Thursday, 30 May 2013

புதினா பன்னீர் புலாவ்

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புதினாவின் வாசம் பலருக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே எங்கு ஹோட்டலுக்கு சென்றாலும், பலர் அந்த புதினா ஃப்ளேவரில் உள்ள உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அதிலும் தென்னிந்திய உணவுகளில் பல்வேறு ஃப்ளேவர்களில் பல கலவை சாதங்கள் உள்ளன. அவை எலுமிச்சை சாதம், புளி சாதம், பருப்பு சாதம் போன்றவை. அந்த வகையில் புதினாவைக் கொண்டு ஏன் ஒரு கலவை சாதம் செய்ய முடியாது. நிச்சயம் செய்யலாம். 
 
அதிலும் எளிமையான முறையில், புதினாவையும், பன்னீரையும் கொண்டு அருமையாக ஒரு கலவை சாதம் செய்ய முடியும். இது ஒரு சிறந்த காலை உணவாகவும் இருக்கும். இப்போது அந்த புதினா பன்னீர் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

mint paneer pulao easy rice recipe
தேவையான பொருட்கள்: 
 
பாசுமதி அரிசி - 2 கப் 
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது) 
புதினா - 1 கட்டு 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
கிராம்பு - 4 
பட்டை - 1 இன்ச் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 4 கப் 
 
செய்முறை: 
 
 முதலில் அரிசியை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கழுவிய அரிசியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்க விட்டு, சாதமாக வந்த பின் இறக்கி விட வேண்டும். 
 
பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, சாதத்தை லேசாக குளிர வைக்க வேண்டும்.
 
 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 2-3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் புதினாவை கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
 
 இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 2-3 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான புதினா பன்னீர் புலாவ் ரெடி!!!

Labels:

பழம் மற்றும் சீஸ் டோஸ்ட்

வேலைக்கு செல்பவர்கள், காலை வேளையில் சமைப்பதற்கு நேரம் இல்லாமல் போவதால், பலர் காலை உணவு சாப்பிடுவதை தவிர்த்துவிடுகின்றனர். எனவே அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில் ஒரு பிரட் டோஸ்ட் செய்யலாம். 
 
அதுவும் பழங்களில் ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி மிகவும் ஆரோக்கியமானது என்பதால், அதனை சேர்த்து சூப்பரான முறையில் எப்படி டோஸ்ட் செய்வதென்று பார்ப்போம். முக்கியமாக இதன் சிறப்பு என்னவென்றால், அதற்கு அடுப்பு அதிகம் தேவைப்படாது.

fruit cheese toast breakfast
தேவையான பொருட்கள்: 
 
பிரட் - 4 துண்டுகள் 
சீஸ் - 2 துண்டுகள் 
ஆப்பிள் - 1/2 (சிறு துண்டுகளாக்கப்பட்டது) 
ஸ்ட்ராபெர்ரி - 4 (நறுக்கியது) 
வெள்ளரிக்காய் - 8 துண்டுகள் 
தேன் - 1 டேபிள் ஸ்பூன் 
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன் 
வெள்ளை மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் பிரட்டை டோஸ்டரில், பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ளவும் அல்லது தோசைக்கல்லில் போட்டும் பொன்னிறமாக டோஸ்ட் செய்யலாம். 
 
அதே நேரம், அனைத்து பழங்களையும் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சீஸை இரண்டாக நறுக்கி, ஒரு துண்டை பிரட்டின் மேல் வைத்து, பின் அதன் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, இறுதியில் ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை வைத்து, அதன் மேல் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து பரிமாறினால், சூப்பரான பழம் மற்றும் சீஸ் டோஸ்ட் ரெடி!!!

Labels:

வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட்

கோடையில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சி அதிகம் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு, அவ்வப்போது காய்கறி மற்றும் பழங்களை சாலட் போன்று செய்வது மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியில் அதிக நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. 
 
எனவே இத்தகையவற்றை வைத்து, காலையில் வேகமாகவும், ஆரோக்கியமானதாகவும் ஒரு லைட் உணவு சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், அதற்கு இவைகளைக் கொண்டு சாலட் செய்து சாப்பிடலாம். அந்த வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியைக் கொண்டு எப்படி சூப்பரான ஒரு சாலட் செய்வதென்று பார்ப்போமா!!!

cucumber tomato salad
தேவையான பொருட்கள்: 
 
வெள்ளரிக்காய் - 1 
தக்காளி - 1 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
புதினா - சிறிது (நறுக்கியது) 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் 
ஆலிவ் ஆயில் - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் எலுமிச்சை சாற்றில் புதினா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் எலுமிச்சை சாறு கலவை மற்றும் ஆலிவ் ஆயிலை தெளித்து, பரிமாறினால், சூப்பரான வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சாலட் ரெடி!!!

