Saturday, 2 February 2013

ஆட்டு மூளை பொரியல்

Lamb Brain Masala Fry - Cooking Recipes in Tamil
ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க..........

தேவையான பொருள்கள்: 

ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home