2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!
முந்தைய காலத்தில் வீட்டில் குளியலறைகளே இருக்காது. குளிப்பதென்றால் ஆற்றுக்கு தான் செல்வார்கள். நாகரீகம் வளரத் தொடங்கியதும், குளிப்பதென்றால் அது வீட்டு முற்றத்தில் அல்லது பின்புறத்தில். பின்னர் சற்று முன்னேறி குளிப்பதற்கு என்று தனி அறை கட்டப்பட்டது. ஆனால் வீட்டோடு சேர்ந்து இல்லாமல் தனியாக இருக்கும்.
காலம் மாற குளியலறை என்பது நம் படுக்கை அறையிலேயே அமைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் வீட்டில் உள்ள அறைகளைப் போல, அதற்கு அதிக ஆடம்பரம் செய்வதில்லை. இப்போது நிலைமை தலை கீழாக உள்ளது. நம் படுக்கை அறைக்கு ஈடாக, குளியலறைக்கும் ஆடம்பரம் சேர்க்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் குளியலறை என்பது அனுபவிக்கவும், சொகுசை பெறவும் வடிவமைக்கப்படுகிறது.
குளியலறையில் கனமான, பெரியதாக வடிவமைக்கப்பட்ட துப்புரவுப் பொருட்கள் பயன்படுத்திய காலம் பறந்தோடி விட்டது. எளிமை மற்றும் சுத்தமான வேலைப்பாடுகளே, இன்றைய காலக்கட்டத்தில் ஆட்சிப் புரிகிறது. தற்காலத்திய டிசைன்கள், இடைநிலை டிசைன்களை பழமையாக்கி அதனை யாரும் விரும்பாத நிலை ஏற்பட்டு விட்டது.
இடத்தை சேமிக்கும் பெட்டகங்கள்:
இன்றைய குளியலறைகளில் பெட்டகங்கள் (Cabinet) வைப்பது கண்டிப்பான ஒன்றாகி விட்டது. இதனால் குளியலறை பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குளிப்பதற்கு தேவையான பொருட்களை இந்த பெட்டகத்தில் வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் இன்றைய வீடுகள் சின்னதாக இருப்பதால், பெட்டகம் வைத்தால் குளியலறையை சின்னதாக கட்டிக் கொள்ளலாம்.
ஸ்பா போன்ற குளியலறைகள்:
துண்டுகளை அடுக்கி வைக்க ஆடம்பர அடுக்குகள், தரையை வெப்பத்தோடு வைக்க தரைக்கு அடியில் வைக்கப்படும் வெப்ப அமைப்பு, தண்ணீரில் நனையாத ஒலிபெருக்கி (குளியலறையில் இசையை கேட்டு மகிழ), ஷவரில் வண்ணம் மாற்றும் LED விளக்கு மற்றும் ஆங்காங்கே வண்ண விளக்குகளை பொருத்துதல் என ஸ்பாவில் உள்ளதை போல் பெரிய அளவிலான ஷவர் போன்ற ஆடம்பர வசதிகளை இன்றைய குளியலறையில் பொறுத்த விரும்புகின்றனர்.
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நண்பன்:
தண்ணீர் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பற்றாக்குறையான இயற்கை வளமாக மாறி வருவதால், ஆடம்பரம் என்ற பெயரால் தண்ணீரை விரயம் ஆக்குவதை அனுமதிக்கக்கூடாது. எனவே சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நண்பனாக குளியலறை இருப்பது ரொம்ப முக்கியம்.
உலோக நிறப்பூச்சு (மெட்டாலிக் பெயிண்ட்):
குரோமிய உலோகப் பூச்சு தான் அதிகமாக குளியலறைக்கு விரும்பப்படும் வண்ணமாக திகழ்கிறது. கருப்பு வெள்ளை காலகட்டத்தை சேர்ந்த டிசைன்கள், இப்போது மக்கள் மனதில் அடியோடு தகர்த்து எறியப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் தங்க நிறத்திலான டைல் கற்களும், உபரி பொருட்களும் குளியலறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பெண்களின் அழகு சாதனக் கடைகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.
Labels: உள் அலங்கரம்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home