Saturday, 30 March 2013

162 ) Nesamulla Vaan Sudare - நேசமுள்ள வான் சுடரே

என்னை புரிஞ்சிக்கோடா ப்ளீஸ்...உங்கள் துணையின் எதிர்பார்ப்புகள் இதுதாங்க!!

ஒருவரின் வாழ்க்கையை மிகவும் அழகாக்குவது காதல் தான். அதிலும் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள், சிறந்தவராகவும் நன்கு புரிந்து கொள்பவராகவும் இருந்துவிட்டால், அதைவிட அழகான வாழ்க்கை வேறு எதுவும் கிடையாது. அனைவருமே தனக்கு வருபவர், இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டு மனதில் வைத்திருப்பார்கள். அத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது போல் கிடைத்துவிட்டால், அதைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது என்றெல்லாம் தோன்றும். 
 
இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும். அதிலும் காதல்/திருமணம் என்று வந்துவிட்டால், கண்டிப்பாக இருக்கும். இப்போது அனைவரது மனதிலும் இருக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் சிலவற்றை என்னவென்று பார்ப்போமா!!!
 
காதல் 
 
அனைவரது மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளில் முக்கியமானது காதல் தான். தனக்கு வருபவர் தன் மீது சொல்ல முடியாத அளவிலும், என்றும் மறக்க முடியாத அளவிலும் காதல் செய்ய வேண்டும். மேலும் அத்தகைய காதலை அழகான வழியில் வெளிப்படுத்தி, இருவருக்குள் இருக்கும் உறவை நன்கு வலுபடுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

புரிதல் 
 
நல்ல புரிதல் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே துணையாக வருபவர், தன்னை, தன் ஆசை, விருப்பம் போன்றவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
 
அக்கறை 
 
 நல்ல ஆரோக்கியமான உறவில், கணவன் மனைவி/ காதலர்கள் இருவருக்கும், ஒருவர் மீது ஒருவர் நல்ல அக்கறையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையானது இருக்கும். இந்த உணர்வு அனைவருக்கும் பொதுவாக இருப்பவையே. இத்தகைய அக்கறையை தமக்கு வரும் துணை, நம்மீது வைத்திருந்தால், வாழ்வில் எத்தகைய கஷ்டம் வந்தாலும், தம்மை பார்த்துக் கொள்ள ஒருவர் உள்ளார் என்ற எண்ணத்தில் மன உறுதியுடன் செயல்பட்டு நன்கு முன்னேற முடியும்.
 
நம்பிக்கை 
 
 உறவுகளில் மிகவும் முக்கியமானவைகளில் ஒன்று தான் நம்பிக்கை. ஒருவர் மீது நம்பிக்கை இருந்தால், வாழ்நாள் முழுவதும் சந்தோஷம் நிலைக்கும். அதுவே கொஞ்சம் குறைந்ததாலும், அவை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். எனவே அனைவரும் தனக்கு வரும் துணை தம் மீது முதலில் நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள்.
 
மதிப்பு 
 
மற்றும் மரியாதை ஒவ்வொருவருமே தன் துணையிடம் ஒருவித மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அதிலும் அத்தகைய மரியாதையானது, தனக்கு வரும் துணை ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் அதற்கு தன்னையும் மதித்து, கலந்தாலோசித்து பின் எடுக்க வேண்டும் என்றது தான்.

ரொமான்ஸ் 
 
 இரு உள்ளங்களையும் பிரியாமல் வாழ்நாள் முழுவதும் இணைப்பதில் ரொமான்ஸ் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த ரொமான்ஸ் தான் ஒருவரின் எனர்ஜி என்று சொல்லலாம். இத்தகைய எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவரது மனதிலும் இருக்கும்.

பாராட்டு  
 
பாராட்டு பெறுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அத்தகைய பாராட்டுக்களை தனக்கு வரும் துணையின் வாயினால் பெற்றால், அது ஒருவரின் சுயமரியாதையை மேலும் வலுப்படுத்தும். இதுவும் எதிர்பார்ப்புக்களில் ஒன்றாகும்.

நட்பு 
 
கணவன் மனைவியாக இருந்தாலும், அதில் ஒரு நட்பு இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால், அது தான் என்ற அகங்காரம் மற்றும் அடிக்கடி ஏற்படும் பெறும் மோதல்களை தவிர்க்க உதவியாக இருக்கும். மேலும் யாராக இருந்தால், தனது கஷ்டம், சந்தோஷம் போன்றவற்றை நண்பர்களிடம் தான் பகிர்ந்து கொள்ளோம். அத்தகைய ஒரு நல்ல நண்பனாக இருந்தால், மனதில் நினைப்பது தவறோ சரியோ அனைத்தையும் மனம் விட்டு பேச வெளிப்படையாக முடியும். ஒருவரின் கனவு மற்றும் கற்பனைக்கு இவ்வுலகில் பஞ்சமே இல்லை. அதிலும் தனக்கு வாழ்க்கை துணையாக வருவோரைப் பற்றி எத்துனை எதிர்பார்ப்புகள் இருந்தால், மேற்கூறியவை மிகவும் அடிப்படையானது. எனவே இதனை புரிந்து கொண்டு, செயல்பட்டால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Labels:

நட்பு முறியப் போவதற்கான சில அறிகுறிகள்!!!

உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. "தோள் கொடுப்பான் நண்பன்" என்று சும்மாவா சொன்னாங்க... ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். 
 
இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் 'தனக்கு மட்டுமே சொந்தம்' என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம்.

signs your friendship is drifting apart
உறவுகளில் பிரிவு இருப்பது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் எந்த ஒரு உறவிற்கும் இவ்வுலகில் பிரிவு இருந்தாலும், நட்புக்கு பிரிவு இருக்காது என்று நினைக்கிறோம். உண்மையில் அத்தகைய உறவிலும் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது. அத்தகைய பிரிவு வெளிப்படையாக தெரியாது. ஒருசில அறிகுறிகள் மூலமே தெரியும். மேலும் நண்பர்கள் வேண்டுமென்றே பிரிய நினைப்பதில்லை. இதற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் நம்மை விட்டு விலக நினைக்கிறார்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அது என்ன அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
 * எந்த நேரத்திலும் தம்முடன் இருந்து, சந்தோஷமாக பேசிக் கொண்டு இருப்பதை விரும்பிய நண்பன், திடீரென்று வேலை இருக்கிறது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு சென்றால், அவர் தம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் உண்மையில் வேலை இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் அவ்வாறு சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 
 
 * இதுவரை நண்பனாக இருந்து, எப்போதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசியவர்கள், திடீரென்று அதனை தவிர்த்து, வேறு ஏதாவதொன்றிற்கு சம்பந்தமே இல்லாமல், தம்மை தவிர்த்து முக்கியத்துவம் கொடுத்தால், அதனைக் கொண்டும் அவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்ற எண்ணத்தை புரிந்து கொள்ளலாம். 
 
* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தினம் தினம் ஒரு நண்பர்கள் கிடைப்பார்கள். அவ்வாறு கிடைத்துவிட்டால், இதுவரை எங்கு சென்றாலும், அழைக்காமல் செல்லாத நண்பன், சிறிதும் அழைக்க வேண்டும் என்று எண்ணாமல், அடிக்கடி புது நண்பர்களுடன் தனியாக செல்வதைக் கொண்டும், பிரிய நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் அவசரப் பட்டு நண்பர்களை தவறாக நினைத்து பிரியாமல், அவர்களுடன் மனம் விட்டு பேசி கலந்து ஆலோசித்து, அதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொண்டு, பின் எந்த முடியும் எடுக்க வேண்டும்
 
* உறவுகளுக்குள் பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதற்கு பொறாமையும் ஒரு காரணம். அத்தகைய பொறாமையானது புனிதமான நட்புறவைக் கூட பிரித்துவிடும். அதிலும் பொறாமை, ஒரு பெண்ணால் கூட பிரிந்து விடும். ஆம், தாம் காதலிக்கும் பெண்ணையே, தனது நண்பனும் காதலித்து, அது அந்த பெண்ணிற்கு பிடிக்க, இதுவரை நெருக்கிய நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு பெண் மீது கொண்ட அன்பால் ஒருவரை ஒருவர் வெறுத்து, பிரிந்து விடுகின்றனர். அடுமட்டுமின்றி வேறு ஏதாவது புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டாலும் பொறாமையானது ஏற்படும். இத்தகைய பொறாமை வெளிப்படையாக தெரியாது. 
 
ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்களில் நன்கு புலப்படும். இதை வைத்தும் நட்புறவு முறியப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இவையே சில நட்பு பிரிவதற்கு காரணங்கள் மற்றும் அறிகுறிகள். வேறு ஏதாவது நட்பை முறிக்கும் காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels:

அடிக்கடி சண்டை வருதா? கொஞ்சம் ப்ரேக் எடுங்க...

எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும். இத்தகைய சண்டைகளானது, எவ்வளவு காதல் உள்ளதோ, அந்த அளவில் சண்டைகளும் இருக்கும். ஏனெனில் "எங்கு காதல் அதிகம் இருக்கிறதோ, அங்கு தான் கோபமும், குணமும் அதிகம் இருக்கும்" என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். எனவே காதலர்களோ அல்லது திருமணமாவர்களோ சண்டை போட்டாலும், அப்போது ஒரு சிறிய ப்ரேக் எடுப்பது ஒரு நல்ல பலனைத் தரும். 
 