Labels:

பீட்ரூட் மசாலா

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் சிலருக்கு பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், பிடிக்காது. ஆனால் அத்தகைய பீட்ரூட்டை விரும்பி சாப்பிடும் வகையில் சமைத்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியெனில் அதற்கு பீட்ரூட் மசாலா தான் சிறந்தது
 
இப்போது அந்த பீட்ரூட் மசாலாவை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போமா!!!


beetroot masala recipe
தேவையான பொருட்கள்: 
 
பீட்ரூட் - 2 அல்லது 2 1/2 கப் (துருவியது அல்லது துண்டுகளாக்கப்பட்டது) 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
 செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, துருவிய அல்லது துண்டுகளாக்கப்பட்ட பீட்ரூட்டை சேர்த்து, 4-5 நிமிடம், தீயை குறைவில் வைத்து வதக்கி விட வேண்டும். 
 
பின்பு அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பீட்ரூட் வேகும் வரை மூடி வைக்க வேண்டும். பீட்ரூட்ரானது வெந்ததும், அதனை இறக்கி சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பரான இருக்கும்

Labels:

முட்டைகோஸ் கட்லெட்

மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை ட்ரை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறை.


cabbage cutlet snacks
தேவையான பொருட்கள்: 
 
முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது) 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது) 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
பிரட் தூள் - 1/2 கப் 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 1/2 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, கட்லெட் போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். 
 
 பிறகு மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, 1/2 கப் நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் தட்டி வைத்துள்ள கலவையை, மைதா மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைக்க வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கட்லெட் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்கவும். 
 
இப்போது சுவையான முட்டைகோஸ் கட்லெட் ரெடி!!!

Labels:

சப்பாத்தி ஃபுரூட் ரோல்

பெரும்பாலான வீடுகளில் இரவில் சப்பாத்தி செய்தால், நிச்சயம் 3-4 சப்பாத்திகளாவது எஞ்சியிருக்கும். அத்தகைய நிலையில் அதனை தூக்கிப் போடாமல், அதனை வைத்து நாம் சில்லி சப்பாத்தி செய்வோம். 
 
ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக, எஞ்சிய சப்பாத்திகள் மற்றும் வீட்டில் ஏதேனும் பழங்கள் இருந்தால், அதனைக் கொண்டு சப்பாத்தி ஃபுரூட் ரோல் செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!
chapathi fruit roll recipe
தேவையான பொருட்கள்: 
 
சப்பாத்தி - 2 
ஆப்பிள் - 1/2 (பொடியாக நறுக்கியது) 
திராட்சை - 5 
மாதுளை - 2 டேபிள் ஸ்பூன் 
பேரிக்காய் - 1/2 (பொடியாக நறுக்கியது) 
வாழைப்பழம் - 1 (பொடியாக நறுக்கியது) 
மயோனைஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் 
 
செய்முறை:  
 
முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள பழங்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் சாட் மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின்னர் சப்பாத்தியை தோசைக்கல்லில் போட்டு, லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்பு சப்பாத்தியின் மேல் மயோனைஸை தடவி, அதன் மேல் சிறிது உப்பு தூவி, பழக் கலவையை சப்பாத்தியின் மேல் வைத்து, ரோல் போல் செய்து கொள்ள வேண்டும். 
 
இதேப் போன்று மற்றொரு சப்பாத்தியையும் செய்ய வேண்டும். 
 
இப்போது சுவையான சப்பாத்தி ஃபுரூட் ரோல் ரெடி!!!

Labels:

சுவையான... பீன்ஸ் பொரியல்

பீன்ஸ் பொரியல், கலோரி குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ள ஒரு ஆரோக்கியமான டிஷ். அதுமட்டுமல்லாமல், பீன்ஸ் பொரியலானது மிகவும் சுவையானதும் கூட. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் பீன்ஸ் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இப்போது பீன்ஸ் பொரியலின் எளிமையான செய்முறை.

beans poriyal delicious vegetarian recipe
தேவையான பொருட்கள்: 
 
பீன்ஸ் - 250 கிராம் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
வரமிளகாய் - 1 
கறிவேப்பிலை - சிறிது 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை: 
 
முதலில் பீன்ஸை கழுவி, அதன் இருமுனைகளையும் அகற்றி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு சிறு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய பீன்ஸை போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
 
பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
 பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து, 1 நிமிடம் தாளிக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
அடுத்து பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றிரண்டாக வேக வைத்துள்ள பீன்ஸ் சேர்த்து, வடித்து வைத்துள்ள தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். 
 
