Sunday, 24 February 2013

கருமையைப் போக்கி, சிகப்பழகு பெற... How to get Fair

How to get Fair... - Beauty Care and Tips in Tamil
வெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும், மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன.

தலையை கவனிப்பது முதல் வழி:-

தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இந்த இரண்டையும் ஈடு செய்ய ஒரு ஸ்பெஷல் சியக்காய் பவுடர் இருக்கிறது.

சீயக்காய் - கால் கிலோ
பயறு - கால் கிலோ
வெந்தயம் - கால் கிலோ
புங்கங்கொட்டை - 100 கிராம்
பூலான் கிழங்கு - 100 கிராம்

இவற்றை நன்றாக மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்த ஸ்பெஷல் சீயக்காய் பவுடர்.

வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை ஒரேயடியாக ஓடிப் போகாமல், கருமையும் மறைய தொடங்கும்.

சருமம்:-

வெளியில் போவதற்குமுன் சிறிது தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.

வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக இதோ, இந்தக் குளியல் பவுடரை பயன்படுத்தினால் சருமம் மிளிரும்.

பயத்தம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
பூலான்கிழங்கு - 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம்
வெள்ளரி விதை - 100 கிராம்
வெட்டிவேர் - 25 கிராம்

இவற்றை மிஷினில் அரைத்து தினமும் பூசி குளியுங்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - 1 டீஸ்பூன் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.

முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருக்கும் கருமையை போக்க ஒரு இயற்கை "ப்ளீச்" சிகிச்சை இருக்கிறது.

தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்துங்கள். இதை மஞ்சள் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசுங்கள். இது முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகளை களைந்தெடுத்து முகத்தை பளிங்குபோல மாற்றிவிடும்.

உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home