Monday, 4 February 2013

யோக்கட்

 

 தேவையான பொருட்கள்

* பால் - ஒரு லிட்டர்
    * சீனி - 130 கிராம்
    * ஜெலற்றீன் - ஒரு தேக்கரண்டி
    * யோக்கற் - ஒரு கப்
    * யோக்கற் கப் - 30 கப்
    * தேமோ மீற்றர் - ஒன்று
    * கொதிநீர் - 4 மேசைக்கரண்டி
    * தண்ணீர் - தேவையானளவு
    * ஓகண்டி துணி - தேவையானளவு
    * கலரிங் - 4 துளிகள்
    * எசன்ஸ் - 3 துளிகள்
    * இக்குபேற்றர்

செய்முறை


    * ஒரு பாத்திரத்தில் பால், சீனி இரண்டையும் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் ஜெலற்றீனை போட்டு அதன் மேல் 4 மேசைக்கரண்டி கொதி நீர் விட்டு கலந்து வைக்கவும்.

    * அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அந்த பெரிய பாத்திரத்தில் 2/3 பகுதிக்கு தண்ணீர் விட்டு பால் உள்ள பாத்திரத்தை அதனுள் வைத்து கொதிக்க வைக்கவும்.

    * அதன் பின்பு பாலின் வெப்பநிலையை தேமா மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 90 க்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    * அதன் பின்பு 30 நிமிடத்திற்கு அடுப்பிலே வைத்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளவும்.

    * பால் ஆற தொடங்கும் போது தேமோ மீற்றரினால் அளக்கவும். பாலின் வெப்பநிலை 60க்கு வந்தபின்பு ஜெலற்றீன் கலவையை விட்டு நன்றாக கரைத்து ஓகண்டி துணியை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    * அதன் பின்பு பாலின் வெப்பநிலை 40 அடையும் போது யோக்கற் ஒரு கப் இட்டு கரண்டியால் நன்றாக கலக்கவும். பின்பு கலறிங், எசன்ஸ் கலந்து யோக்கற் கப்பில் ஊற்றி 40 வெப்பநிலையில் 5 மணித்தியாலம் இக்குபேற்றரில் வைக்கவும்.

    * யோக்கற் இறுகியதும் இக்குபேற்றரிலிருந்து வெளியே எடுத்து அறை வெப்பநிலையில் 10 நிமிடம் வைக்கவும் பின்பு எடுத்து 24 மணித்தியாலம் குளிரூட்டியில் வைக்கவும். பின்பு எடுத்து அறை வெப்பநிலையில் 2 மாத காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home