Tuesday, 12 February 2013

தோங்காய் பால் கேக்

Coconut Milk Cake - Pure Vegetarian Cake - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:

ஒரு முற்றிய தேங்காயின் பால் - 1 லிட்டர்
சக்கரை பொடீத்தது - 500 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்
அமோனியம் பை கார்பனெட் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
திராட்சை - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 100 கிராம்
பால் எடுத்த தேங்காய்ப்பூ

செய்முறை:

தேங்காயைத் துருவி பாலை எடுத்துவிட்டு, பூவை உலர வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால், நெய், சக்கரைப் பவுடர், ஏலப்பொடி, திராட்சை, முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் எல்லாம் போட்டு கிளறிவிட்டுக் காய்ச்ச வேண்டும்.

இட்லி மாவுப் பதம் வந்ததும் அம்மோனியம் பைகார்பனேட்டையும் போட்டுக் கிளற வேண்டும்.

பின் தகர ட்ரேயில் டால்டாவைத் தடவி, அதில் ஊற்றி விட வேண்டும். ஆறிய பின் தேங்காய்ப்பால் கேக் தயார்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home