மாங்காய் நெல்லிக்காய் தொக்கு
தேவையான பொருட்கள்:
- மாங்காய் – 1 பெரியது
- நெல்லிக்காய் – 200 கிராம்
- மிளகாய்தூள் – 200 கிராம்
- உப்பு – 11/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
- கடுகு – டீஸ்பூன்
- வெல்லம்- சிறிதளவு
- மாங்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளித்து, அரைத்த விழுதைப் போடவேண்டும்.
- மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான மாங்காய் நெல்லிக்காய் தொக்கு தயார்.
- நெல்லிக்காய் இதயத்தை வலிமைப்படுத்தும்.
- நெல்லிக்காய் குடல்புண், கண்நோய்கள், இரத்தப்பெருக்கு, நீரழிவு நோய் ஆகியவற்றை குறையச் செய்யும்.
- நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, சுண்ணாம்புச் சத்து, தாதுப் பொருள், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
- மாம்பிஞ்சுகளை வெயிலில் காயவைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
Labels: தொக்கு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home