Sunday, 9 November 2014

சுவையான... ரோஸ் மில்க் ஷேக்

ரோஸ் மில்க் ஷேக் என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு பானமாகும். அதிலும் அதனை மாலை வேளையில் பள்ளி முடிந்து சோர்வுடன் வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பார்கள். இந்த ரோஸ் மில்க் ஷேக் செய்வது மிகவும் ஈஸி. மேலும் இதனை செய்ய தேவையான பொருட்களானது எளிதில் கடைகளில் கிடைக்கக்கூடியவையே.

 இங்கு அந்த ரோஸ் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி குழந்தைகளுக்கு செய்து கொடுத்து, அவர்களை குஷிப்படுத்துங்கள்.

சுவையான... ரோஸ் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: 

குளிர்ந்த பால் - 2 கப் 
வென்னிலா ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப் 

சிரப் செய்வதற்கு...

சர்க்கரை - 3/4 கப் 
தண்ணீர் - 100 மிலி 
ரோஸ் மில்க் எசன்ஸ் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரையானது கரைந்ததும், அதில் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

 சர்க்கரை சிரப்பானது குளிர்ந்ததும், அதனை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

 அடுத்து பிளெண்டர் அல்லது மிக்ஸியில் பால் ஊற்றி, அதில் ஐஸ்க்ரீமை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் ஊற்றி, பின் மூடி வைத்து நன்கு அடித்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ரோஸ் மில்க் ஷேக் ரெடி!!!

Labels: ,

Tuesday, 25 June 2013

சூப்பரான... மாம்பழ குல்பி

குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அருமையான முறையில் ஒரு குல்பி செய்து கொடுக்கலாமே! 
 
அதிலும் இந்த மாம்பழ குல்பி செய்வது என்பது மிகவும் எளிது. இப்போது அந்த மாம்பழ குல்பியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

kid s special recipe mango kulfi  

தேவையான பொருட்கள்: 
 
பால் - 3 கப் 
கன்டென்ஸ்ட்டு மில்க் - 1/2 கப் 
மாம்பழ கூழ் - 1 கப் 
பால் பவுடர் - 1/2 கப் 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை:
 
 முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால், கன்டென்ஸ்ட்டு மில்க், சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
பின்னர் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை அணைத்து, அதனை குளிர வைக்க வேண்டும். 
 
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவில் வைத்து, 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து, பின் வெளியே எடுத்து குளிர வைத்து, கிண்ணத்தில் இருந்து எடுத்து பரிமாறினால், சூப்பரான மாம்பழ குல்பி ரெடி!!!

Labels:

Wednesday, 29 May 2013

குலாபி ஃபெர்னி

ஃபெர்னி என்பது ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபிக்களில் பால் மற்றும் அரிசியைக் கொண்டு செய்யக்கூடியது. பொதுவாக இந்தியாவில் ஏதேனும் விஷேசம் என்றால் பாயாசம், கேசரி போன்றவற்றை காலை வேளையில் செய்து சாப்பிடுவது வழக்கம். 
 
அந்த வகையில் அன்னையர் தினம் வரப் போகிறது. அந்த தினத்தன்று அன்புள்ளம் கொண்ட அம்மாக்களுக்கு ஸ்பெஷலாகவும், அவர்களுக்கு புதுமையானதாகவும் ஏதேனும் ஒரு ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு குலாபி ஃபெர்னி சரியானதாக இருக்கும். 
 
இப்போது அந்த குலாபி ஃபெர்னியை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!
mother s day special gulabi firni  
தேவையான பொருட்கள்: 
 
பாசுமதி அரிசி - 1/2 கப் 
பால் - 1 லிட்டர் 
சர்க்கரை - 1/2 கப் 
ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன் 
பச்சை ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பிஸ்தா - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 1/2 கப் 
ரோஸ் இதழ்கள் - அலங்கரிக்க 
 
 செய்முறை:  
 
பாசுமதி அரிசியை 1/2 கப் தண்ணீரில், 1 மணிநேரத்திற்கு ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
பின்னர் அதில் ரோஸ் சிரப் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். 
 
