Monday, 28 January 2013

சன்ஷைன் ஜூஸ்


 

தேவையான பொருட்கள்

கேரட் _ அரை கிலோ,
வெள்ளரி _ 100 கிராம்,
தக்காளி _ 100 கிராம்,
வெள்ளை மிளகு _ அரை டீஸ்பூன்,
உப்பு _ 2 சிட்டிகை,
கருப்பட்டி_50 கிராம்,
எலுமிச்சம்பழச்சாறு_10 அல்லது 12 துளிகள்.

செய்முறை

முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின்_ஏ சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும்.

வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் திக்கான சன் ஷைன் ஜூஸ் ரெடி.

 தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும்.

தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ்.

பெண்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

அதுவும் வெறும் வயித்துல சாப்பிடுவதுதான் பெட்டர்.

ஆனால் சுகர், பி.பி. உள்ளவர்கள் வெறும் வயித்துல சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சுகர் பேஷண்ட்டுகள் கருப்பட்டிக்கு பதிலாக சுகர்ஃபிரீ, போட்டு சாப்பிடலாம்.

 டயட்

கேரட்ல விட்டமின்_ஏ ஜாஸ்தி. இதுல ஃபைட்டோ கெமிக்கல்ஸ் இருக்கிறதால நம்ம உடம்புல உள்ள செல்களுக்கு பாதிப்பு வராமல் பாதுகாத்துக்க முடியும். கருப்பட்டியில் _ அயர்ன் இருக்கிறதால சத்துக்குறைவு (இரத்த சோகை) பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கலாம்.

வெள்ளரியில தண்ணீர் சத்தும் நார்ச்சத்தும் இருப்பது உடம்புக்கு நல்லது. பொதுவாக எல்லாப் பழவகைகளையும் அப்படியே சாப்பிடுறதுதான் நல்லது. ஆனா கோடை வெயில் இந்த அளவுக்கு சுட்டெரிக்கிறதால நம்ம உடம்புல இருக்கிற நீரும், உப்பும் வெளியாகிறது.

அதனாலதான் பழங்களை ஜூஸா சாப்பிடவேண்டியிருக்கு. சர்க்கரையை விட வெல்லம் நல்லது.

டயாபடீஸ்காரங்க எந்த ஸ்வீட்டும் ஜூஸ்ல கலக்காம பழத்துல இருக்கிற நேச்சுரல் சுவீட்டோட சாப்பிடுறதுதான் நல்லது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home