ஏனென்றால், சண்டைகள் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டும், சில சமயங்களில் புரிந்து கொள்ளாததாலேயே ஆகும். மேலும் செய்த தவறை உணர்ந்து கொள்ளாமல் இருப்பதும் சண்டைக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, ஒருவர் சிறு தவறு செய்துவிட்டு அதனை மற்றவர் சுட்டிக் கூறும் போது, தவறை ஒப்புக் கொள்ளாமல், அந்த நேரத்தில் ஏற்படும் கோபத்தால், சொல்லக்கூடாத வார்த்தைகளை தெரியாமல் சொல்லிவிட்டு, பின் இருவரும் நாள் கணக்கில் பேசிக் கொள்ளாமல் இருப்பார்கள். இந்த மாதிரியான சண்டைகள் தான், தற்போது பெரும்பாலானோரின் வாழ்க்கையில் நிலவுகிறது.

a small break strong relationship
இதனால் கோபத்தால் ஏற்படும் சிறு சண்டைகளால், பலருக்கு விவாகரத்து கூட ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான சூழ்நிலையைத் தவிர்க்க இருவரும் சிறிது நாட்கள் பிரிந்து இருப்பது, காதல் வாழ்க்கையை வளமாக வைத்துக் கொள்ளும். மேலும் இருவரும் பிரிந்து இருக்கும் போது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சில உள்ளன. அவை: 
 
 * பிரிந்து இருக்கும் போது, ஒருவரை ஒருவர் எந்த காரணம் கொண்டும் சந்திக்கவோ, போனில் பேசவோ கூடாது. இதனால் எந்த நேரத்திலும் சண்டையானது பெரியதாக மாறலாம்.
 
 * குறிப்பாக, யாரிடமும் இந்த பிரச்சனையைப் பற்றி பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் அவ்வாறு பகிரும் போது, மற்றவர்கள் அவர்களது கருத்துக்களை சொல்ல பின், அதுவே இருவரையும் பிரித்துவிடும். 
 
பிரிந்து இருப்பதால் ஏற்படும் நன்மைகள்: 
 
* பிரிந்து இருக்கும் போது தான், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக தவறு யார் செய்தார்களோ, அதை பிரிந்திருக்கும் காலத்தில் உணர முடியும். 
 
* மேலும் இந்த பிரிவு காலங்களில் இருவருக்கும் இடையில் காதலானது அதிகம் பெருக்கெடுக்கும். ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருக்கும். பின் என்ன, கோபம், சண்டைகள் அனைத்தும் நீங்கி, இருவரும் அமைதியான காதல் வாழ்க்கையை வாழலாம்.

Labels:

ஆண்களுக்குப் பிடிக்காத சில புகழ்ச்சிகள்!!!

அனைவரும் எப்போதும் அவரவர் துணையிடமிருந்து நிறைய உதவிகளை பெறுவோம். அவ்வாறு பெரும் போது, அவர்கள் உதவியதற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புவோம். ஆனால் அவ்வாறு தெரிவிக்கும் போது, சில செயல்களை செய்வதால் வாழ்த்தும் பாராட்டுக்களானது, சிலசமயங்களில் கேட்கும் போது கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும். அதற்காக புகழக்கூடாது என்பதில்லை. ஆண்களுக்கு புகழ்ச்சிகள் சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. சிலசமயங்களில் மட்டும் தான் பிடிக்கும். 
 
பெரும்பாலான ஆண்களுக்கு தேவையில்லாத புகழ்ச்சிகள் பிடிக்காது. அதிலும் படுக்கையறையில் இருக்கும் போது, சந்தோஷப்படுத்துவதில் சூப்பர் என்று சொன்னால், அது அவர்களை இன்னும் உற்சாகமூட்டி, அந்த உறவை இன்னும் பலப்படுத்தும். ஆனால், அதையே அவர்கள் ஏதாவது சிறு விஷயமான, துணியை மடித்து வைக்கும் போது, பாராட்டினால், அது அவர்களுக்கு கோபத்தை உண்டாக்கும். சரி, இப்போது ஆண்களுக்கு எந்த விஷயங்களில் எல்லாம் பபாராட்டுக்கள் பிடிக்காது என்று பார்ப்போமா!!!

compliments men hate hear
* பொதுவாக பெண்களுக்கு புகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும். அதிலும் துணை அவளிடம், "நீ மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பதால் தான், உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்லுட்ம போது, அது பெண்களுக்கு பெரும் கௌரவமாக இருக்கும். ஆனால் அதையே ஆண்களிடம் சொல்லச் சொல்ல, அது சிலசமயங்களில் அவர்களின் குணத்தையே மாற்றிவிடும். ஏனெனில் ஆண்கள் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். எனவே முடிந்த அளவில், இந்த மாதிரி சொல்வதை தவிர்க்கவும். 
 
* "நீ ரொம்ப எமோசனல்" என்று சொல்வது. பொதுவாக ஆண்கள் அவர்களது உணர்ச்சியை பெரும்பாலும் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் அவ்வாறு, அவர்கள் ஒருமுறை உங்கள் முன் அழுதுவிட்டாலும், அதை வைத்து, அவர்களை, மற்றவர்கள் முன், சொன்னால், அது அவர்களை மனதில் காயப்படுத்தும். எனவே எப்போதும் வெளியே மற்றவர்கள் முன், இவ்வாறு சொல்வதை தவிர்க்க வேண்டும்.
 
 * "உன் தொப்பை சூப்பராக இருக்கு" என்பது. யாராக இருந்தாலும், ஒருவரின் உடல் தோற்றத்தைப் பற்றி வித்தியாசமாக கிண்டல் அடிப்பது போன்று சொன்னால், அது அவர்களை வருத்தமடையச் செய்வதோடு, ஒருவித வெறுப்பையும் உண்டாக்கும். ஆகவே மற்றவர்கள் முன்பு, இவ்வாறு கிண்டல் அடிப்பது போன்று புகழ்வதை தவிர்க்கவும். 
 
 * " உன்ன மாதிரி யாரும் வீட்டு வேலை செய்யமாட்டாங்கடா செல்லம்" என்று கூறுவது. பொதுவாக ஆண்கள் இத்தகைய புகழ்ச்சியை விரும்பமாட்டார்கள். முதலில் ஆண்கள் வீட்டு வேலை செய்யும் போது உதவுவதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். அதைவிட்டு, மற்றவர்கள் முன், இந்த கூற்றை கூறினால் அது அவர்களை காயப்படுத்தி, பின் அவர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்யவேமாட்டார்கள். இவையே ஆண்களுக்குப் பிடிக்காத புகழ்ச்சிகள். இதுப் போன்று நிறைய உள்ளன. அவை என்னவென்று தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels:

சந்தோஷமான திருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்!!!

திருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள் புகைப்பிடித்தலுக்கு சமமானவை. ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால், உடல் மெதுவாகவும் அமைதியாகவும் பாதிக்கப்படுகிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. தற்போது விவாகரத்தானது எளிதில் ஏற்படுகிறது. இதற்கு காரணம் ஒருவரின் குணங்கள் தான். 
 
 அத்தகைய குணங்கள் இன்றைய மக்களது மனதில் அதிகம் உள்ளது. எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. 
 
அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை. இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.

அகங்காரம் 
 
எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. முதலில் அனைவருமே "திருமணம் என்பது ஆர்வமுள்ள ஒரு விளையாட்டு. இத்தகைய விளையாட்டில் இருவருமே நன்கு விளையாடி, இருவருமே வெற்றி பெற வேண்டும்" என்று நினைக்க வேண்டும்.

சந்தேகம் 
 
சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் துணை மீது நம்பிக்கை வேண்டும்.

பேச்சு இடைவெளி 
 
தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.

நேரம் 
 
இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். எனவே எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும், துணையுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும்.

விமர்சனம் 
 
இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.
 
கெட்ட நடத்தை 
 
துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
 
குடும்ப பிரச்சனை 
 
இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்

கலாச்சார பிரச்சனை 
 
சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. இது ஒருவரது மனம் மற்றும் புரிதலை பொறுத்தது. ஆகவே அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும்

கோபம் 
 
அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.

Labels:

கே' என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்!!!

காதல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அவ்வாறு காதலில் விழுந்துவிட்டால், ஆண்களைப் பற்றி ஒருசில விஷயங்கள் சரியாக தெரியாது. பொதுவாக காதல் என்பது எதிர் பாலினத்தவர் மீது தான் ஏற்படும். ஆனால் சிலசமயம், ஒரே பாலினத்தவர் மீதும் காதல் ஏற்படும். உதாரணமாக, ஆண்களுக்கு ஆண்கள் மீதே ஏற்படும். இவ்வாறு ஒரு ஆண் மற்றொரு ஆணின் மீது ஆசைப்பட்டால், அதற்கு 'கே' என்று அர்த்தம். 'கே' என்பது, பார்ப்பதற்கு ஆண்/பெண் போன்று இருப்பார்கள், ஆனால் அவர்களின் நடவடிக்கை எதிர் பாலினத்தவர்களின் நடவடிக்கைகள் மனதில் இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்ள். இது ஒரு இயற்கையான ஒன்று தான். 
 