அடுத்து அரைத்து வைத்துள்ள பாசுமதி அரிசியை, பாலுடன் சேர்த்து, தொடர்ந்து கெட்டி கெட்டியாக இருக்காதவாறு 15 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 
 
கலவையானது சற்று கேசரி போன்ற பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும். 
 
பின்பு அதன் மேல் ஏலக்காய் பொடி தூவி, கிளறி விட்டு, குளிர வைத்து, பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் ரோஜா இதழ்கள் மற்றும் பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான குலாபி ஃபெர்னி ரெடி!!!

Labels:

கோடைக்கு இதமான... கேசார் பிஸ்தா குல்பி!!!

கொளுத்தும் கோடையில் நன்கு குளுகுளுவென, ஏதாவது உடலுக்கு இதத்தைக் கொடுக்கும் ஐஸ் க்ரீம், மில்க் ஷேக், ஸ்மூத்தி மற்றும் குல்பி போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். மேலே சொன்னவற்றில் அனைவருக்கும் ஐஸ் க்ரீம், மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றை நன்கு செய்யத் தெரியும். ஆனால் குல்பியை செய்யத் தெரியுமா என்று கேட்டால், பலரும் தெரியாது என்று தான் சொல்வார்கள். பொதுவாக நாம் குல்பியை இரவில் தான் சாப்பிடுவோம். 
 
ஏனெனில் அப்போது தான் விற்றுக் கொண்டு வருவார்கள். அது வரைக்கும் நாம் அதனை சாப்பிடுவதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தெரிந்தால் எதற்கு காத்திருக்க வேண்டும். குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை கேசார், பாதாம், பிஸ்தா, மலாய், மாம்பழம், லிச்சி மற்றும் பல போன்றவை. 
 
இத்தகையவற்றில் ஏதாவது ஒன்றை வீட்டிலேயே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால், அவற்றை இரவில் என்ன எந்த நேரத்திலும் சாப்பிடலாம் அல்லவா! இப்போது அவற்றில் ஒன்றான கேசார் பிஸ்தா குல்பியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
 க்ரீம் பால் - 2 லிட்டர் 
கன்டென்ஸ்ட்டு பால் - 200 மில்லி லிட்டர் 
குங்குமப்பூ - 2 பெரிய சிட்டிகை 
பிஸ்தா - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை: 
 
முதலில் க்ரீம் பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
பின்னர் அதில் குங்குமப்பூவை போட்டு, தீயை குறைவில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
 பாலானது 2 லிட்டரில் இருந்து 1 லிட்டராக ஆன பின்பு, அதில் கன்டென்ஸ்ட்டு பால், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் பிஸ்தா சேர்த்து, ஒரு கொதி விட்டு, இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைக்க வேண்டும். 
 
பின்பு அந்த கெட்டியான பாலை, குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவே வைத்து, ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
 
 பிறகு காலையில் எழுந்து அதனை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்தால், அந்த கிண்ணமானது எளிதில் வெளியே வந்துவிடும். 
 
பிறகு என்ன, சூப்பரான கேசார் பிஸ்தா குல்பி ரெடி!!!

Labels:

Saturday, 27 April 2013

ஈஸியான... வென்னிலா ஐஸ் க்ரீம்

பொதுவாக அனைவருக்குமே ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வென்னிலா தான் பலருக்கு பிடித்தமானது. இத்தகைய வென்னிலா ஐஸ் க்ரீமை இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். இப்போது அதனை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இவ்வாறு வீட்டில் செய்வதால், பணம் மிச்சமாவதோடு, பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 
இப்பொழுது அந்த வென்னிலா ஐஸ் க்ரீமை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

