரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.
இரண்டும் ஆறிய பிறகு ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
Labels: ரசம் / சூப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home