ஆனால் அத்தகையவர்கள் இயற்கையாகவே அவ்வாறு இருப்பதோடு, அதை வெளிப்படையாக காண்பிக்காமல், அதை மனதில் வைத்துக் கொண்டு நடப்பார்கள். இதனால் தன்னை காதலிப்பவரோடு ரொமான்ஸ் விஷயத்தில், வெளியே டேட்டிங் செல்லும் போது பெரிய வித்தியாசங்கள் தெரிவதோடு, சண்டைகளும் ஏற்படும். இப்போது ஒரு ஆண் 'கே' என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று பார்ப்போமா!!!

signs tell he is gay
* ஒரு ஆண் எப்போதும் பெண்ணிடமிருந்து விலகிக் கொண்டே இருந்தால், நிச்சயம் திருநங்கை என்பதற்கான அறிகுறியாகும். ஆண்கள் கோபத்துடன் இருக்கும் போது மேற்கொள்ளும் விலகலானது தனியாகத் தெரியும். ஆனால் அதுவே 'கே'-யாக இருந்தால், அது தனியாகத் தெரியும். ஆகவே இதை வைத்து தெரிந்து கொள்ளலாம். 
 
* எங்கேனும் வெளியே செல்லும் போது அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டு மேக்-கப் செய்வது, அதிக நேரம் குளிப்பது, கண்ணாடி முன்பு முகத்தை அழகு பார்ப்பது போன்றவை அனைத்துமே 'கே'-க்கான ஒரு அறிகுறியாகும். மேலும் அவர்களது ஆடைகளைப் பார்த்தாலும், சற்று பெண்கள் அணிவது போன்றே இருக்கும்.
 
 * அந்த மாதிரியான படங்களை பார்க்க விரும்பமாட்டார்கள். குறிப்பாக ரொமான்ஸ் காட்சி படத்தில் போனாலும், மற்ற ஆண்களைப் போல் அதை அவ்வளவு ஆர்வத்துடன் பார்க்காமல், வேறு ஏதாவதொன்றில் கவனத்தை செலுத்துவார்கள் அல்லது தூங்குவார்கள். எனவே இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். 
 
* காதல் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று தான் ரொமான்ஸ். ஆனால் 'கே'-யாக இருந்தால், அவர்கள் பெண்களுடன் ரொமான்ஸ் செய்வதை விட, ஆண்களுடன் ரொமான்ஸ் செய்வதை விரும்புவார்கள். சொல்லப்போனால், ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். 
 
* எவ்வளவு தான் அழகான பெண்கள் அவர்களுடன் பழகினாலும், அவர்களை பார்க்கக்கூட மாட்டார்கள். மேலும் எவ்வளவு தான் செக்ஸியாக உடை அணிந்து வந்து பேசினாலும், அவர்களிடம் மற்ற ஆண்களைப் போன்று நடந்து கொள்ள மாட்டார்கள். சொல்லப்போனால், ஜொல்லு என்ன, சைட் கூட அடிக்கமாட்டாங்கப்பா! 
 
* எங்காவது வெளியே சென்றால், அங்கு பெண்களை தவிர, ஆண்களையே அதிகமாக நோட்டம் விடுவார்கள். மேலும் அவர்களது ஷூ, சட்டை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றை பற்றியே பேசுவார்கள். இதற்காக ஆண்கள் பேசவே மாட்டார்களா என்று கேட்கலாம். ஆனால் 'கே'-யாக இருந்தால், அவர்களது பேச்சில் நன்கு வித்தியாசமானது தெரியும்.

Labels:

வார இறுதி நாட்களை காதல் மிகுந்ததாக மாற்றுவது எப்படி?

அன்றாட வேலை செய்து வார இறுதிக்காக காத்திருந்து ஓய்வு எடுப்பது என்பது வழக்கமான ஒன்று. மேலும், வார இறுதியில் ஒரேமாதிரியாக வீட்டில் ஓய்வு எடுப்பதை விட வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு, தங்கி வருவது போல் ஒரு திட்டத்தை தீட்டி, சுகமான ஒரு காதல் வாரமாக மாற்றலாம். இவ்வாறு திட்டம் செய்யும் போது, இருவருக்கிடையில் காதல் அதிகரிப்பதோடு, வேலைப் பளுவினால் ஏற்படும் மன அழுத்தமும் குறைந்து, மனம் அமைதியாக இருக்கும். 
 
மேலும் இந்த முறை சற்று வித்தியாசமான அனுபவத்தையும் தரும். அதற்கு எந்த மாதிரியான திட்டத்தை தீட்டினால் நன்றாக இருக்கும் என்று அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து பாருங்கள்.
 
how plan romantic weekend getaway
* விடுமுறை அன்று தொலைவில் எங்கோ செல்வதை விட, தங்கியிருக்கும் ஊருக்கு கொஞ்சம் அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று ஓய்வு எடுக்கலாம். எடுத்துக்காட்டாக, பார்ம் ஹவுஸ் அல்லது ரெசார்ட் போன்ற இடங்களுக்கு சென்று, சற்று வித்தியாசமாக ஓய்வு எடுக்கலாம். 
 
* அவ்வாறு செல்லும் போது பிடித்தமான உடை அணிந்து கொண்டு, விருப்பமான இசை கேட்டு அனுபவிக்க இசை குறுந்தகடுகள், பயண தின்பண்டங்கள் போன்ற பிடித்த விஷயங்களை எடுத்து செல்லவும். 
 
* செல்லும் போது மறக்காமல் தேவையான அனைத்து பொருளையும் எடுத்து செல்லவும். அவ்வாறு மறக்காமல் எடுத்துச் செல்வதால், செல்லும் இடங்களில் பொருள் இல்லையே என்று டென்சன் அடையாமல், அந்த நாளில் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கலாம். 
 
* இப்படி செய்வது அத்தனை ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த சிறு விஷயங்கள் தான், சிறு வயதில் அனுபவித்த நினைவுகளை விட, மிகவும் சூப்பராக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 
 
* எப்படியெனில் ஆங்காங்கே வழியில் காரை நிறுத்தி சிற்றுண்டி சாப்பிடுவது, படம் பிடித்து கொள்வது போன்ற விஷயங்கள் புத்துணர்வை ஏற்படுத்தும். சாந்தத்திற்கு முக்கிய முன்னுரிமை கொடுத்து ஒருவரை ஒருவர் காதல் செய்து அனுபவியுங்கள். 
 
 * தங்க செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் ஓரம் நடந்து செல்லுதல், இயற்கையை ரசிப்பது, பறவைகளை கண்டு மகிழ்வது, கை கோர்த்து தெருவில் நடப்பது என அன்றைய தினத்தை அனுபவிக்கவும். இல்லையெனில் மனதை அமைதிப்படுத்த, படுக்கை அறையில் இருந்து ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இயற்கையின் அழகை ரசிக்கவும். 
 
* உறவின் பிணைப்பில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவும். மேலும் உறவை தொடர்ந்த ஆரம்ப நாட்களை பற்றி பேசி உங்களை உணர்ந்து கொள்ளவும். பொறுப்புகள், நிதி விவகாரங்கள், முந்தைய சண்டை போன்றவற்றை பற்றி பேச வேண்டாம்.

Labels:

வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய 8 விதமான பெண்கள்!!!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக் கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது. அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள் கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர். எனவே தான் ஆண்கள் எந்த ஒரு இடத்திலும் பெண்களுக்கு மதிப்பளிக்கின்றனர். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 
 
இத்தகைய பெண்களிடம் இருந்து, எப்போதும் நல்லதை மட்டும் கற்றுக் கொள்வதில்லை. தீயதையும் தான் கற்றுக் கொள்கிறோம். ஆனால் இவற்றால் தான் ஒரு உண்மையான வாழ்க்கையை அனைவரும் கற்றுக் கொள்கிறோம். ஆகவே அத்தகைய பெண்களை சிறப்பிக்கும் வகையில் மார்ச் மாதம் 8 ஆம் தேதி மகளிர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய தினத்தில், வாழ்க்கையில் மறக்க முடியாத உறவுமுறைகளில் சந்திக்கக்கூடிய 8 விதமான பெண்கள் யார் யார் என்று பார்ப்போமா!!!

அம்மா 
 
 உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும், அம்மா பையன் தான். ஏனெனில் அம்மாவின் மூலம் உலகை பார்க்கும் ஆண், அந்த அம்மாவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறான். சொல்லப்போனால், ஆண்களின் ஹீரோயின் அவர்கள் அம்மா தான்.
 
மாமியார் 
 
அம்மாவின் காதலுக்கு கண்ணே இல்லை என்பதை மாமியாரின் மூலம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வோம். எனவே இந்த உறவுமுறையிலும் ஒரு நல்ல அம்மாவைக் காணலாம்.

பாட்டி 
 
பாட்டிக்கு பேரன்/பேத்தி என்றால் அளவு கடந்த பிரியம் இருக்கும். அதிலும் பாட்டியின் மூலமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வோம். எனவே இந்த பாட்டி உறவு முறையும் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஒன்று.

ஆசிரியர் 
 
குறும்பு செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும், படிக்கும் காலத்தில் ஒரு பெண் ஆசிரியர் மிகவும் பிடிப்பவராக இருப்பவர். எனவே அவ்வாறு ஒழுக்கத்தோடு, இவ்வாறு தான் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த மனதிற்கு பிடித்த பெண் ஆசிரியரை, எந்த ஒரு ஆணும் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.