homemade vanilla ice cream recipe
தேவையான பொருட்கள்: 
பால் - 2 கப் 
பால் பவுடர் - 1 கப் (இனிப்பில்லாதது) 
ப்ரஷ் க்ரீம் - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் ( அரைத்து பொடி செய்தது) 
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன் 
செய்முறை:  
முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாலுடன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 பின்னர் அதனை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு, ப்ரீசரில் நன்கு கெட்டியாகும் வரை வைக்க வேண்டும். 
பிறகு அது கெட்டியானதும், அதனை வெளியே எடுத்து, வேறொரு பௌலில் போட்டு, லேசாக உருகிய நிலையில் அதனை பரிமாறினால், எளிமையான வென்னிலா ஐஸ் க்ரீம் ரெடி!!!

Labels:

Sunday, 7 April 2013

வாழைப்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி

ஸ்மூத்தி என்பது புத்துணர்ச்சியூட்டும் ஆரோக்கிய பானங்களில் ஒன்று. இவற்றில் பல சுவைகள் மற்றும் ஃப்ளேவர்கள் உள்ளன. அதிலும் வாழைப்பழம் உடலுக்கு சக்தி கொடுக்கும் பழங்களில் முக்கியமானவை. மேலும் இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே அத்தகைய வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ருசியாக சாப்பிடும் வழியில் ஒன்றான ஸ்மூத்தியாக செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். 
 
அதிலும் இந்த பானம் கோடையில் குளிர்ச்சியைத் தரும் ஒரு பானமாக இருக்கும். சரி, இப்போது அத்தகைய வாழைப்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

delicious banana ice cream smoothie
தேவையான பொருட்கள்: 
 
வாழைப்பழம் - 2 
ஆரஞ்சு ஜூஸ் - 1/3 கப் 
வென்னிலா ஐஸ் க்ரீம் - தேவையான அளவு 
வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன் 
பால் - 1 கப் 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் வாழைப்பழத்தை தோலுரித்துவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அந்த வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு, அத்துடன் ஐஸ் க்ரீம், பால், ஆரஞ்சு ஜூஸ், ஐஸ் கட்டிகள் மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும்.
 
 பின்பு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான வாழைப்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

Friday, 5 April 2013

மாம்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி

கோடைகாலத்தில் மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் மலிவான விலையில் அதிகம் கிடைக்கும். ஆகவே அத்தகைய மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, சிலர் ஜூஸ் போன்று செய்து குடிப்பார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக பானங்களின் ஒன்றான மாம்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தியை செய்து குடிக்கலாம்.

இதன் சுவை மில்க் ஷேக் போன்று இருக்கும். மேலும் வெயிலில் சுற்றி வீடு திரும்புபவர்கள், இந்த ஸ்மூத்தியை செய்து குடித்தால், இதமாக இருக்கும். சரி, அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

cream smoothie
தேவையான பொருட்கள்:  
 
மாம்பழம் - 5-6 
குளிர்ந்த பால் - 1 1/2 கப் 
சர்க்கரை - 6-7 டேபிள் ஸ்பூன் (தேவையான அளவு) 
வென்னிலா ஐஸ் க்ரீம் - 2 ஸ்கூப் 
தண்ணீர் - சிறிது (வேண்டுமென்றால்) 
 
செய்முறை: 
 
முதலில் மாம்பழத்தின் தோலை உரித்து விட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதில் சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் அடிக்க வேண்டும். அடுத்து, அத்துடன் பால் மற்றும் ஐஸ் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை வடிகட்டி பரிமாறினால், மாம்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

Wednesday, 13 February 2013

கசாட்டா

 

தேவையானவை:

பிஸ்தா - கால் கிலோ
சர்க்கரை - அரை கிலோ
குளுக்கோஸ் லிக்யூட் - 100 கிராம்
முந்திரி - அரைகிலோ

செய்முறை:

பிஸ்தாவை நன்றாக கொதித்த தண்ணீரில் போடவும்.

