Saturday, 20 April 2013

சைவக் கேக் (முட்டை போடாத கேக்)


தேவையான பொருட்கள்

சீனி - 250g
மா - 250g
பட்டர் - 250g
பேரீச்சம்பழம் -250g [விரும்பினால் இதன் அளவை குறைத்தும் போடலாம்]
அங்கர் பால்மா பவுடர் - 75g
பேக்கிங்பவுடர் - 2 தேக்கரண்டி
வனிலா - 2 தேக்கரண்டி
எசன்ஸ் - 3 துளி

செய்முறை...

பேரீச்சம் பழத்தின் விதையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை ஒரு பாத்திரத்தில் போட்டுஅதன் மட்டத்திற்கு தேயிலைச் சாயம் அல்லது கொதித்த தண்ணீர் விட்டு 2 மணித்தியாலம் ஊற விட வேண்டும்.

பின்பு சீனியையும் பட்டரையும் வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு [hand mixer] மூலம் மிகவும் நன்றாக அதாவது சீனி கரையும் அளவிற்கு beat பண்ண வேண்டும்.

இவ்வாறு beat பண்ணும் போது 75g - அங்கர் பால்மா பவுடரை 1 1/2 ரம்ளர் தண்ணீரில் கரைத்து எடுத்துஇதனை அதனுள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு மிகவும் நன்றாக beat பண்ண வேண்டும்.

பின்பு இதனுள் ஊற வைத்த பேரீச்சம்பழம், மா, பேக்கிங்பவுடர் - 2 தேக்கரண்டி,வனிலா - 2 தேக்கரண்டி,எசன்ஸ் - 3 துளி, விரும்பினால் கஜீவும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போடலாம், எல்லாவற்றையும் போட்டு நன்றாக mix பண்ணிப் போட்டு,
பின்பு baking dish போட்டு.180 பாகை செல்சியஸ்சில் 45 min bake பண்ணி எடுக்க வேண்டும்.

விரும்பினால் இம்முறையை செய்து பார்க்கலாம்......................

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home