தங்கை 
 
அண்ணானாக இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயம் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். ஆண்கள் எவ்வளவு தான் பொறுக்கியாக இருந்தாலும், தங்களை விஷயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக தங்கையாக இருக்கும் பெண், எவ்வளவு தான் அண்ணனுடன் சண்டை போட்டாலும், எந்த ஒரு விஷயத்திலும் தனது அண்ணனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவே இவ்வாறு விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை ஒவ்வொரு ஆணும், தங்கையிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.

முன்னாள் காதலி
 
 பெண்களிடமிருந்து எத்தனை தான் நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டாலும், ஒரு கெட்ட விஷத்தையும் கற்றுக் கொள்வோம். அதிலும் காதலிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து சரியான புரிதல் மற்றும் நம்பிக்கையின்மையினால் பிரிந்து விட்டாலும், வாழ்வில் காதலித்த முதல் காதலியை யாரும் மறக்க மாட்டார்கள்.
 
மனைவி
 
 அம்மாவிற்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு மறுக்க மற்றும் மறக்க முடியாத உறவுமுறை தான் மனைவி. மனைவி என்ன தான் சண்டை போட்டாலும், ஏதாவது ஒன்று என்றால், அடுத்த நிமிடமே வந்து எதையும் மனதில் கொள்ளாமல், அம்மாவிற்கு அடுத்து அனுசரித்து நடப்பவள் தான் மனைவி. எனவே இத்தகைய மனைவியை உயிர் பிரிந்தாலும், எந்த ஒரு ஆணும் மறக்கமாட்டார்கள்.

மகள் 
 
அனைத்து அப்பாக்களின் செல்லப்பிள்ளை, அவர்களது மகள் தான். ஏனெனில் அவர்கள் தங்கள் மகளிடமிருந்தும் நிறைய கற்றுக் கொள்கின்றனர். மேலும் அவர்களிடம், அவர்களது மகளைப் பற்றி சொல்லச் சொன்னால், அனைவரும் சொல்வது "என் உயிர் தான் என் மகள்" என்பது. இத்தகைய உறவுமுறையைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

Labels:

மகளிர் தினத்துக்கு என்ன பரிசு கொடுக்க போறீங்க...?

உலக மகளிர் தினமானது மார்ச் மாதம் 8 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளாளது மகளிரை சிறப்பிக்கும் வண்ணமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் நாட்டின் கண்கள் என்பது போல், ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்ணும் அந்த வீட்டின் மகாராணி தான். ஆகவே வீட்டில் இருக்கும் தாய், மனைவி அல்லது காதலிக்கு, மகளிர் தினத்தன்று ஏதாவது பரிசுகளை வழங்கலாம். 
 
இத்தகைய பரிசு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்த நாளை மறக்காமல் மனதில் கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகளைக் கொடுத்தால், அவர்கள் மனதில் மகிழ்ச்சி கொள்வதோடு, அன்பும் அதிகரிக்கும். சரி, இப்போது எந்த மாதிரியான பரிசுகளை கொடுக்கலாம் என்று பார்ப்போமா!!!

women s day gift ideas
* சாதாரணமாக ஏதாவது ஒரு சிறப்பு என்றால் கொடுக்கும் ஒரு பரிசு தான் உடைகள். எனவே இந்த தினத்திலும் சேலை, சுடிதார் போன்ற ஆடைகளை வாங்கிக் கொடுத்து, வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். 
 
 * மகளிர் தினம் என்பதால், நிறைய வண்ணமயமான நிறத்திலும், டிசைனிலும் வாழ்த்து அட்டைகள் மார்க்கெட்டில் வெளிவந்திருக்கும். ஆகவே நல்ல வரிகளுடன் கூடிய வாழ்த்து அட்டைகளை வாங்கி கொடுக்கலாம். இல்லையெனில், அவர்களை பற்றி உங்கள் மனதில் இருப்பதை எழுதிக் கொடுக்கலாம். 
 
 * பொதுவாக பெண்களுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே இந்த மகளிர் தினத்தன்று, அவர்களுக்கு பூங்கொத்துக்களையோ அல்லது பூச்செடிகளை வாங்கிக் கொடுக்கலாம்.
 
 * இல்லையெனில் அவர்களது போட்டோவை சற்று வித்தியாசமாக, ஃப்ரேம் செய்தோ அல்லது கப்-பில் போட்டோ இருப்பது போன்று செய்தோ கொடுக்கலாம். 
 
* முக்கியமாக சாக்லெட்டை மறந்துவிட வேண்டாம். பெண்களுக்கு சாக்லெட் என்றாலும் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து, வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இவையே மகளிர் தினத்தன்று, பெண்களுக்கு கொடுக்க வேண்டிய சிறிய பரிசுகள். வேறு என்னவெல்லாம் பரிசுகள் கொடுக்கலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Labels:

வயதான பெற்றோரைப் பராமரிக்க சில எளிய வழிகள்...

அனைவருக்குமே பெற்றோர்கள் கடவுள் போன்றவர்கள். அத்தகைய பெற்றோர் நன்கு இளமையாக இருக்கும் போது, குழந்தைகளை நல்ல நிலைமையில் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு வயதானால், அவர்களால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு இருப்பார்கள். அவ்வாறு அவர்களுக்கு வயதாகிவிட்டால், அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியும். அந்த மாதிரி ஏதாவது மாற்றங்களை கவனிக்கும் போது, மாற்றங்கள் தென்பட்டால், அப்போது அவர்களுக்கு உதவி தேவை என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற் போல் நடக்க வேண்டும். 
 
பொதுவாக வயதான பெற்றோர்களை பராமரிப்பது என்பது ஒரு எளிதான பணியல்ல. ஏனெனில் அன்றாட வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டே, வயதான பெற்றோரை கவனிப்பது என்பது சற்று கடினம் தான். ஆனால் அத்தகைய வேலைகளை எளிதாக்க சில வழிமுறைகள் உண்டு. ஆகவே இப்போது வயதான பெற்றோரை பராமரிப்பதற்கான எளிய வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

how care your aged parents
வழிமுறைகள்: 
 
1. பெற்றோர்களுடன் நல்ல கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். வயதானவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், அதனால் அவர்களது அந்த நிலைமையிலும், தாங்கள் நல்ல நிலையில் உள்ளோம் என்பதை உணரும் படி அவர்களோடு கலந்து பேசுவது முக்கியமாகும். 
 
 2. பெற்றோர்கள் மருத்துவரிடம் செல்லும் போது அவர்களுடன் செல்லவும். மருத்துவரிடம் செல்லும் போது, அவர்களுடன் யாராவது இருந்தால், அவர்களுக்கு பெரிய ஆறுதலாகவும், உதவியாகவும் இருக்கும். இதனால் அவர்களது உடல் நலத்தைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ளலாம். 
 
3. பெற்றோர்களை கவனிக்கும் போது அவர்களுக்கென்று ஒரு அட்டவணையை வைத்துக் கொள்ளவும். அந்த அட்டவணையில் அவர்களின் நியமனங்களை எழுதி, அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை நினைவில் வைத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு அவற்றைச் செய்வார்கள். 
 
4. பெற்றோர்களுடனும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும். என்ன தான் பிற வேலைகளில் மும்முரமாக இருந்தாலும், அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். இதற்காக அவர்களுடன் சிரித்து பேசி விளையாடவோ அல்லது நடப்பதற்காக வெளியே செல்லவோ முயற்சி செய்யலாம். இது உறவை இன்னும் மேம்படுத்தும். 
 
5. பெற்றோர்களுக்கு என்று தனியாக ஒரு அறையை கொடுக்க வேண்டும். அதுவும் அவர்களுக்கு உரியது என்று உணரும் வகையில் பிரத்தியேகமான அறையை ஒதுக்கித் தர முயற்சி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் உதவி கேட்கும் போது மட்டுமே உதவி செய்யவும். 6. பெற்றோர்களை கவனிப்பதற்கு என்று ஒரு பராமரிப்பாளரை நியமிக்கலாம். இவ்வாறு நியமித்தால், வாழ்க்கையானது மிகவும் எளிதாக்கப்படும்.

Labels:

முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க...

இந்த உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல் தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும், நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில் யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது சந்திக்க வைத்துவிடும். 
 
அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் பிறந்தநாள் விழா, சினிமா, ஹோட்டல், பெரிய மால், நண்பர்களின் திருமணம் போன்ற இடங்களில் சந்திக்க நேரிடும். அவ்வாறு சந்திக்கும் வேளையில், பதட்டப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை அனுபவசாலிகள் சொல்கின்றனர். இதற்கெல்லாம் டிப்ஸ் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் ஒரு உறவு நீண்ட நாட்கள் பிரிகிறது என்றால், அது நிச்சயம் இருவருக்கும் இடையில் போதிய புரிந்து கொள்ளுதலும், நம்பிக்கையும் இல்லாததே ஆகும்.

what do when you meet ex
அந்த நிலைமையில் மீண்டும் இருவரும் சேர்ந்தால், பிற்காலத்தில் நிச்சயம் சொல்லிக் காண்பிக்க வேண்டி வரும். எனவே அத்தகையவற்றை தவிர்க்கவே சில டிப்ஸ்களை கூறுகின்றனர். வேண்டுமென்பவர்கள் அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். 
 
