Tuesday, 12 February 2013

பாதாம் பால்




தேவையானவை 

பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
பாதாம் - 20
முந்திரி - 10
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

பதினைந்து பாதாமை கொதிக்கும் நீரில் ஊறப் போடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து நீரை வடித்துவிட்டு, தோலை உரித்து, சிறிது பால், முந்திரி சேர்த்து அரைத் தெடுங்கள். மீதியிருக்கும் பாதாமை மெல்லியதாக சீவிக்கொள்ளுங்கள்.

அடுப்பில் பாலை வைத்துக் காய்ச்சுங்கள். பால் பத்து நிமிடம் கொதித்ததும் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து, மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

அதில் சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள், சூடான பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நன்கு கலந்து ஆறவிடுங்கள் ஆறியபின், குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home