பெரிய நெல்லிக்காய் ரசம்

தேவையான பொருள்கள்:
- நெல்லிக்காய் = 10
- பச்சை மிளகாய் = 2
- மிளகு = 1 ஸ்பூன்
- சீரகம் = அரை ஸ்பூன்
- புளி = சிறிது
- பெருங்காயம் = அரை ஸ்பூன்
- கடுகு = அரை ஸ்பூன்
- வெந்தயம் = அரை ஸ்பூன்
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
- நெல்லிக்காய் முற்றலாக இருக்க வேண்டும். இதை அதன் மேலே இருக்கும் கோடுகளின் மீது கீறி பெயர்த்தால் கீற்று கீற்றாக நெல்லிக்காய் வந்து விடும்.
- இதனோடு பச்சை மிளகாய், மிளகு, சீரகம், புளி, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கரகரப்பாக அரைத்தால் போதும் இதை ஆறு கப் தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விடவும்.
- சிறிது எண்ணெயில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ரசம் கொதித்து வரும் போது இந்த பொடியை சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
மருத்துவ குணங்கள்:
- நெல்லிக்காயில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும். பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
- இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.
Labels: ரசம் / சூப்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home