* காதல் தோல்வி அடைந்த நிறைய பேர் எதிர்ப்பாராத வகையில் சந்திப்பர். அவ்வாறு சந்திக்கும் போது, பதட்டப்படாமல், அமைதியாக, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கு கண்களை மூடிக் கொண்டு, பெருமூச்சு விட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்களைப் பார்த்ததும் ஏற்படும் இரத்த அழுத்தம், டென்சன் போன்றவை தடுக்கப்படும். 
 
* பொதுவாக முன்னால் காதலரை சந்தித்ததும், முதலில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தான் தோன்றும். உதாரணமாக, எங்கு அவன்/அவள் அவர்களது புதிய காதலன்/காதலியை அறிமுகம் செய்து வைப்பாரோ அல்லது திருமணம் நடக்கப் போகும் தேதியை சொல்வாரோ போன்றவை. பிரிந்த பின்னர் அவர்கள் எது சொன்னால் என்ன? அப்போது அதனைப் பற்றியெல்லாம் மனதில் நினைக்காமல், எது சொன்னாலும் அதை சந்தோஷத்துடன் ஏற்பது போல் நடக்க வேண்டும். 
 
 * உறவு முறிந்த பின்னர் எதற்கு தேவையில்லாமல் பேச்சை வளர்க்க வேண்டும். எனவே எங்கு பார்த்தாலும், உடனே சென்று பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை அவர்கள் வந்து பேசினால், பேசலாம். அதுவும் அளவாக பேசிவிட்டு விலகுவது நல்லது. 
 
 * எப்போதும் அவர்களை சந்திக்கும் தருவாயில், அவர்கள் முன்பு நடிக்காமல், நீங்களாக இருப்பது மிகவும் சிறந்தது. அதைவிட்டு நடித்தால், பின் அவர்கள் உங்களுக்கு அவர்களுடன் மீண்டும் சேர வேண்டிய ஆசை உள்ளது என்பதை புரிந்து கொண்டு, மீண்டும் வந்து பேசுவார்கள். எனவே போலியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம். 
 
* சந்தித்து பேச பிடிக்கவில்லை என்றால், அப்போது அவர்கள் என்ன கேட்டாலும், சுருக்கமாக விடையளித்து சென்றால், உங்களுக்கு பேச பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, அவர்களே விலகி சென்றுவிடுவர். ஆகவே இவ்வாறு முன்னால் காதலரை சந்திக்கும் தருவாயில் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Labels:

காதல் இல்லாதவங்களா நீங்க? கவலைய விடுங்க...

காதலர் தினத்தன்று சிங்கிளாக இருப்பது என்பது ஒரு கொடுமையான விஷயம் போல் சிலர் வருத்தப்படுவார்கள். இந்த நேரத்தில் தான், காதல் செய்யும் அனைத்து நண்பர்களும், "காதலர் தினத்தன்று நீ என்ன செய்ய போகிறாய்?" என்று கேட்பார்கள். ஆனால் அவ்வாறு கேட்கும் போது சிலர் மிகவும் வருத்தப்படுவார்கள். ஏனெனில் எவ்வளவு தான் முயன்றாலும், காதலி/காதலன் இன்னும் அமையவில்லையே என்பதால் தான். குறிப்பாக காதலில் தோற்று போய் தனிமையில் இருப்பவர்களுக்கு, இது ஒரு நரகமான நாள் போன்று இருக்கும். 
 
இந்த தினத்தன்று தான் அதிகமான தனிமையை உணர்வார்கள். அதுமட்டுமின்றி, இந்த நாளில் காதலி/காதலனின் நினைவு மனதை அதிக காயப்படுத்தும். எனவே இத்தகைய கஷ்டங்களை அனுபவிக்காமல் இருப்பதற்கு, தம்மைத் தாமே சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சிலரோ காதல் இருப்பதற்கு இல்லாமல் இருப்பதை விரும்பி சந்தோஷமாக இருப்பார்கள். அத்தகையவர்களிடம் காதலைப் பற்றி சொன்னால், காதல் செய்து காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு, காதல் செய்யாமலேயே இருக்கலாம் என்று காதலை வெறுப்போடு சொல்வார்கள். 
 
என்ன தான் அவ்வாறு சொன்னாலும், ஒருவித சிறிய கஷ்டம் மனதில் இருக்கும். அத்தகையவர்களும் இந்த நாளில் தனிமையை உணர்வார்கள். எனவே தனிமையை தவிர்த்து, காதலர் தினத்தன்று சந்தோஷமாக இருப்பதற்கு ஒருசில சூப்பரான வழிகள் இருக்கின்றன. அத்தகைய வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, காதலர் தினத்தன்று மகிழ்ச்சியாக இருங்கள்.

பார்ட்டி 
 
காதல் செய்யாமல் இருப்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து, அவர்களை அழைத்து அன்றைய பொழுதைப் போக்கலாம்.

நன்கு சாப்பிடலாம் 
 
 பிடித்ததை விரும்பி சாப்பிட்டால், உடைந்த இதயம் கூட சரியாகிவிடும். வாழ்க்கையில் யாரும் இல்லை என்பதற்காக, சரியாக சாப்பிடாமல் இருப்பதை தவிர்த்து, பிடித்ததை ஆர்டர் செய்து, மூக்கு முட்ட சாப்பிட்டு, தூங்கலாம்.

அலுவலகத்தில் இருப்பது 
 
காதல் செய்யாமல் இருப்பவர்களாக இருந்தால், அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்யலாம். அதுமட்டுமின்றி, இப்படி வேலை செய்வதை பாஸ் பார்த்தால், ஒரு வேளை மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு போதிய அளவு கிடைக்கலாம்.

பெற்றோர்களை பார்ப்பது 
 
 பெற்றோர்களை விட்டு வெளியூர்களில் இருப்பவர்கள், இந்த நாளன்று அவர்களை பார்க்க செல்லலாம். ஏனெனில் மற்றவர்களை விட, பெற்றோர்களின் காதலுக்கு தான் எந்த ஒரு முடிவும் இருக்காது. அதுவே எப்போதும் நிலைத்து இருக்கக்கூடியது.

பரிசுகள் 
 
காதலர் தினத்தன்று யாரும் பரிசுகள் கொடுக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அப்போது நாம் நமக்கு பிடித்ததை வாங்குவதற்கு ஷாப்பிங் சென்று, வாங்கி மகிழலாமே!

அழகுப்படுத்துவது 
 
 ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். எனவே இந்த நாளன்று ஸ்பா சென்று ஃபேஷியல், பெடிக்யூர் போன்றவற்றை செய்து, தங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

புத்தகம் படிப்பது 
 
நன்கு சுவாரஸ்யமாக இருக்கும் புத்தகங்களை வாங்கி, வீட்டில் உட்கார்ந்து அமைதியாக படிக்கலாம்.

ட்ரிப் 
 
எங்கேனும் பைக்கிலோ அல்லது காரிலோ, அமைதியாக ஒரு ட்ரிப் செல்லலாம். அதுவும் இருக்கும் ஊருக்கு வெளியே யாரும் இல்லாத அமைதியான இடத்திற்கு சென்றால், எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

Labels:

'கிஸ் டே'-க்கு முத்தம் பெற சில ரொமான்டிக் டிப்ஸ்...

இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி முத்தம் பெறுவது என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருப்பார்கள். முக்கியமாக காதல் செய்பவர்கள், தங்கள் காதலரிடம் எப்படியெல்லாம் முத்தத்தைப் பெறுவது என்று நிச்சயம் யோசிப்பார்கள். அதிலும் இன்று கிஸ் டே என்பதால், கண்டிப்பாக காதலர்கள் முத்தத்தை பலவாறு கொடுப்பார்கள். சில காதலர்களிடம் எத்தனை முத்தத்தை உங்கள் காதலியிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள் என்று கேட்டால், சிலர் 2-3 என்பார்கள், சிலரோ பெற்றுள்ளார்களா என்றே யோசிப்பார்கள். 
 
அத்தகையவர்கள், இந்த கிஸ் டே அன்று நிச்சயம் முத்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். நண்பர்களே! எத்தனை நாள் தான் நல்லவனா இருக்க போறீங்க? பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள். இந்த கிஸ் டே அன்று முத்தத்தைப் பெறவில்லையெனில் அது நன்றாக இருக்காது. சொல்லப்போனால், காதலியிடம் சரியான முத்தத்தை இந்த 'கிஸ் டே' அன்று பெறுவது தான் சிறந்தது. அத்தகைய முத்தத்தை காதலியிடம் எளிதில் பெறுவதற்கு ஒருசில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

how get kissed on kiss day
எனவே காதலியிடம் எப்படி முத்தம் பெறுவது என்று யோசித்தால், அதற்கு முதலில் நன்கு ஸ்மார்ட்டாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சில பெண்களுக்கு மிகுந்த ஸ்மார்ட்டாக இருந்தால், மிகவும் பிடிக்கும். இதனால் கூட எளிதில் முத்தத்தை சீக்கிரம் பெறலாம். அதுமட்டுமின்றி, காதலியிடம் முத்தத்தை பெறுவதற்கு ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்ற வேண்டும். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!! 
 
