Tuesday, 26 February 2013

கழுத்தையும் கவனியுங்களேன்! - More Tips to care your Neck Beauty

More Tips to care your Neck Beauty - Beauty Care and Tips in Tamil
பெண்களின் கழுத்தைச் சங்கிற்கு ஒப்பிடுவார்கள். அழகான கழுத்து என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. பார்த்தவுடன் நம் கண்களில் "பளிச்" எனத் தெரிவது முகமும், கண்களும்தான் என்றாலும் அடுத்தபடி தெரிவது கழுத்து தானே?

அழகான சங்கு கழுத்தில் போடும் போது நகைகளை அழுக்காக்கி விடுமல்லவா? கழுத்தின் பாதிப்புகள் பற்றியது...
"கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட்டும் அழகாக இருந்து கழுத்தில் மருக்கள் அல்லது கழுத்தேயில்லாமல் முகத்தோடு உடலை ஒட்ட வைத்திருந்தது போல் அமைந்தால் பார்க்க நன்றாக இருக்காது.

சிலருக்கு கழுத்து அழகாக இருந்தாலும் அதில் கரும்புள்ளிகளும், மருக்களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்வாறு கரும்புள்ளிகள், மருக்கள் தோன்ற ஆரம்பிக்கும் போதே சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் மேலும் பரவாமல் இருக்கும்.

இந்த மருக்கள் ஏற்பட முக்கிய காரணம் சுத்தமின்மை. அதிகமான நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பது முதலியன. மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இதற்கென்று தயாரிக்கப்பட்ட கிரீம் உள்ளது. இதை தொடர்ந்து தடவி வர கரும்புள்ளிகளும் மருக்களும் அடியோடு நீங்கிவிடும்.
கழுத்து அழகை பாதிக்கும் மற்றொரு காரணம் தைராய்டு சுரப்பியால் ஏற்படும் பாதிப்பு. தைராய்டு சுரப்பி கழுத்துப் பகுதியில் உள்ளதால் இச்சுரப்பியை தூண்டும் வகையில் கழுத்தை மேலும், கீழும் பக்கவாட்டங்களிலும் மெல்ல சாய்த்தல் வேண்டும். இப்படி பலமுறை செய்யலாம். தலையை அப்படியே வலது புறமாக 10 முறையும் செய்யலாம்.

வெது வெதுப்பான நீரில் துணியை நனைத்து கழுத்தில் அதை அப்படியே இரண்டு சுற்றுகள் வருவது போலச் சுற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு வேளை இப்படி செய்து வர பலன் தெரியும்.
தவிர யோகாசனப் பயிற்சிகளின் மூலமும் இதை குணப்படுத்த முடியும். தனுராசனம், சர்வாங்காசனம் போன்றவை இதற்கு நல்ல பலன் தரும்.
அழகுக்கலை நிபுணரின் ஆலோசனையுடன் உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளுதல் வேண்டும். பச்சைக் காய்கறிகள், பழச்சாறு, சாக்லட் வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவிர எளிய மூலிகை மருந்துகளும் யுனானி முறையில் இதற்கு உண்டு.

தைராய்டு சுரப்பி அதிகமாக இயங்கினாலும் பல பிரச்சனைகள் வரும். இதையும் முறையாக கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். தைராய்டு பற்றிய சந்தேகம் எழும் போதே மருத்துவரின் ஆலோசனையை நாடலாம்.
சிலருக்கு கவரிங் நகை அணிவதால் ஒவ்வாமை வரும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஒவ்வாமை வருபவர்கள் என்றால் கவரிங் நகைகளை தவிர்ப்பது நல்லது. அப்படி இல்லையென்றால் ஒவ்வாமையினால் ஏற்படும் புண்களும் அரிப்பும் அருவருப்பு தருவதோடு ஆரோக்கியத்தையும் பாதிக்கவல்லது. அவ்வாறு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூலிகை மருந்துகள் உண்டு. முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் பொறுத்து சுத்தம் செய்வதால் கழுத்து சுருக்கம் இருக்காது. மேலும் பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.

முட்டை ஒன்றின் வெள்ளைக் கருவோடு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் பொறுத்து கழுவினால் சுருக்கங்கள் விழுவதை தவிர்க்கலாம் என்கிறார் அவர்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home