Monday, 11 February 2013

ஃப்ரெஷ் மிக்ஸ்

Fresh Mix - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:-

வெள்ளரிக்காய் - 2
கேரட் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் சாறு - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
பச்சைப்பட்டாணி (வேக வைத்தது) - 1 கப்
கொத்தமல்லி இலை - 1 கப்

செய்முறை

கேரட்களை சிறிய வட்டமான துண்டாக்கவும், வெள்ளரிக்காயை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.

இவற்றுடன் பட்டாணியையும் கலந்து சிறிது எண்ணெய் ஊற்றி, மிளகுத்தூளை கலக்கவும்.

 பரிமாறும் போது தேவையான அளவு கொத்தமல்லி அல்லது புதினா இலையை தூவி அழகுப்படுத்திக்கொள்ளலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home