 * காதலர் தினத்தன்று தான் காதலியிடம் காதலை சொல்ல வேண்டுமா என்ன? கிஸ் டே அன்று கூட சொல்லலாமே! அதுவும் அவர் எதிர்பார்க்காத வகையில், காதலியின் முன் முட்டி போட்டு, அவளது கைகளை பிடித்து, விரல்களுக்கு மோதிரம் அணிவித்து, அந்த சந்தோஷமான தருணத்தில் அந்த அழகாக மூன்று வார்த்தைகளைச் சொன்னால், அவள் மிகுந்த சந்தோஷப்பட்டு, தானாகவே வந்து ஒரு நச்சென்று முத்தம் கொடுப்பர். 
 
* பெண்களுக்கு சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களுக்கு இந்த நாளன்று அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டை வாங்கி கொடுத்து, அதையே நீங்களும் வாங்கி சாப்பிடுங்கள். முக்கியமாக அவ்வாறு சாப்பிடும் போது, காதலியைப் பார்த்து, "அது என்ன உதட்டிற்கு பக்கத்தில் ஏதோ உள்ளது" என்று சொல்லி, அவர் தேடி துடைக்கும் நேரம், அவர் அருகில் சென்று துடைப்பது போல், அவர் எதிர்பார்க்காதவாறு ஒரு முத்தத்தை கொடுத்துவிடுங்கள். முடிந்தால், உதட்டோடு உதடு வைத்து முத்தத்தை கொடுங்கள். இதனால் காதலி ஆச்சரியம் அடைய நேரிடுமே தவிர, கோபம் வராது. 
 
* நல்ல ரொமான்டிக் முத்தம் வேண்டுமென்றால், அது இரவு நேரத்தில் தான். எனவே அந்த நேரத்தில் முத்தம் வேண்டுமென்றால், இரவில் ரெஸ்ட்டாரண்ட் அல்லது வீட்டிலேயே மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து, இரவில் ஒன்றாக ஒருவரை ஒருவர் கண்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். இந்த நேரம் அதிக ரொமான்ஸ் இருப்பதோடு, பாசம் சற்று அதிகமாக இருக்கும். எனவே காதலியின் அருகில் இந்த நிலையில் சென்றால், தானாகவே முத்தமானது கிடைத்துவிடும். 
 
 * "நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல் உள்ளது" என்று சொல்வதனாலும், முத்தமானது கிடைக்கும். எப்படியெனில் பொதுவாக அனைவருக்குமே ஒருவித ஈகோ மனதில் இருக்கும். அத்தகைய ஈகோவானது, யார் ஒருவர் தன்னை மிகவும் புகழ்ந்தோ அல்லது பாராட்டியோ பேசினால், அவர்கள் மீது அன்பை அதிகரிக்கும். 
 
 * நல்ல இருட்டான இடம் முத்தம் கொடுப்பதற்கு ஏற்ற இடம். எனவே அதற்கு சரியான இடம் சினிமா தியேட்டர் தான். எனவே இந்த கிஸ் டே அன்று சினிமாவிற்கு சென்று, நன்கு ரொமான்ஸ் செய்யலாம். சினிமாவிற்று செல்லும் போது அந்த படம் நன்கு ரொமான்ஸ் படமாக இருந்தால், இன்னும் நன்றாக இருக்கும். இதனால் படத்தில் ரொமான்ஸ் காட்சி வரும்போது, அந்த காட்சியை காரணமாக கொண்டு, உங்கள் துணைக்கு முத்தத்தைக் கொடுக்கலாம். முக்கியம், இவ்வாறு செய்வது மற்றவர்க்கு தொந்தரவு தருவது போல் இல்லாதவாறு இருக்க வேண்டும். 
 
* துணையுடன் பைக் அல்லது காரில் பயணம் செய்யும் போது கூட கிடைக்கும். அவ்வாறு செல்லும் போது சற்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டே செல்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதிலும் காரில் செல்லும் போது, நன்கு மென்மையான காதல் பாடல்களைப் போட்டு, மெதுவாகப் பேசிக் கொண்டே, செல்லமாக ஒரு முத்தத்தைக் கொடுக்க வேண்டும். இதனால் நிச்சயம் துணையும் முத்தத்தைக் கொடுப்பர். இவையே கிஸ் டே அன்று காதலியிடம் இருந்து, முத்தத்தைப் பெறுவதற்கான ட்டிக்ஸ். நீங்கள் இந்த கிஸ் டே-க்கு எப்படி முத்தத்தைப் பெறப் போகிறீர்கள்?

Labels:

ஏமாற்றும் துணையை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய நவீன யுகத்தில் உறவுகள் புதிய பரிணாமனங்களில் வலம் வருகின்றன. தினமும் பல்வேறு மனிதர்களுடன் சந்திப்புகளும், அதில் பிடித்தவருடன் தொடர்புகளும் ஏற்படுகின்றன. இவ்வகையில் உலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் பாசத்தை, அன்பை, காதலை வெளிப்படுத்திக் பிடித்தவர்களுடன் ஒரு நல்ல உறவு முறையை வளர்த்து வருகிறார்கள். இந்த உறவுகள் நம்பிக்கை எனும் சங்கிலியால் அற்புதமாக இணைக்கபட்டிருக்கும். 
 
ஆனால் உறவுகளில் ஏதேனும் உரசல் வரும் போது, திடீரென உங்களுக்கு ஏதோ தவறு நடப்பதாக தோன்றும்... அப்பொழுது உங்கள் துணை மாறி விட்டதாக நீங்கள் உணருவீர்கள்! இது தான் கவனிக்க வேண்டிய தருணம்! உங்கள் துணை உங்களை ஏமாற்றியிருக்கலாம். இவற்றை கண்டறிவதற்கான வழிமுறைகளையே இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

how catch cheating partner
1. உங்கள் துணையின் நடவடிக்கைகளில் ஏற்படும் அனைத்து விதமான மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். அதாவது, அவர்கள் இதுவரை உங்களுடன், நடந்து கொண்டிருந்த விதத்திற்கும், மாற்றத்தின் பின் நடந்து கொள்ளும் விதத்திற்கும் வித்தியாசம் நன்கு தெரியவரும். உதாரணமாக, அவர் உங்களுடன் குறைவான நேரத்தை செலவழிப்பது, அடிக்கடி வெளியே போய்விடுவது போன்றவை. 
 
2. காதலிப்பவர்கள் அடிக்கடி 'ஐ லவ் யூ' என்று சொல்லிக் கொள்வது சகஜமானது. அந்த வகையில் உங்கள் துணை உங்களை நேசிக்கிறேன் என்று சொல்ல தவறலாம் அல்லது நீங்கள் அப்படி சொன்னதற்கு பதில் தர தவறியிருக்கலாம்... அல்லது உங்களுக்கு 'நானும் உன்னை நேசிக்கிறேன்' என்ற பதில் மட்டும் கிடைக்கலாம்! இந்த மாதிரியான செயலும் ஏமாற்றத்திற்கான செயல்கள் தான். 
 
3. உங்கள் பெயரை சொல்வதில் குழப்பமடையலாம். உங்கள் பெயரையோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயத்தை சொல்லவோ வெகு நேரம் எடுத்துக் கொள்ளலாம். 
 
4. அவர்களுடைய தொலைபேசியை சோதனை செய்யுங்கள்- உண்மையில், தொலைபேசியை சோதனை செய்தால், உங்களுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை நிச்சயம் கிடைக்கும். ஆகவே ஒரே ஒருமுறை அதனை சோதனை செய்யுங்கள். 
 
5. அவர்களுடைய வழக்கமான விஷயங்களில், அவர் என்ன செய்தாலும் அல்லது என்ன செய்ய வேண்டியிருந்தாலும், அதனை நீங்கள் எப்பொழுதும் உங்கள் கண்காணிப்பில், கட்டுப்பாட்டில் கொண்டு வார வேண்டும். அதற்கு அவருடன் நெருக்கமாக இருந்து கண்காணிக்க வேண்டும். 
 
6. உங்கள் துணையை இரகசியமாக நிழல் போலவோ அல்லது பின் தொடர்ந்தோ செல்லலாம். 
 
 7. உங்கள் துணையின் நண்பர்களுடனோ அல்லது உங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களுடனுன் பேசுங்கள். அப்பொழுது உங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும். இதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். 
 
குறிப்புகள்: 
 
* எதையும் அவசரமாக அல்லது வேகமாக செய்யாமல், அமைதியாக செய்ய வேண்டும். 
 
 * உங்கள் துணை ஏமாற்றுவதை அறியும் போது வருத்தப்படாதீர்கள். அப்போது ஒரு அறையை அவர் கன்னத்தில் விடுங்கள். பிறகு சோகத்திலிருந்து வெளியேறுங்கள்!
 
 * நண்பர்களின் உதவிகளை பெற்றிடுங்கள். எச்சரிக்கைகள்: 
 
* நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்று உங்கள் துணைக்கு சந்தேகம் வருமாறு எதையும் செய்ய வேண்டாம். 
 
* மோசமான நண்பர்களின் உதவியை நாட வேண்டாம்.

Labels:

ப்ரொபோஸ் டே ஸ்பெஷல்: காதலை வெளிப்படுத்த சில சூப்பர் ஐடியா!!!