5 நிமிடம் கழித்து பிஸ்தாவை எடுத்து தேய்த்தால் தோல் தனியாக வந்துவிடும்.

பின்பு அதை மைபோல அரைக்கவும். இரும்பு கடாயில் பிஸ்தாவுடன் சர்க்கரை கொட்டி கிண்டவும்.

தீயை மிதமாக வைத்து கலவை இறுகும் வரை கிளறி ஒட்டாத பக்குவத்துக்கு வந்ததும் பாத்திரத்தில் கொட்டி ஒரே உருண்டையாக்கவும்.

சூடு ஆறியதும் 10 கிராம் அளவில் சிறு உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரியுடன் குளுகோஸ் லிக்விட் கலந்து (ஒட்டாமல் இருக்க நெய் தடவிக் கொள்ளவும்.)

அதை சிறு உருண்டைகளாக உருட்டவும். தேவையென்றால் க்ரீன் கலர் சேர்க்கலாம்.

முந்திரி உருண்டை மேல் பாதாம் விழுதைப் பூச வேண்டும். இப்போது ஒரு முழு உருண்டை க்ரீன் கலரில் இருக்கும். உருண்டையை நடுபாகத்தில் வெட்டி இரண்டாக பிரித்தால் சுவையான கசாட்டா ரெடி.

Labels:

ஆப்பிள் ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள்:

தோல் சீவி, விதை நீக்கிய பெரிய ஆப்பிள் பழம் - 2
சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி
பால்பவுடர் - 4 மேஜைக்கரண்டி
மில்க் கிரீம் - 1 கப்
பால் - 1 கப்
கிராம்பு - சிறிதளவு (பொடியாக்கப்பட்டது)
முந்திரி - 8

செய்முறை

மேலே சொல்லப்பட்ட ஆப்பிள் பழத்தையும், சர்க்கரையையும், பால் பவுடரையும், மில்க் கிரீமையும், பாலையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து-முட்டையை அடிப்பது போல் அடித்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் கிராம்புத் தூளையும், முந்திரிப் பருப்பையும் கூடச் சேர்த்துக் கொள்ளவும்.


ஒன்றில் ஒன்று நன்றாக இவை கலந்தவுடன் இதனை ஐஸ் ஆகக்கூடிய ட்ரேக்களில் ஊற்றி, அதனை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடவும். இரண்டு மணி நேரம் கழித்து இதனை வெளியில் எடுத்து விடவும்.

மிகவும் சுவையாக இருக்கும்.

Labels:

Tuesday, 12 February 2013

ஃப்ரூட் கஸ்டர்டு

Fruit Custard - Vegetarian - Cooking Recipes in Tamil

தேவையானவை 

பால் - 1 லிட்டர்
வெனிலா கஸ்டர்டு பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பழக்கலவை - 2 கப் (பொடியாக நறுக்கியது)
(ஆப்பிள், பேரிக்காய், சப்போட்டா, வாழைப்பழம், ஆரஞ்சு)

செய்முறை:

பழக்கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள்.

 காயும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து, கொதிக்க விடுங்கள்.

தனியாக எடுத்து வைத்திருக்கும் அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங்கள்.

ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவையைச் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள்.

Labels:

குல்ஃபி

Kulfi - Kulpi Ice Cream - Indian Popular Ice Cream - Cooking Recipes in Tamil

தேவையானவை 

பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி - 20
பாதாம் - 20
ஸ்வீட் பிரெட் - 4 துண்டங்கள்
ஜெலட்டின் - 2 டீஸ்பூன்
(சர்க்கரை போல இருக்கும்)
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிடுங்கள். பாலை அடுப்பில் வைத்து, பாதியாகும்வரை நன்கு காய்ச்சுங்கள் பின்னர் சர்க்கரை சேருங்கள்.

சர்க்கரை கரைந்து, மீண்டும் கொதிக்கும் போது, பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

பாதாமை, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, தோலை உரித்தெடுங்கள்.

