Tuesday, 2 April 2013

கேரட் பீன்ஸ் பொரியல்

Simple Delicious Carrot Beans Stir Fry தென்னிந்திய உணவுகளில் பொரியல் மிகவும் பிரபலமானது. பொதுவாக பலர் மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். இத்தகைய பொரியலில் பல உள்ளன. இவை அனைத்தும் விருப்பத்திற்கேற்ற காய்கறிகளைப் பயன்படுத்தி செய்வது தான். ஆனால், பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது.
 
ஏனெனில் பொரியலானது பெரும்பாலும் காய்கறிகளை வேக வைத்து செய்வதால், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். சரி, இப்போது அவற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவருக்கும் பிடித்த கேரட் மற்றும் பீன்ஸ் பொரியலை எப்படி எளிதான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 
 
 பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது) 
 கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
 தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1/2 டீஸ்பூன் உ
ளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது
 பச்சை மிளகாய் - 2 (சிறியது மற்றும் நீளமாக கீறியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:  
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு காய்கறிகள் வெந்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
 
 பின்னர் மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு, தாளிக்க வேண்டும்.
 
 பின்பு கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகளை போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பிரட்டி இறக்கி விட வேண்டும். 
 
இப்போது சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி!!!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home