Thursday, 30 May 2013

சப்பாத்தி ஃபுரூட் ரோல்

பெரும்பாலான வீடுகளில் இரவில் சப்பாத்தி செய்தால், நிச்சயம் 3-4 சப்பாத்திகளாவது எஞ்சியிருக்கும். அத்தகைய நிலையில் அதனை தூக்கிப் போடாமல், அதனை வைத்து நாம் சில்லி சப்பாத்தி செய்வோம். 
 
ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக, எஞ்சிய சப்பாத்திகள் மற்றும் வீட்டில் ஏதேனும் பழங்கள் இருந்தால், அதனைக் கொண்டு சப்பாத்தி ஃபுரூட் ரோல் செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!
chapathi fruit roll recipe
தேவையான பொருட்கள்: 
 
சப்பாத்தி - 2 
ஆப்பிள் - 1/2 (பொடியாக நறுக்கியது) 
திராட்சை - 5 
மாதுளை - 2 டேபிள் ஸ்பூன் 
பேரிக்காய் - 1/2 (பொடியாக நறுக்கியது) 
வாழைப்பழம் - 1 (பொடியாக நறுக்கியது) 
மயோனைஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் 
 
செய்முறை:  
 
முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள பழங்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் சாட் மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின்னர் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சப்பாத்தியின் மேல் மயோனைஸை தடவி, அதன் மேல் சிறிது உப்பு தூவி, பழக் கலவையை சப்பாத்தியின் மேல் வைத்து, ரோல் போல் செய்து கொள்ள வேண்டும். 
 
இதேப் போன்று மற்றொரு சப்பாத்தியையும் செய்ய வேண்டும். 
 
இப்போது சுவையான சப்பாத்தி ஃபுரூட் ரோல் ரெடி!!!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home