கோடையில் சுத்தம் செய்யுங்க... வீடு புதுசாகும்!
கோடை காலம் வந்தாலே வீட்டை பராமரிப்பது பெரிய வேலையாக இருக்கும். குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்பதால் எதையாவது எடுத்து கலைத்துப்போட்டு வேலை வைத்துக்கொண்டே இருப்பார்கள். கோடையில் வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வது குறித்து வீடு பராமரிப்பார்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். ஸ்வெட்டர், போர்வை
கோடைகாலத்தில் போர்வை, ஸ்வெட்டர்களுக்கு அவசியம் இருக்காது எனவே குடும்பத்தினர் பயன்படுத்திய போர்வைகளை நன்கு துவைத்து தனித்தனியாக பாலிதீன் கவர் போட்டு பத்திரமாக ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். குடும்பத்தினர் அணியும் ஸ்வெட்டர், தலைக் குல்லா போன்றவற்றை சுத்தப்படுத்தி பத்திரமாக எடுத்து வைத்து விடுங்கள். ஏனெனில் வெயில்காலம் முடியும் வரை அவை தேவையிருக்காது
ஜன்னலை திறங்கள்
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். காற்று வருவதற்கு வசதியாக இருக்கும்.
விசிறிகள் பத்திரம்
அடிக்கடி கரண்ட் கட் ஆவதால் ஆபத்பாந்தவனாக உதவுவது கைவிசிறிகளே. எனவே கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். கை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். மின் விசிறிகளில் அழுக்கு ஒட்டிக்கொண்டிருந்தால் சுத்தப்படுத்துங்கள்.
டைனிங் டேபிள்
டைனிங் டேபிள், டிரஸ்சிங் டேபிள் போன்றவைகளை சுத்தமாக துடைத்து வையுங்கள். உலர்வான துணியை விரித்து தூசி எதுவும் விழாமல் பாதுகாக்கலாம். அன்றாடம் உபயோகப்படுத்தும் டேபிள், சேர் போன்றவைகளை தினசரி தூசி தட்டி வைக்கலாம். இதனால் பூச்சிகள் குடியேறுவது தடுக்கப்படும்.
Labels: வீடு-தோட்ட மேம்பாடு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home