டேஸ்டி மாம்பழ ஜாம்
இது மாம்பழ சீசன், மாம்பழம் கிடைக்கும் காலத்தில் கனிந்த மாம்பழங்களில் இருந்து ஜாம் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இது அவசர காலத்தில் குழந்தைக்களுக்கு டிபனுக்கு வைத்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் - 2
வெல்லம் - 100 கிராம்.
செய்முறை:
மாம்பழத்தை சுத்தமாக தோல் சீவி மிக்சியில் அரைக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் ஊற்றி வெய்யிலில் இரண்டு நாள் காய விடவும்.
நன்கு இறுகிவிடும். பின்பு வெல்லத்தை கரைத்து வடிக்கட்டி பாகு காய்ச்சி, காய வைத்த மாம்பழக் கூழில் கொட்டி கெட்டியாகக் கிளறவும்
ஆறியதும் காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் சப்பாத்திக்கும், பிரட் ஆகியவற்றிர்க்கு தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்
Labels: ஜாம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home