வேலண்டைன் வாரத்தின் இரண்டாவது நாள் தான் ப்ரொபோஸ் டே. இந்த நாளன்று அனைத்து காதலர்களும் தங்கள் காதலை, தம் துணைவரிடம் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒருவித சந்தோஷத்தை கொடுப்பார்கள். மேலும் அவ்வாறு வெளிப்படுத்தும் போது, அது அவர்கள் எதிர்பார்க்காத வகையிலும், சற்று ரொமான்ஸாகவும் சொன்னால் நன்றாக இருக்கும். மேலும் இந்த நாள் அனைத்து காதலர்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த நாளன்று தானே காதலை அழகான முறையிலும், வித்தியாசமான முறையிலும் சொல்வார்கள். இதற்காக பலர் நிறைய வழிகளை யோசிப்பார்கள். 
 
குறிப்பாக பெண்களை விட, ஆண்கள் தான் காதலை பலவாறு வெளிப்படுத்த முயல்வார்கள். பெண்களும் அதையே அவர்களிடம் எதிர்பார்ப்பார்கள். அத்தகையவர்களுக்கு, இந்த ப்ரொபோஸ் டே சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க சில டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் காதலியை அசத்துங்கள்.
electrifying ideas propose propose
* ரொமான்ஸாகவும், மனதை தொடும் வகையிலும் இருக்க, இருவரும் முதன் முதலில் சந்தித்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த இடத்தில் அவர்களை விட்டு சற்று தூரம் சென்று, அவர்களை அழைத்து அவர்களிடம் 'ஐ லவ் யூ' என்று சொல்லலாம். முடிந்தால், இந்த இடத்தை சற்று அலங்கரித்து, அவர்களை அழைத்துச் சென்று, சற்று முட்டி போட்டு, கையைப் பிடித்து, அந்த அழகான மூன்று வார்த்தையை சொல்லலாம். இதனால் அவர்களது மனதை எளிதில் வெல்வதோடு, அவர்களுக்கு ஒரு சூப்பரான மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தியவாறு இருக்கும். 
 
* பிடித்தவர்களுக்கு ஆச்சரியம் கொடுப்பதை விட மிகவும் ஸ்பெஷலானது வேறொன்றும் இல்லை. அதிலும் பெண்களுக்கு ஆச்சரியம் கொடுத்தால் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில், அவர்கள் உங்களிடம் இந்த நாளைப் பற்றி பேசி, நீங்கள் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படும் நேரத்தில், நீங்கள் அதை கண்டு கொள்ளாதவாறு நடந்து, சொல்லப்போனால் அந்த மூன்று வார்த்தை சொல்வதை மறந்துவிட்டது போன்று நடந்து கொண்டு, அவர்களை ஏதேனும் ரெஸ்ட்டாரண்ட் அழைத்துச் சென்று, அவர்கள் முகம் குனிந்து கோபமாக இருக்கும் நேரத்தில், அவர்கள் முன் முட்டி போட்டு, முடிந்தால், கையில் ஒரு மோதிரம் போட்டு, 'ஐ லவ் யூ' சொல்லலாம். இந்த நேரம் எவ்வளவு கோபம் இருந்தாலும், வேலண்டைன் வாரத்தின் இறுதி நாளில் கொடுக்கப்படும் முத்தமானது, இந்த நேரத்திலேயே கிடைக்கும் வாய்ப்புள்ளது. 
 
* பொதுவாக பெண்கள் சினிமாவில் காட்டப்படும் ரொமான்ஸ் காட்சியைப் பார்த்தாலே உருகிவிடுவார்கள். எனவே அதைப் போன்றே, அவர்களுக்கு ஒரு பாட்டு பாடி அல்லது கவிதை எழுதி, அதன் மூலம் அவர்களிடம் காதலை வெளிப்படுத்தினால், அவர்கள் மனதை வெல்வதோடு, அவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவீர்கள். அதிலும் அந்த பாட்டு, உங்கள் சொந்தப் பாட்டு அல்லது கவிதையாக இருந்தால், உங்கள் மீது காதல் இன்னும் அதிகமாகும். 
 
 * ஒருவேளை காதலை நேரில் வெளிப்படுத்த வெட்கமாக இருந்தால், நமது பாரம்பரிய முறையான கடிதம் மூலமாக வெளிப்படுத்தலாம். அந்த கடிதத்தில், உங்கள் மனதில் உள்ள அனைத்தையும் எழுதிவிட்டு, எதற்காக அவள் உங்களுக்கு வேண்டும், அவள் உங்கள் வாழ்வில் வந்த பின்னர் உங்கள் வாழ்க்கை எப்படி அழகாக மாறியுள்ளது என்பன போன்றவற்றையும் எழுதிக் கொடுக்கலாம். இவையே காதலியின் மனதை வெல்வதற்கான சூப்பரான சில ஐடியாக்கள். என்ன நண்பர்களே! இந்த ப்ரொபோஸ் டே-க்கு உங்களது திட்டம் என்ன?

Labels:

ஆண்களுக்கு பிடித்த பெண்களுக்கு பிடிக்காத செயல்கள்!!!

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருசில செயல்கள் மட்டும் தான் அனைவருக்குமே ஒத்துப் போகும். ஏன் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை என்று இருக்கும். அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. 
 
ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர்.

things women hate but men love
* ஆண்களின் செயல்களில் மிகவும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான். அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர். 
 
* சரியாக ஷேவிங் செய்யாமல் இருப்பது. அதுவும் வாரக்கணக்கில் சிலர் ஷேவிங் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்பதாலேயே தான். அதுமட்டுமின்றி, அவர்களது சோம்பேறித்தனத்தால், அவர்கள் அழுக்கு சட்டையை கூட இரண்டு நாட்கள் போடுவார்கள். மேலும் எங்காவது வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தால், உடனே முகம், கை, கால் கழுவாமல், அப்படியே நீண்ட நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதைப் பார்த்தாலும், பெண்களுக்கு பிடிக்காது. 
 
 * நிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையல் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான். இந்த நேரத்தில் மட்டும் கணவன் அல்லது காதலன், மனைவி அல்லது காதலி கையில் கிடைத்தார்கள் என்றால், அவர்கள் சட்னி தான். 
 
* பொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள். உதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும். 
 
* ஆண்கள் அனைவருக்குமே கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனெனில் பெண்கள் நன்கு அழகாக கண்ணைக் கவரும் வகையில் உடை அணிந்து கொண்டு வந்து, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காண்பித்தால், அந்த நேரத்தில் உடுத்திய ஆடையை கவனிக்காமல், டிவியை வாயை திறந்து பார்த்துக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு கிரிக்கெட் பிடித்தாலும், பிடிக்காமல் போய்விடுகிறது. 
 
* நிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்கு காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும். 
 
* புத்தகம் படிப்பது பெண்களுக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் அதே புத்தகத்தை வீட்டில் காலை அல்லது மதிய வேளையில் படித்தால் போதாதா என்ன? ஆம், ஆண்கள் பெரும்பாலும் இரவில் படுக்கும் போது மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்காமல், புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் பிடிக்குமா என்ன? இவையே ஆண்களுக்குப் பிடித்த, பெண்களுக்கு பிடிக்காத செயல்கள். வேறு ஏதாவது செயல்கள் உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... என்ன நண்பர்களே! நான் சொன்னது சரிதானா?

Labels:

தனிமையை கையாள்வதற்கு சில சூப்பர் டிப்ஸ்....

மக்கள் தனிமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. சிலர் தனிமையை சந்தோசத்திற்க்காகவும், ஒருசிலர் வேதனை கொண்டுள்ள சமயங்களிலும் தனிமையை விரும்புவர். சிலருக்கு அந்த தனிமை தானாகவே அமைந்து விடும். இப்படிப்பட்ட தனிமையை சமாளிக்க கற்றுகொள்வது தான் புத்திசாலித்தனம். தனிமை அனைவருக்கும் ஒரு அனுபவம். எனினும் அதிர்ஷ்டவசமாக, அதை சமாளிக்க பல வழிகள் உள்ளன. முதலில் தனிமையை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு பெரிய தவறு என்று அர்த்தம் இல்லை. சில மாற்றங்கள் நம் வாழ்கையில் ஏற்படும் காலத்தில் தனிமை நம்மை நாடுகிறது. குறிப்பாக நீங்கள் உங்கள் அன்றாட வழக்கமான வேலையிலிருந்தோ இல்லை நம்முடன் இருப்பவர்களிடம் இருந்து பிரிவதாலோ இந்த தனிமை நம்மை உலுக்கும். 
 
எடுத்துக்காட்டாக, புது வேலையில் சேரும் பொழுது அல்லது திருமணமாகி புதிய உறவுகளுடன் இணையும் பொழுது, தனிமையில் இருக்க நேர்ந்திடும். எனவே இந்த நேரத்தில் ஏற்படும் தனிமையை தவிர்க்க, அவர்களை புரிந்து அவர்களுடன் கலந்து கொள்ள எடுக்கும் சில முயற்சிகளால், அந்த தனிமையானது நம்மை விட்டு விலகும்.

how deal with loneliness
தனிமையைப் போக்க சில டிப்ஸ்... 
 
 தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. 
 
இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை சொல்லால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், நம் வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடை பெறலாம். நம்மை சார்ந்தவர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ நட்பு கொள்ளும் போது, தனிமையை தவிர்க்கலாம். 
 