தண்ணீர் முழுவதும் வற்றியதும், துருவிய தேங்காய் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, இறக்கி விடவும். இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி!!!

Labels:

பசலைக் கீரை கச்சோரி

கச்சோரியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு கச்சோரி தான் பசலைக் கீரை கச்சோரி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். அதிலும் இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இந்த ஸ்நாக்ஸை கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. 
 
எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இப்போது அந்த பசலைக் கீரை கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

crispy spinach kachori
தேவையான பொருட்கள்:  
 
பசலைக் கீரை - 1 கட்டு 
கோதுமை மாவு - 2 கப் 
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) 
ஓமம் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 
 
 
முதலில் பசலைக் கீரையை சுத்தம் செய்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.
 
 பின்னர் அதனை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, தண்ணீர் முற்றிலும் வடியும் வரை வைக்க வேண்டும். 
 
பிறகு பசலைக் கீரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, இஞ்சி, ஓமம், உப்பு, மிளகாய் தூள் மற்றும் அரைத்த பசலைக் கீரையை ஊற்றி, வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து, போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் 5 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான பசலைக் கீரை கச்சோரி ரெடி!!!

Labels:

காரமான அடை தோசை

தென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. அதிலும் தோசையில் ஒன்றான அடை தோசை தமிழ் நாட்டில மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தோசையின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பருப்புக்களை, அரிசியுடன் சேர்த்து அரைத்து, தோசைகளாக விடுவது தான். 
 
மேலும் அடை தோசை மிகவும் காரமான ஒரு ரெசிபி. அந்த அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

adai dosa spicy breakfast recipe
தேவையான பொருட்கள்: 
 
ரவை - 1/2 கப் 
இட்லி அரிசி - 1/2 கப் 
கொண்டைக்கடலை - 1/2 கப் 
துவரம் பருப்பு - 1/3 கப் 
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
துருவிய தேங்காய் - 1/3 கப் 
வரமிளகாய் - 3-4 
கறிவேப்பிலை - சிறிது 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1/2 கப்

செய்முறை:  
 
முதலில் இட்லி அரிசியை இரவில் படுக்கும் முன், நீரில் ஊற வைத்து விட வேண்டும். அதேப் போல் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றையும் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
 
 பின் காலையில் எழுந்து ஊற வைத்துள்ள அனைத்து பருப்புக்களையும் நன்கு நைஸாக அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும் பிறகு கிரைண்டரில் ஊற வைத்துள்ள அரிசியை கழுவிப் போட்டு, வரமிளகாய், துருவிய தேங்காய், சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு அரைத்து வைத்துள்ள பருப்புடன், இந்த தோசை மாவை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கலந்து, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி, 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மாவை, தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். 
 
 இப்போது சுவையான மற்றும் காரமான அடை தோசை ரெடி!!! 
 
இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா

சோலே பாலக் மசாலா என்னும் கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா, பஞ்சாபில் மிகவும் பிரபலமானது. மேலும் இது மிகவும் சுவையானது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ரெசிபிக்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்த மசாலாவானது மிகவும் காரமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக இந்த மசாலா சாதம் மற்றும் சப்பாத்திக்கு சரியானதாக இருக்கும். 
 
இப்போது அந்த கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

choley palak masala recipe
தேவையான பொருட்கள்:  
 
கொண்டைக்கடலை - 250 கிராம் 
பசலைக் கீரை - 1 கட்டு 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 3 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
பட்டை - 1 
சீரகம் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில் கொண்டைக்கடலையை நீரில் 5 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
 பின்பு கீரை சுத்தம் செய்து, தனியாக நீரில் அலசி வைக்க வேண்டும். பின் மிக்ஸியில் கீரை மற்றும் பச்சை மிளகாய் போட்டு, அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
 அடுத்து நறுக்கிய தக்காளி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைக்க வேண்டும். பின் அரைத்த பசலைக் கீரையை சேர்த்த, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 
 
 இறுதியில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையில் உள்ள நீரை வடித்துவிட்டு, இத்துடன் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஏலக்காய் பொடியைத் தூவி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையான கொண்டைக்கடலை பசலைக் கீரை மசாலா ரெடி!!!

