சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
தேவையான பொருட்கள்:
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 100 கிராம்
- சீனி – 100 கிராம்
- நெய் – சிறிதளவு
- முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை – தேவையான அளவு
- சர்க்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு அதை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்த கிழங்குடன் சீனியை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் நெய்யில் முந்திரி பருப்பை பொன்னிறமாகவறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு கிழங்கும் சீனியும் சோ்த்த கலவையில் நெய் விட்டு நன்றாக கிளற வேண்டும். வறுத்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகிவற்றை இந்த கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா தயார்.
- சர்க்கரைவள்ளி கிழங்கு இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன.
- இது நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது.
- இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல் பாட்டிற்கும் பயன்படுகிறது.
- கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.
Labels: அல்வா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home