 இல்லையெனில் நம்மை போன்றே தனிமையில் வாடுபவர்களிடம் ஆலோசனை பெறுதல் அல்லது அவர்களிடம் அந்த தனிமையிலிருந்து எப்படி விலகி வந்தனர் போன்ற கேள்விகளை எழுப்புதலாலும், அந்த தனிமைக்கான விடை கிடைக்கும். மற்றவர்களிடம் பேசுகையில் நம்மை பற்றியே பேசி கொண்டு இருக்காமல், அவர்கள் பேசுவதையும் செவி கொடுத்து கேட்பது உறவை மேம்படுத்தும். அதை விட்டு நீங்கள் பேசுவதை மட்டுமே மற்றவர் கேட்க வேண்டும் எனில் அவர்களுக்கு உங்களோடு பேசுவது பிடிக்காமல், உங்களிடமிருந்து அறவே விலகுவர். 
 
 உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழியுங்கள். அப்படி ஒன்றும் ஒரு முக்கியமான ஆளாக நீங்கள் வீட்டில் இல்லா விட்டாலும், அவர்களுடன் கலந்து பேசினால், உங்களையும் ஒரு முக்கியத்துவராக அவர்கள் ஏற்க வாய்ப்புள்ளது. உங்களையே ஒரு சவாலாக எடுத்து கொள்ளுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களிடம் வந்து பேசும் வரையில் காத்திருக்காமல் நீங்களே அவர்களை கண்டு பேசுங்கள். உங்களின் துணைவரையோ அல்லது நெருக்கமான ஒருவரையோ இழந்த காரணத்தினால், நீங்கள் வேதனைக்குள்ளாகி தனிமையில் வாடுகிறவர்கள் என்றால், அவர்களுடன் சேர்ந்து வெளியே சென்று மனதை மேம்படுத்திக் கொள்ளுங்கள். 
 
உங்கள் துணைவரை பிரிந்த துக்கத்தில் இருப்பவர்களானால், ஒரு செல்ல பிராணியை வளர்ப்பது நல்ல யோசனை. நாய் அல்லது பூனை உங்களுக்கு ஒரு நல்ல துணையாக இருக்கும். பெரும்பாலானோர் தனிமையை தவிர்க்க, செல்ல பிராணிகளை வளர்த்து, அதன் மீது முழு அன்பை செலுத்தி வருகின்றனர். இதனால் அந்த பிராணிகளும் உங்கள் மீது அத்தனை அன்பை செலுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 
 
 மற்றவர்களை வேதனை படும் வகையில் அவர்களை கேலி செய்வது நல்லது அல்ல. மற்றவர்களை பாராட்டுவது, அவர்களின் உடை அழகாக உள்ளது என சொல்வது ஒரு பெரிய ஐஸ் வைக்கும் ரகசியம். இதனால் அவர்கள் நீங்கள் அவர்களை கேலி செய்வதில்லை என்பதை நம்புவர். உங்கள் வருகை ஒரு சாந்தமாகவும் அன்பாகவும் இருந்தால் அனைவரையும் கவரலாம். தனிமைக்கு விடை கொடுங்கள், அனைவருடன் சேர்ந்து சந்தோசமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Labels:

குறைந்த செலவில் காதலியுடன் ஊர் சுற்றுவது எப்படி?

காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்காக செலவு செய்வது இயற்கையானது தான். ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போது சில சமயங்களில் பணம் இருக்காது. ஏனெனில் ஏற்கனவே, அவர்களை அழைத்துச் சென்றதால், அனைத்து பணமும் செலவாகிவிட்டிருக்கும். எனவே எப்போதும் அவர்களை வெளியே அழைத்து செல்லும் போது, அதிகமாக செலவாகாமல், ஆனால் நன்கு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால், இப்போது சற்று புதுமையாக யோசித்தால், நிச்சயம் சந்தோஷத்துடன், கையில் இருக்கும் பணத்தையும் சேமிக்க முடியும். இதற்காக கஞ்சமாக இருக்க வேண்டியதில்லை. 
 
ஒருசில வித்தியாசமான யோசனைகள் இருந்தாலே, நன்றாக ஊர் சுற்ற முடியும். இப்போது அவ்வாறு உங்கள் காதலியுடன் குறைந்த செலவில் ஊர் சுற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சில டிப்ஸ்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதாவது, எந்த மாதிரியான செயல்கள் அல்லது இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம் என்று சில யோசனைகளை கூறுகின்றனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் காதலியுடன் உல்லாசமாக இருங்கள்.

இரவு விருந்து 
 
வீட்டிலிருந்த படியே ஒரு வேளை சாப்பாடு செய்வது குறைந்த செலவையும் மற்றும் ருசியான உணவையும் கொடுக்க கூடியதாக இருக்கும். அதிலும் நீங்களே சமைத்தால், அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. பின் அப்படியே சில மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தால், ஒரு அற்புதமான காதல் உணர்வு பெருக்கெடுத்து ஓடும்.

பூங்கா 
 
 தனிமையில் இருக்க வேண்டும் என்று நினைத்தால், அப்போது காதலியை பூங்கா அல்லது வேறு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றால், அப்போது இருவரும் நன்கு மனம் விட்டு பேச முடியும். பொதுவாக பேசுவதற்கு தானே ஊர் சுற்ற வேண்டும் என்று இருக்கிறோம். எனவே, இந்த இடத்திற்கு அழைத்துச் சென்றால், நன்கு ரொமான்ஸ் செய்வதோடு, பணமும் செலவாகாமல் இருக்கும்.

நடைப்பயணம்
 
 நீங்களும் உங்கள் துணையும் இயற்கை விரும்பிகளாக இருக்கும் பட்சத்தில், இது உண்மையிலேயே மிகவும் செலவு குறைந்த சந்திப்பாக இருக்கும். இந்த பயணத்தில் உங்களுக்கு ஆகும் செலவு வழியை கண்டுபிடித்தவாறு நடந்து கொண்டிருப்பதும், மற்றும் நொறுக்குத் தீனிகளும் மட்டுமே! இதற்கு நீங்கள் இருவரும் உடல் மற்றும் மனரீதியாக தயாராக இருக்க வேண்டியது அவசியம்.

புகைப்படம் எடுத்தல் 
 
கையில் ஒரு கேமராவை வைத்துக் கொண்டு, கண்ணைக் கவரும் காட்சிகளை 'க்ளிக்' செய்யும், இந்த புகைப்பட பயணம் நிச்சயம் குதூகலமாக இருக்கச் செய்யும். டிஜிட்டல் கேமரா இல்லையென்றாலும் கூட, ஒரு சாதாரண கேமரா இந்த பயணத்தை தொடங்க போதுமானதாகவும், செலவை சிக்கனமானதாகவும் வைத்திருக்கும். எப்படியெனில் இந்த முறையில் ஆங்காங்கு நின்று புகைப்படங்கள் எடுக்கும் போது, அது சிறந்த ஒரு பொழுதுபோக்காக இருக்கும். இதனால் இருவருக்கும், அந்த தருணம் மிகவும் சிறப்பானதாக, மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

விளையாட்டு 
 
ஏதேனும் பப் அல்லது டிஸ்கோ சென்று, அங்கு இருக்கும் ஏதேனும் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே, விலைக் குறைவான ஏதேனும் உணவு அல்லது பானங்களை வாங்கி, பேசிக் கொண்டே விளையாடலாம். இந்த சந்திப்பு, கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும்.

டான்ஸ் நிகழ்ச்சி 
 
வெளியே செல்ல நினைக்கும் நாட்களில், நீங்கள் இருப்பது பெரிய நகரமாக இருந்தால், அந்த ஊரில் நடக்கும் ஏதேனும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றால், நன்றாக இருக்கும். இதனால் நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்ந்து ஆடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதுவும் குறைந்த செலவில் உள்ள ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

டான்ஸ் வகுப்பு 
 
 பல்வேறு நடன நிறுவனங்கள் தொடக்க நிலை நடன வகுப்புகளை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ வழங்குகின்றன. எனவே நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்ந்து கொண்டால், அந்த வகுப்பில் உள்ள ஸ்விங், ஸல்சா, அல்லது டாங்கோ வகை நடனங்கள் கொஞ்சம் அதிகமான நெருக்கத்தை தருவதோடு, மிகுந்த சந்தோஷத்தையும் கொடுக்கும்.

சுற்றுலா 
 
உங்கள் காதலியை ஏதேனும் ஒரு தனிமையான இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். இவ்வாறு செல்லும் போது, வீட்டில் ஏதேனும் உணவுப் பொருட்களை செய்து கொண்டு போகலாம். மேலும் அந்த இடத்தில் அவர்கள் மடியில் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தால், பசி உணர்வு கூட இல்லாத அளவில் ரொமான்ஸ் கொடி கட்டி பறக்கும்.

நீச்சல் குளம்/கடற்கரை 
 
வீட்டிற்கு அருகில் கடற்கரை அல்லது நீச்சல் குளம் இருந்தால், வீட்டில் உணவை சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாக கடற்கரை அல்லது நீச்சல் குளத்தில் உட்கார்ந்து பேச சரியானதாக இருக்கும். இதனால் அதிகமான செலவைத் தடுக்கலாம்.

Labels: