Tuesday, 5 March 2013

குழந்தை வளர்ப்பு- Child growth

Child growth - Child Care Tips and Informations in Tamil

குழந்தைகள் எதைக் கேட்டாலும் முதலில் நாம் வாங்கிக் கொடுக்க பார்க்கின்றோம். அது நமது வசதிக்கு ஏற்ப இருப்பதினால் வாங்கிக் கொடுக்கின்றோம். அப்போது குழந்தைகள் நம் பெற்றோர் எதை வேண்டும் என்று கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுவார்கள் என்று எண்ணி நம்மால் வாங்கி தர முடியாத சில பொருட்களை கேட்டு பிடிவாதம் பிடிப்பார்கள். அப்போதும் நாம் வாங்கி கொடுத்து விட்டால்,
"எதை கேட்டாலும் கிடைக்கும்" என்கிற எண்ணத்திலேயே குழந்தைகள் வளருகிறார்கள். ஆனால், பின்னாளில் அது சின்னதா ஒரு ஏமாற்றத்தை சந்தித்தாலும், அப்படியே மனசு ஓடிந்து போய்விடுகிறார்கள். தோல்வியைத் தாண்டியும் வாழ்க்கை இருக்குனுகூட அவர்களுக்கு தோணாது.

வாழ்க்கையில் ஆசைப்பட்டது எல்லாமே கிடைத்து விடுவதில்லை. அவரவர் தகுதிக்கேற்பதான் கிடைக்கும் என்பதை குழந்தைகள் வளர வளர, மேலும் மேலும் பக்குவமான வார்த்தைகளில் சொல்லி விளக்குவது மிக அவசியம். கேட்டதெல்லாம் கிடைத்து வளரும் குழந்தைகள், பின்னாளில் ஆசைப்பட்டதை அடைய முடியாதபோது, வேதனையில் துடித்து, விரக்தி அல்லது வன்முறை என்னும் இருண்ட பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எனவே பெற்றோர்கள் ஆகிய நாம் குழந்தைகளுக்கு பணத்தை கணக்கு பார்க்காமல், அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதல்ல - அவர்களை நாட்டின் நல்ல குழந்தைகளாக வளர்ப்பதே நமது கடமையும் பொறுப்பும் ஆகும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home