முந்திரி, பாதாமை சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு அரையுங்கள். அரைத்த விழுதைக் காய்ந்த பாலில் சேருங்கள். கால் கப் தண்ணீரில் ஜெலட்டினைக் கரைத்து, பால் கலவையில் சேருங்கள்.

ஏலக்காய்த் தூளையும் கலந்து கொள்ளுங்கள். ஆறியதும், குல்ஃபி மோல்டுகள் அல்லது கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து, நன்கு குளிர்ந்ததும் பரிமாறுங்கள்.

Labels:

மாம்பழ ஐஸ்க்ரீம்

Mango Ice Cream - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 4
சர்க்கரை - 300 கிராம்
பால் (காய்ச்சி ஆறியது) - 2 ஸ்பூன்
திராட்சை - 2 ஸ்பூன்

செய்முறை:

நன்கு கனிந்த புளிப்பில்லாத மாம்பழங்களை தோல் சிவி, சதை பாகத்தை துண்டு செய்து சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் மாம்பழம், க்ரீம் போன்று ஆகி விடும்.

பாலும் தேவைப்பட்டால் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும்.

இதை குளிர வைத்து கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி, திராட்சை தூவி ஸ்பூன் போட்டு பறிமாற வேண்டும்.

Labels:

Monday, 11 February 2013

மில்க் ஐஸ்க்ரீம்

Milk Icecream - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்

பால் - 500 மி.லி
மில்க் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - 1 1/2 ஸ்பூன்
ஜி.எம்.எஸ் - 3/4 ஸ்பூன்
சர்க்கரை - 10 ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் 1/4 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மில்க் பவுடர், கார்ன்ஃப்ளார், ஜி.எம்.எஸ் ஆகியவற்றைக் கரைத்து சர்க்கரையைச் சேர்த்து, சற்றே ஆற வைத்துள்ள பாலுடன் இவற்றைச் சேர்த்து கலக்கி ஐஸ் ட்ரேயில் 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.

 பாதி கெட்டி ஆனவுடன் மிக்ஸியில் ஊற்றி அடித்து மறுபடியும் ட்ரேயில் ஊற்றி, மேலும் 2 மணி நேரம் குளிர விட்டு கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள்.

சுவையான மில்க் ஐஸ்க்ரீம் தயார்.

Labels:

Sunday, 10 February 2013

வெண்ணிலா ஐஸ்கிரீம்

Vannila Ice cream - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:

கிரீம் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 4 கப்
கல்லுப்பு - 1 கப்
ஜிப்லாக் பை or கெட்டியான பிளாஸ்டிக் பை - 1
டக்ட் டேப் or செல்லோ டேப் - 1
ஹார்லிக்ஸ் பாட்டில் or டப்பா - 1

செய்முறை:

பால், கிரீம், வெண்ணிலா எஸ்ஸென்ஸ், சர்க்கரை எல்லாவற்றையும் பிளாஸ்டிக் பையில் ஊற்றவும்.

பிறகு ஒரு நல்ல இறுக்கமாக பிடிக்கும் டேப் கொண்டு மூடி ஒட்டவும். இது இறுக்கமாக பிடிக்க வேண்டும்.

 ஏனென்றால் இதை நன்றாக உலுக்கும்போது பால் வெளியே வந்து விடும். இப்போது டப்பாவில் இந்த பிளாஸ்டிக் பையை போட்டு அதன் மேல் ஐஸ்கட்டிகள், உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாக மூடவும். இதையும் தண்ணீர் வெளிவராமல் இருக்க டேப் போட்டு ஒட்டலாம்.

 இப்போது நன்றாக பத்து நிமிடம் குலுக்கவும். அதிகநேரமும் குலுக்கலாம். பிறகு இந்த டப்பாவைத் திறந்து, பையை எடுத்து அதை ரெஃப்ரிஜ்ரேட்டரில் இருக்கும் ஃபிரீஜரில் வைக்கவும்.

