கருத்தடை ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்!!!
இன்றைய காலத்தில் திருமணமான தம்பதிகள் பலர், உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. அதனால் அவர்கள் உறவு கொள்ளும் போது பெண்கள் கர்ப்பமாவதைத் தடுக்க, இருபாலாரும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களுள் சிலவற்றைப் பயன்படுத்தினால், நிச்சயம் கரு உருவாவதைத் தடுக்கலாம் என்று கூற முடியாது. சில சமயங்களில் அவற்றை பயன்படுத்தினால் கூட கர்ப்பமாகிவிடுவர். அதுமட்டுமின்றி, கருத்தடை சாதனங்கள் சிலவற்றை பயன்படுத்துவதால், சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்கள் சிலவற்றால் நிச்சயம் பக்கவிளைவுகள் நிகழும். உதாரணமாக, மெட்டல் பயன்படுத்துவது.
மெட்டல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் அந்த மெட்டலை மருத்துவரிடம் சென்று கருப்பையில் பொருத்திக் கொள்ள வேண்டும். மேலும் அந்த மெட்டல் கருப்பையில் இருப்பதால், அது சிலருக்கு தொற்றுநோய்களை ஏற்படுத்தி, சில சமயங்களில் புற்றுநோய் உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது பெண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனங்களுள் ஒன்றான கருத்தடை ஸ்பாஞ்ச் பயன்படுத்தினால் நிறைய நன்மைகள் உள்ளன. இந்த ஸ்பாஞ்ச் மிகவும் மென்மையாக இருக்கும். இது பிளாஸ்டிக்கால் ஆன ஒரு ஸ்பாஞ்ச். இதனை பெண்கள் உறவு கொள்ளும் போது பயன்படுத்துவதால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும். இப்போது இந்த கருத்தடை ஸ்பாஞ்ச்சின் நன்மைகளைப் பார்ப்போமா!!!

* இந்த கருத்தடை ஸ்பாஞ்ச்சை பெண்கள் மருத்துவரிடம் சென்று பொருத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இதனை எந்த நேரத்திலும், மருத்துவரின் உதவியின்றி, பெண்களே பொருத்திக் கொள்ளலாம்.
* இந்த ஸ்பாஞ்ச் இரண்டு வகையான பாதுகாப்பை அளிக்கிறது. ஒன்று, இது ஆண்களின் ஸ்பெர்ம்களை உள்ளே செல்லாமல் தடுக்கும். மற்றொன்று, அவ்வாறு சென்றாலும், அதில் உள்ள ஸ்பெர்மிசைடு, ஸ்பெர்ம்களை அழித்துவிடும்.
* இந்த பெண் கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிது. இதனை சரியான இடத்தில் பொருத்திக் கொள்ளவும், வெளியே எடுப்பதற்கும், இதற்கென்று ஒரு மெட்டலால் ஆன கைப்பிடி இருக்கும்.
* இந்த கருத்தடை சாதனம், இன்னும் குழந்தை பெறாத பெண்களுக்கு தான் சரியானதாக இருக்கும். ஒரு வேளை குழந்தை பெற்றவராக இருந்தால், அப்போது ஸ்பாஞ்ச் உடன் கூடிய கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவது நல்லது.
* பிளாஸ்டிக் என்றதும், இதனை மறுமுறை பயன்படுத்தலாம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு யூஸ் அன்ட் த்ரோ (use and throw). இதனை ஒரு முறை பயன்படுத்தியப் பின் மறுமுறை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தாமல் இருந்தால், தொற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இவையே கருத்தடை ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள். எனவே கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், இதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால், சிறந்தாக இருக்கும். தோழிகளே! நீங்கள் இதை எப்போதாவது பயன்படுத்தியிருக்கிறீர்களா?
Labels: பிரசவத்திற்கு பின்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home