Labels:

மீல் மேக்கர் மசாலா

பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த மீல் மேக்கரை மதிய வேளையில் சாதத்திற்கு, மசாலாவாக செய்து கூட சாப்பிடலாம். ஆம், இது சற்று வித்தியாசமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி. மேலும் அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும். ஆகவே இன்று மதியம் ஏதாவது ஒரு வித்தியாசமான ரெசிபி செய்ய நினைப்போருக்கு இது சரியானதாக இருக்கும். அந்த மீல் மேக்கர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். 
 
அதைப் படித்து செய்து பார்த்து, சுவை எப்படி இருந்தென்று சொல்லுங்கள். 
meal maker masala with coconut milk
தேவையான பொருட்கள்:  
 
மீல் மேக்கர் - 250 கிராம் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
தண்ணீர் - 1 1/2 கப் (வெதுவெதுப்பானது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 


செய்முறை: 
 
 முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 
 
ப்போது மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். மசாலாவானது நன்கு கொதித்ததும், தீயை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அருமையான மீல் மேக்கர் மசாலா ரெடி!!!

Labels:

கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா

மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று. இது மிகவும் சுவையானதும் கூட. மட்டனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குருமா, மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல. இவை அனைத்துமே மிகவும் சுவையானது. இத்தகைய மட்டனை பல ஸ்டைலில் சமைக்கலாம். அதில் எப்போதும் செட்டிநாடு தான் பிரபலமானது. இப்போது அவற்றில் ஒரு ஸ்டைலான கேரளா ஸ்டைலில் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். 
 
அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.

mutton korma kerala style recipe  
தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது) 
பூண்டு - 5 பல் (நறுக்கியது) 
தேங்காய் பால் - 1/2 கப் 
பட்டை - 1 
ஏலக்காய் - 3 
கிராம்பு - 3 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் 
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது) 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
வினிகர் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:  
 
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
 பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
 
பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!!! 
 
இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

Labels:

மட்டன் ரோகன் ஜோஷ்

மட்டன் ரோகன் ஜோஷ் ஒரு காஷ்மீரி ஸ்டைல் உணவுகளில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபி காஷ்மீரி அசைவ உணவுகளிலேயே மிகவும் சுவையானது. மேலும் இதனை வீட்டில் விருந்தினர்கள் வரும் போது செய்தால், சற்று ஸ்பெஷலான மட்டன் ரெசிபி போன்று இருப்பதால், நல்ல பாராட்டைப் பெறலாம். 
 
இப்போது இந்த மட்டன் ரோகன் ஜோஷ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
mutton rogan josh kashmiri delight
தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 1 கிலோ 
வெங்காயம் - 4 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை ஏலக்காய் - 5 
பிரியாணி இலை - 2 
கிராம்பு - 6 
மிளகு - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் 
சோம்பு தூள்- 1 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி பொடி - 1 டேபிள் ஸ்பூன் 
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தயிர் - 1 கப் 
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
வெதுவெதுப்பான நீர் - 4 
கப் உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில் மட்டனை நன்கு கழுவி, அதில் தயிர், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 மணிநேரம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, மிளகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். 
 
 பின்பு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும். 
 
பிறகு ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
அடுத்து வெதுவெதுப்பான நீரை சேர்த்து, உப்பு மற்றும் இஞ்சி பொடி சேர்த்து, 15 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 15 நிமிடம் ஆன பின், அதனை ஒரு முறை கிளறிவிட்டு, மீண்டும் 25-30 நிமிடம் மூடி வைத்து, மட்டன் வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையான மட்டன் ரோகன் ஜோஷ் ரெடி!!! 
 
இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.




Labels:

சூரை மீன் கட்லெட்

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் உருளைக்கிழங்கு கட்லெட் தான் அனைவரது மத்தியிலும் மிகவும் பிரபலமானது. ஆனால் மீனை வைத்து கட்லெட் செய்வது மிகவும் அரிதானது. ஏனெனில் அதில் முள் இருப்பதால், பெரும்பாலானோர் மீன் கொண்டு கட்லெட் செய்யமாட்டார்கள். 
 
இப்போது மீன்களில் ஒன்றான டூனா எனப்படும் சூரை மீனைக் கொண்டு, எளிதான முறையில் எப்படி கட்லெட் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் செய்து மகிழுங்கள். 
canned tuna fish cutlets
தேவையான பொருட்கள்: 
 
சூரை மீன் - 2 சிறிய டின் 
வெங்காயம் - 2 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது 
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
முட்டை - 1-2 (நன்கு அடித்தது) 
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, மசித்தது) 
பிரட் தூள் - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாவிற்கு... 
 
கிராம்பு - 2 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் 
பட்டை - 3 சிறிய துண்டுகள் 
 
செய்முறை: 
 
முதலில் கரம் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை லேசாக 2 நிமிடம் வறுத்து, குளிர வைத்த, பின் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் சூரை மீனை நன்கு சுத்தமாக கழுவி, துண்டாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். 
 
பின்பு துண்டுகளாக்கப்பட்ட மீனை சேர்த்து, மீன் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும். (குறிப்பாக தண்ணீர் சேர்க்கக்கூடாது.) 
 
 பின்னர் அந்த மீன் கலவையை குளிர வைத்து, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து, கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை கட்லெட் போன்று தட்டையாகவோ அல்லது வட்டமாகவோ தட்டி, அதனை அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். 
 
இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள மீன் கலவையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூரை மீன் கட்லெட் ரெடி!!! இதனை தக்காளி/புதினா சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

Labels:

சிக்கன் பூனா

சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும். இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். 
 
இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
easy recipe chicken bhuna
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) 
பூண்டு - 12 பற்கள் 
வரமிளகாய் - 10 
கிராம்பு - 4 
பச்சை ஏலக்காய் - 4 
பட்டை - 2 
சீரகம் - 1 டீஸ்பூன் 
தயிர் - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 

செய்முறை:  
 
முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும். பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 
 
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும். 
 
 விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.

Labels:

காலிஃப்ளவர் முட்டை டிப்

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான காலிஃப்ளவரை வைத்து வறுவல், பஜ்ஜி, மஞ்சூரியன் போன்றவற்றை செய்திருப்போம். அதனை முட்டையுடன் சேர்த்து செய்திருக்கமாட்டோம். ஆனால் இப்போது காலிஃப்ளவரை, முட்டை மற்றும் சில மசாலாப் பொருட்களில் நனைத்து, எண்ணெயில் பொரித்து ஒரு வித்தியாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸை செய்யலாம். 
 
அதற்கு காலிஃப்ளவர் முட்டை டிப் என்று பெயர். இது மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!! 
cauliflower egg dip
தேவையான பொருட்கள்: 
 
 காலிஃப்ளவர் - 1 கப் 
முட்டை - 3 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் 
சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை முட்டைக் கலவையில் நனைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் முட்டை டிப் ரெடி!!!

Labels:

சேலம் மட்டன் குழம்பு

மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும். 
 
இப்போது சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
 
salem mutton curry recipe
தேவையான பொருட்கள்: 
 
 மட்டன் - 3/4 கிலோ 
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
பட்டை - 2 
மிளகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
கசகசா - 1 டீஸ்பூன் 
தேங்காய் - 1 மூடி (துருவியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் 
வரமிளகாய் - 10 
கிராம்பு - 2 
ஏலக்காய் - 2 
பிரியாணி இலை - 1 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
 
 முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். 
 
பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். 
 
பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். 
 
இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!

Labels:

Wednesday, 29 May 2013

தேங்காய் மட்டன் குழம்பு

சைவ பிரியர்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்கும். அத்தகைய மட்டனை வைத்து பல ஸ்டைலில் குழம்பு செய்யலாம். அந்த வகையில் செட்டிநாடு ஸ்டைல் தான் மிகவும் பிரபலமானது. ஆனால் அதைத் தவிர வேறு சில மட்டன் குழம்புகளும் உள்ளன. 
 
அதில் இப்போது தென்னிந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்யும் ஒரு சுவையான மற்றும் எளிமையான தேங்காயை அரைத்து செய்யப்படும் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் செய்து பாருங்களேன்.
coconut mutton curry recipe
தேவையான பொருட்கள்: 
 
மட்டன் - 500 கிராம் 
தேங்காய் - 1/2 கப் (துருவியது) 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 3 
சோம்பு - 1 டீஸ்பூன் 
பட்டை - 1 
பச்சை ஏலக்காய் - 2 
கிராம்பு - 3 
கறிவேப்பிலை - சிறிது 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் 
கொத்தமல்லி - சிறிது 
 
செய்முறை:  
 
முதலில் மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனைப் போட்டு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, தக்காளி சேர்த்து மற்றொரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை நீருடன் ஊற்றி, வேண்டுமெனில் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
குழம்பானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையான தேங்காய் மட்டன் குழம்பு ரெடி!!!

Labels:

சிக்கன் நிஹாரி

லக்னோவில் மிகவும் பிரபலமான சிக்கன் குழம்பு தான் சிக்கன் நிஹாரி. பொதுவாக நிஹாரியானது மட்டன் அல்லது மாட்டுக்கறியை வைத்து தான் செய்வார்கள். ஆனால் இங்கு அதற்கு பதிலாக, சிக்கனை சேர்த்து செய்கிறோம். 
 
இந்த சிக்கன் ரெசிபியில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், இதில் முதலில் சிக்கனை வறுத்து, பின் குழம்பில் கோதுமை மாவை சேர்த்து சமைப்பது தான். சொல்லப்போனால், இது ஒரு வித்தியாசமான ஒரு சிக்கன் குழம்பு. 
 
இந்த வாரம் வீட்டில் இந்த சிக்கன் ரெசிபியை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாமே! சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
delicious chicken nihari
தேவையான பொருட்கள்: 
 
சிக்கன் - 1 கிலோ (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) 
வெங்காயம் - 3 (நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லி தூள் - 1 டீஸ்பூன் 
பிரியாணி இலை - 1 
பட்டை - 1 
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் 
 
மசாலாவிற்கு...  
 
சோம்பு - 2 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் 
பச்சை ஏலக்காய் - 4 
கருப்பு ஏலக்காய் - 1 
கிராம்பு - 8 
மிளகு - 18 
பட்டை - 1 
பிரியாணி இலை - 1 
இஞ்சி பொடி - 1 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
 முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை அனைத்தையும், மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் 1 டீஸ்பூன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் நன்கு கொதிக்கவிட வேண்டும். 
 
பின்பு வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அத்துடன் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்ட, உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறிவிட்டு, மீதமுள்ள அரை கப் தண்ணீரில் கோதுமை மாவை கரைத்து ஊற்றி, மூடி வைத்து, 45 நிமிடம் தீயை குறைவில் வைத்து நன்கு கொதிக்க விடவும். 
 
பின்னர் மூடியை திறந்து சிக்கன் வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு, அதனை இறக்கி விட வேண்டும். பிறகு மற்றொரு சிறு வாணலியில் நெய்யை ஊற்றி, அதில் 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் 1 டீஸ்பூன் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, அதனை இறக்கி வைத்துள்ள சிக்கன் குழம்பின் மீது ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான சிக்கன் நிஹாரி தயார்!!! 
 
இதனை சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.


Labels:

தயிர் பெர்ரி ஸ்மூத்தி

உடற்பயிற்சி செய்த பின்னர், குடிப்பதற்கு ஏற்ற பானங்களுள் ஒன்று தான் தயிர் பெர்ரி ஸ்மூத்தி. இதன் பெயரிலேயே இதற்கு தேவையான பொருட்கள் நன்கு தெரிகிறது. இந்த பானம் உடலுக்கு வேண்டிய சக்திகளை கொடுப்பதில் சிறந்தது. 
 
மேலும் இது குழந்தைகளுக்கு பிடித்த சுவையிலும் இருக்கும். அதுமட்டுமின்றி இது விரைவில் செய்யக்கூடியதும் கூட. இப்போது இந்த தயிர் பெர்ரி ஸ்மூத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

yogurt berries smoothie
தேவையான பொருட்கள்: 
 
ஸ்ட்ராபெர்ரி - 5 
ராஸ்ப்பெர்ரி - 5 
ப்ளூபெர்ரி - 10 
தயிர் - 1/2 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் பெர்ரிப் பழங்களை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதில் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, அத்துடன் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ருசியான தயிர் பெர்ரி ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

சாக்லெட் மில்க் ஷேக்

சாக்லெட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வுகள் பலவற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே தினமும் சிறிது சாக்லெட் சாப்பிடுவது மிகவும் நல்லது என மருத்துவர்களே சொன்ன பின்னர், சாக்லெட்டை எப்படி சாப்பிட்டால் என்ன? மேலும் பலருக்கு சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். 
 
பலர் சாக்லெட் சுவையில் உள்ளவற்றை விரும்பி சாப்பிடுவர். அதிலும் சாக்லெட் மில்க் ஷேக் என்றால் சொல்லவா வேண்டும். இது அருமையான பானம் மட்டுமின்றி, எனர்ஜியைத் தரும் பானமும் கூட. இப்போது அந்த சாக்லெட் மில்க் ஷேக்கை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!
easy chocolate milkshake  
தேவையான பொருட்கள்: 
 பால் - 1 கப் 
சாக்லெட் சிரப் - 2 டீஸ்பூன் 
சர்க்கரை - 2 டீஸ்பூன் 
வென்னிலா ஐஸ் க்ரீம் - 1 ஸ்கூப் 
 
செய்முறை: 
 
முதலில் மிக்ஸி/பிளெண்டரில் பால், சாக்லெட் சிரப், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
 பின்னர் அதில் வென்னிலா ஐஸ் க்ரீமை சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான சக்லெட் மில்க் ஷேக் ரெடி!!!

Labels:

புதினா ஜூஸ்

கோடையில் உடல் மிகுந்த வெப்பத்துடன் இருக்கும். இந்த வெப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர் மட்டும் போதாது, ஒருசில ஜூஸ்களையும் குடிக்க வேண்டும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் புதினா. அத்தகைய புதினாவை வைத்து, வித்தியாசமான சுவையில் ஒரு ஜூஸை போட்டு குடித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடனும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இப்போது அந்த புதினா ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
 
தேவையான பொருட்கள்: 
 
புதினா இலை - 2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
சர்க்கரை - 3 டீஸ்பூன் 
உப்பு - 1 சிட்டிகை 
 
செய்முறை:

முதலில் புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதில் எலுமிச்சை சாறு, சீரகப் பொடி, மிளகு தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, ஸ்பூன் வைத்து கிளறி, குளிர வைத்து பின் பரிமாறினால், சூப்பரான புதினா ஜூஸ் ரெடி!!!

Labels:

குலாபி ஃபெர்னி

ஃபெர்னி என்பது ஒரு வட இந்திய இனிப்பு ரெசிபிக்களில் பால் மற்றும் அரிசியைக் கொண்டு செய்யக்கூடியது. பொதுவாக இந்தியாவில் ஏதேனும் விஷேசம் என்றால் பாயாசம், கேசரி போன்றவற்றை காலை வேளையில் செய்து சாப்பிடுவது வழக்கம். 
 
அந்த வகையில் அன்னையர் தினம் வரப் போகிறது. அந்த தினத்தன்று அன்புள்ளம் கொண்ட அம்மாக்களுக்கு ஸ்பெஷலாகவும், அவர்களுக்கு புதுமையானதாகவும் ஏதேனும் ஒரு ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு குலாபி ஃபெர்னி சரியானதாக இருக்கும். 
 
இப்போது அந்த குலாபி ஃபெர்னியை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!
mother s day special gulabi firni  
தேவையான பொருட்கள்: 
 
பாசுமதி அரிசி - 1/2 கப் 
பால் - 1 லிட்டர் 
சர்க்கரை - 1/2 கப் 
ரோஸ் சிரப் - 4 டேபிள் ஸ்பூன் 
பச்சை ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பிஸ்தா - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 
தண்ணீர் - 1/2 கப் 
ரோஸ் இதழ்கள் - அலங்கரிக்க 
 
 செய்முறை:  
 
பாசுமதி அரிசியை 1/2 கப் தண்ணீரில், 1 மணிநேரத்திற்கு ஊற வைத்துக் கொண்டு, பின் அதனை மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
பின்னர் அதில் ரோஸ் சிரப் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். 
 
அடுத்து அரைத்து வைத்துள்ள பாசுமதி அரிசியை, பாலுடன் சேர்த்து, தொடர்ந்து கெட்டி கெட்டியாக இருக்காதவாறு 15 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 
 
கலவையானது சற்று கேசரி போன்ற பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும். 
 
பின்பு அதன் மேல் ஏலக்காய் பொடி தூவி, கிளறி விட்டு, குளிர வைத்து, பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அதன் மேல் ரோஜா இதழ்கள் மற்றும் பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறினால், சுவையான குலாபி ஃபெர்னி ரெடி!!!

Labels:

போஹா செய்து அம்மாக்களை அசத்தலாமா!!!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம். இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள். இதுவரை அம்மாக்கள் தான் சமையல் செய்து கொடுப்பார்கள். ஆனால் அன்னையர் தினத்தன்று, அம்மாக்களை உட்கார வைத்து, அவர்கள் மகிழும் வகையில், அவர்களுக்கு ஏதேனும் ஒரு இனிப்பு பலகாரம் செய்து கொடுக்கலாம். 
 
அதில் செய்வதற்கு எளிமையாகவும், சுவையுடனும் இருக்கும், இந்த போஹா ரெசிபி சரியானதாக இருக்கும். சரி, அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

poha recipe your sweet mom  
தேவையான பொருட்கள்: 
 
கோதுமை மாவு - 2 கப் 
சர்க்கரை - 1 கப் 
பால் - 1 1/2 கப் 
துருவிய தேங்காய் - 1 கப் 
எண்ணெய் - 1 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, சர்க்கரை, தேங்காய் சேர்த்து கிளற வேண்டும். 
 
பின்னர் அக்கலவையில் பாலை பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பின் அந்த மாவுக் கலவையை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான போஹா ரெசிபி ரெடி!!!

Labels:

கோடைக்கு இதமான... கேசார் பிஸ்தா குல்பி!!!

கொளுத்தும் கோடையில் நன்கு குளுகுளுவென, ஏதாவது உடலுக்கு இதத்தைக் கொடுக்கும் ஐஸ் க்ரீம், மில்க் ஷேக், ஸ்மூத்தி மற்றும் குல்பி போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். மேலே சொன்னவற்றில் அனைவருக்கும் ஐஸ் க்ரீம், மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றை நன்கு செய்யத் தெரியும். ஆனால் குல்பியை செய்யத் தெரியுமா என்று கேட்டால், பலரும் தெரியாது என்று தான் சொல்வார்கள். பொதுவாக நாம் குல்பியை இரவில் தான் சாப்பிடுவோம். 
 
ஏனெனில் அப்போது தான் விற்றுக் கொண்டு வருவார்கள். அது வரைக்கும் நாம் அதனை சாப்பிடுவதற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தெரிந்தால் எதற்கு காத்திருக்க வேண்டும். குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை கேசார், பாதாம், பிஸ்தா, மலாய், மாம்பழம், லிச்சி மற்றும் பல போன்றவை. 
 
இத்தகையவற்றில் ஏதாவது ஒன்றை வீட்டிலேயே கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால், அவற்றை இரவில் என்ன எந்த நேரத்திலும் சாப்பிடலாம் அல்லவா! இப்போது அவற்றில் ஒன்றான கேசார் பிஸ்தா குல்பியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
 க்ரீம் பால் - 2 லிட்டர் 
கன்டென்ஸ்ட்டு பால் - 200 மில்லி லிட்டர் 
குங்குமப்பூ - 2 பெரிய சிட்டிகை 
பிஸ்தா - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை: 
 
முதலில் க்ரீம் பாலை பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
பின்னர் அதில் குங்குமப்பூவை போட்டு, தீயை குறைவில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
 பாலானது 2 லிட்டரில் இருந்து 1 லிட்டராக ஆன பின்பு, அதில் கன்டென்ஸ்ட்டு பால், ரோஸ் வாட்டர், ஏலக்காய் பொடி மற்றும் பிஸ்தா சேர்த்து, ஒரு கொதி விட்டு, இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைக்க வேண்டும். 
 
பின்பு அந்த கெட்டியான பாலை, குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவே வைத்து, ஃப்ரீசரில் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
 
 பிறகு காலையில் எழுந்து அதனை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்தால், அந்த கிண்ணமானது எளிதில் வெளியே வந்துவிடும். 
 
பிறகு என்ன, சூப்பரான கேசார் பிஸ்தா குல்பி ரெடி!!!

Labels:

மாம்பழ லஸ்ஸி

லஸ்ஸி ஒரு பாரம்பரிய பானங்களுள் ஒன்றாகும். இது தயிரைக் கொண்டு செய்யப்படும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு வகையான ஜூஸ் எனலாம். அதிலும் இந்த லஸ்ஸியில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம். 
 
அதன் செய்முறையைக் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து, செய்து குடித்து மகிழுங்கள்.
delicious mango lassi
தேவையான பொருட்கள்: 
 
தயிர் - 2 கப் 
நறுக்கிய மாம்பழம் - 2 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது) 
குங்குமப்பூ - 1 சிட்டிகை 
 
செய்முறை: 
 
 முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!


Labels:

நட்ஸ் மில்க் ஷேக்

கோடையில் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில், வீட்டில் எளிமையான முறையில் நட்ஸ் மில்க் ஷேக் செய்து குடியுங்கள். அதிலும் இந்த மில்க் ஷேக்கை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பார்கள். 
 
இப்போது அந்த நிட்ஸ் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் ட்ரை செய்து எப்படியிருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
nuts milk shake energy drink  

தேவையான பொருட்கள்: 
 
பால் - 1 டம்ளர் (கொதிக்க வைத்து, குளிர வைத்தது) 
பாதாம் - 8-10 
பிஸ்தா - 7-8 
பேரிச்சம் பழம் - 2 (விதையில்லாதது) 
வால் நட் - 2 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
சர்க்கரை - தேவையான அளவு 
சாக்லெட் சாஸ் - சிறிது 
 
 செய்முறை:  
 
முதலில் மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 
 
 பின்னர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு, மிக்ஸியிலோ அல்லது பிளெண்டரிலோ ஊற்றி அடித்து, டம்ளரில் ஊற்றி, அதன் மேல் சாக்லெட் சாஸ் ஊற்றி பரிமாறினால், சூப்பரான சுவையில் நட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!


Labels: