Tuesday, 9 April 2013

நெய் சிக்கன் குழம்பு

அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்டைல் என்றால் அது செட்டிநாடு ஸ்டைல் தான். ஏனெனில் இந்த ஸ்டைலில் சமைக்கும் அசைவ உணவுகள் அனைத்துமே மிகவும் ருசியுடனும், நல்ல காரசாரமாகவும் இருக்கும். பொதுவாக சிக்கனை சமையல் எண்ணெயில் தான் சமைப்போம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதற்கு நெய்யாலேயே சிக்கனை சமைக்கலாம். 
 
மேலும் சிக்கன் குழம்பில் நெய்யைப் பயன்படுத்தி சமைப்பதால், அது நெய் சிக்கன் சிக்கன் குழம்பாகும். இது சற்று ராயலான சிக்கன் குழம்பு. இப்போது அந்த நெய் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ghee chicken curry recipe
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 700 கிராம் 
நெய் - 1 கப் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 2 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
 
 செய்முறை:  
 
முதலில் சிக்கனை கழுவி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை மற்றும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும். 
 
பின் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின்பு சிக்கன் துண்டுகளை போட்டு, சிக்கன் துண்டுகளானது நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
 
 பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கியப் பின்பு உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து 5 நிமிடம் கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
 
 சிக்கன் வெந்து குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, சிறிது நேரம் கழித்து, அதன் மேல் காய்ந்த வெந்தயக் கீரை போட்டு பிரட்டி, இறக்கி விட வேண்டும். 
 
 இப்போது சுவையான நெய் சிக்கன் குழம்பு ரெடி!!! இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home