அரை மணிநேரம் கழித்து இந்தப் பையை திறந்து பாருங்கள். சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி.

Labels:

Tuesday, 5 February 2013

மால்ட் புட்டிங்

Healthy Diet: Malt Pudding - Cooking Recipes in Tamil
அவசர யுகத்தில் பற பறக்கும் குழந்தைகளுக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லையே என புலம்பும் தாய்மார்களே... காலையில் சாப்பிடாமல் பறக்கும் குழந்தைகளுக்கு சட்டென சாப்பிட கொடுக்கலாம். மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து ட்யூஷன் அல்லது விளையாட்டு வகுப்புக்குப் போகும் குழந்தைகளுக்கு இது ஒரு போஷாக்கான வரப்பிரசாதம்!

தேவையான பொருட்கள்:

கலவை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியாகக் கரைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் - 2 டீ ஸ்பூன்
நெய் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் வாழைப்பழம் - 1 அல்லது முட்டை 1
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* அதிகம் பழுக்காத வாழைப்பழத்தை வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கவும்.
* மாவைத் திட்டமாக நீர் சேர்த்துக் கெட்டியான கரைசலாக்கவும்.
* ஒரு கப் தண்­ணீரைக் கொதிக்கவிடவும்.
* அதில் வெல்லக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும்.
* கொதிக்கும்போது அத்துடன் மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.
* ஏலப்பொடி சேர்க்கவும்.
* கெட்டியாகும்போது பாதி நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.
* வெந்த பக்குவத்தில் மீதி நெய்யை விட்டுக் கிளறவும்.
* இறக்கிய உடன் அகலமான தட்டில் கொட்டி அதன் மீது வாழைப்பழத் துண்டங்களை வைத்து உடனடியாக மூடி வைக்கவும்.
* முட்டை சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் ஸ்லைஸ் செய்து அந்த வில்லைகளை வாழைப்பழத் துண்டங்களுக்குப் பதிலாக வைத்து அலங்கரிக்கலாம்.
* அல்லது ஒரு வாழைப்பழத் துண்டம் மற்றும் ஒரு முட்டை ஸ்லைஸ் என்றும் அலங்கரிக்கலாம்.
* ஆறிய பிறகு நல்ல மணத்துடன் சுவையான சத்துமிக்க இனிப்பு தயார்!
* கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் முறையே இருப்பதால் முழு உணவை உண்ட திருப்தி, உடனடி சக்தி!

Labels:

அன்னாசிப்பழ புட்டிங்

Pineapple Pudding - Cooking Recipes in Tamil
சுட்டெரிக்கும் வெயிலில், நம்முடைய உடலுக்கு குளிர்ச்சி தேவைப்படுகிறது. மனமும் அதையே நாடுகிறது. ஜில்லுனு ஒரு பைன்ஆப்பிள் புட்டிங் செய்து சாப்பிட்டீங்கன்னா மனசுக்கு இதமா இருக்கும். நாக்கின் வறட்சி நீங்கும். உடலில் புது தெம்பும் பிறக்கும்.
தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் - 1
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
பால் பவுடர் - 7 டேபிள் ஸ்பூன்
சீனி - 7 டேபிள் ஸ்பூன்
பொடித்த முந்திரி பருப்பு + முந்திரி பழம் - 1/4 கப்
அன்னாசி எஸன்ஸ் - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* அன்னாசிப்பழத்தை தோல் சீவி மிகவும் சிறு துண்டுகளாக வெட்டவும்.
* கஸ்டர்ட் பவுடரினுள் 5 டேபிள் ஸ்பூன் தண்ணீ­ர் விட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
* அதனுள் சீனியை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடிக்கவும்.
* அதனுள் சிறிது சிறிதாக பால் பவுடரையும் சேர்த்து அடிக்கவும்.
* பின்னர் இக்கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பொடித்த முந்திரி பருப்பு, முந்திரி பழம் அன்னாசி எஸன்ஸ் போட்டு கலக்கவும்.
* பின்னர் இக்கலவையில் சிறிதை ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் அன்னாசி துண்டுகளைப் போடவும். இவ்வாறு மாறி மாறி ஊற்றவும்.
* பின்னர் இதனை ஆவியில் வைத்து அவித்தெடுக்கவும். (அல்லது 10 நிமிடங்கள் மைக்ரோ அவனில் பேக் செய்யவும்)
* சுவையான அன்னாசி புட்டிங் தயார். இதனை குளிர வைத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.

