சுவையான... புதினா சட்னி
புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். ஏனெனில் இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமான பிரச்சனையை சரிசெய்யவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற என பலவாறு உதவியாக உள்ளன.
எனவே இத்தகைய புதினாவை டீ போட்டு குடிப்பதை விட, அதனை சட்னி போல் செய்து, விருப்பான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இப்போது அந்த புதினா சட்னியின் செய்முறையோடு, அதனை எதனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து செய்து சாப்பிடலாமா!!!

தேவையான பொருட்கள்:
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வரமிளகாய் - 4
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 1 சிறிய உருண்டை
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புதினாவை நீரில் அலசி, நீரில் இருந்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பருப்பானது பொன்னிறமானதும், அதில் வெங்காயம் சேர்த்து, வதக்க வேண்டும்.
பின் அத்துடன், புதினா மற்றும் புளி சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான புதினா சட்னி ரெடி!!!
இந்த சட்னியை பலவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம். அது எவை என்று கீழே கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த புதினா சட்னியை விருப்பத்திற்கு ஏற்றவாறு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
Labels: சைவம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home