Tuesday, 5 February 2013

திப்பிலி ரசம்


தேவையான பொருள்கள்:
  1. கண்டதிப்பிலி = 2
  2. அரிசி திப்பிலி = 2
  3. சுக்கு =  அரை புளியங்கொட்டை அளவு
  4. புளி = அரை எலுமிச்சை அளவு
  5. மிளகு = அரை ஸ்பூன்
  6. சீரகம் = அரை ஸ்பூன்
  7. மிளகாய் வற்றல் = பாதி
  8. கடுகு = அரை ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் = 2 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி உப்பு போடவும். அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து புளித் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும்.
  • கொதித்து நுரைத்து வரும் போது சிறிது தண்ணீர் சேர்த்து இறக்கவும். நல்லெண்ணெயில் மிளகாய் வற்றல், கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
சுவையான திப்பிலி ரசம் தயார்.

மருத்துவ குணங்கள்:
  • திப்பிலியில் பீட்டா கரோட்டின், செலினியம், குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் காணப்படுகிறது.
  • இதனால் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய் போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் கட்டிகள், வயிற்று வலி, தசை வலி மற்றும் வீக்கம் ஆகியவை குறையும்.
  • இந்த‌ திப்பிலி ரசம் நீண்ட பிரயாணத்தின் பின் உடலில் தோன்றும் வலியை போக்கவும், ஜீரணசக்தியைத் தூண்டவும் பயன்படுத்தலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home