குறிப்பு:
அன்னாசிப்பழத்திற்கு பதிலாக ஆப்பிள், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி. வாழைப்பழம் என ஏனைய பழங்களும் அதற்கேற்றவாறு பழ எஸன்ஸூம் சேர்க்கலாம். அசைவம் உண்பவர்கள் கஸ்டர்ட் பவுடருக்கு பதிலாக 1 முட்டையும் சேர்க்கலாம்

Labels:

ஈஸி ஐஸ்க்ரீம்

Homemade Ice Cream - Cooking Recipes in Tamil
கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க.........!

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
சர்க்கரை - தேவைக்கேற்ப
சோள மாவு - 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் - 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - சிறிது

செய்முறை:
* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.
* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
குறிப்பு:
நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

Labels:

வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம்

Banana-Cashew Ice Cream - Cooking Recipes in Tamil
கோடை ஆரம்பிச்சாச்சு... இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே.....

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்புகள் - 1/4 கிலோ
ஆப்பிள் சாறு - 1 கப்
பழுத்த வாழைப்பழங்கள் (பச்சைநாடன் போலப் பெரியது) - 3
பால் - 1 கப்
தேன் - 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டீ ஸ்பூன்

செய்முறை: 

* முந்திரிகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக்கொண்டு அதனுடன் ஆப்பிள் சாறு ஊற்றி, கலவை மாவாக, நுண்ணியதாக அரைபடும் வரை அரைக்கவும்.
* இத்துடன் வாழைப்பழம், பால், தேன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் போட்டு மென்மையானதாக அரைத்துக்கொள்ளவும்.
* இதனை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு ஃப்ரீசரில் உறைய விடவும்.
* இரவு முழுவது உறைந்த பின்னர், ஐஸ்கிரீம் கோப்பைகளில் போட்டு பறிமாறலாம். வெய்யிலுக்கு சாப்பிட இனிது.

Labels:

தேன் ஐஸ்கிரீம்

Honey Ice Cream - Cooking Recipes in Tamil
கோடை ஆரம்பிச்சாச்சு... இனி என்ன வீட்டிலேயே குளு குளு ஐஸ் க்ரீமா செஞ்சு சூப்பரா சாப்பிடலாமே.....

தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளைக்கரு - 5
பால் - 1/2 லிட்டர்
கிரீம் - 1/4 லிட்டர்
தேன் - 1-1/2 கப்
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

* முட்டையையும் தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்.
* பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும்.
* அதன் பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும்.
* இதில் பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும்.
* இதனை தீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும்.
* இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும்.
* அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

Labels:

Monday, 4 February 2013

பப்பாளி ஆப்பிள் ஐஸ்கிரீம்

 
 தேவையான பொருட்கள்

வெனிலா ஐஸ்கிரீம் (சிறிய கப்) - 1
பப்பாளி - 1 துண்டு, ஆப்பிள் - 1 துண்டு
வாழைப்பழம் - ஒரு பாதி
தேன் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன்.



 செய்முறை

பழங்களின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.

ஐஸ்கிரீமுடன் தேன், சர்க்கரை,
பழத்துண்டுகள் சேர்த்து கலந்து உடனே பரிமாறவும்.

 குளிர வைத்தும் சாப்பிடலாம்.

Labels: