Wednesday, 29 May 2013

தயிர் பெர்ரி ஸ்மூத்தி

உடற்பயிற்சி செய்த பின்னர், குடிப்பதற்கு ஏற்ற பானங்களுள் ஒன்று தான் தயிர் பெர்ரி ஸ்மூத்தி. இதன் பெயரிலேயே இதற்கு தேவையான பொருட்கள் நன்கு தெரிகிறது. இந்த பானம் உடலுக்கு வேண்டிய சக்திகளை கொடுப்பதில் சிறந்தது. 
 
மேலும் இது குழந்தைகளுக்கு பிடித்த சுவையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி இது விரைவில் செய்யக்கூடியதும் கூட. இப்போது இந்த தயிர் பெர்ரி ஸ்மூத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

yogurt berries smoothie
தேவையான பொருட்கள்: 
 
ஸ்ட்ராபெர்ரி - 5 
ராஸ்ப்பெர்ரி - 5 
ப்ளூபெர்ரி - 10 
தயிர் - 1/2 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் பெர்ரிப் பழங்களை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதில் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ருசியான தயிர் பெர்ரி ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home