Wednesday, 19 November 2014

மட்டன் கீமா சூப்

டயட்டில் இருப்போர் மதிய வேளையில் உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். அதிலும் ஒரு கப் மட்டன் சூப் குடித்தால் மதிய உணவே உட்கொள்ள அவசியமில்லை. 

சரி, உங்களுக்கு மட்டன் கீமா சூப் செய்ய தெரியுமா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள். இங்கு அந்த மட்டன் கீமா சூப்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டன் கீமா சூப்


தேவையான பொருட்கள்: 

மட்டன் கீமா - 100 கிராம் (நன்கு நீரில் கழுவியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - டீஸ்பூன் 
துவரம் பருப்பு - 50 கிராம் (நன்கு நீரில் கழுவியது) உடைத்த 
பாசுமதி அரிசி - 1 டேபிள் ஸ்பூன் (நன்கு நீரில் கழுவியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
நெய் - 3 டீஸ்பூன் 
புதினா - சிறிது 
கொத்தமல்லி - சிறிது 
ஏலக்காய் - 2 பட்டை - 1 இன்ச் 
கிராம்பு - 2 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். 

பின்பு அதில் துவரம் பருப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் மட்டன் கீமா சேர்த்து பிரட்டி, பின் தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். 

பிறகு அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, பாசுமதி அரிசியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கினால், மட்டன் கீமா சூப் ரெடி!!!



Labels: ,

தாம்பத்தியம் நமக்குச் சொல்லித் தரும் வித்தியாசமான விஷயங்கள்!!!

ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். 

அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது. சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். 

காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.



இது மன அழுத்தத்திலிருந்து விடுபட மிகச்சிறந்த வழி உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.



உங்களுடைய முரட்டுத்தனம் வெளிப்படும் உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.



தொடு உணர்வின் முக்கியத்துவம் உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள். 



உங்கள் ஆயுளை அதிகரிக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.




அது உங்களை அன்பிற்காக ஏங்க வைக்கும் இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.




உங்கள் எடையைக் குறைக்க சிறந்த வழி உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.



ஆணுறைகளின் முக்கியத்துவம் ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.

Labels:

காரமான பேசில் தாய் சிக்கன்

குளிர்காலத்தில் எப்போதும் நன்கு காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் விடுமுறை நாட்களில் அசைவ உணவை மூன்று வேளையில் நன்கு காரமாக சமைத்து சாப்பிட ஆசைப்படுவோம். இந்த வாரம் தாய் ஸ்டைலில் சிக்கனை காரமாக சமைத்து சாப்பிடுங்கள். 

அதிலும் துளசி இலையின் ஃப்ளேவர் சேர்த்திருக்கும் தாய் சிக்கனை தவறாமல் முயற்சித்துப் பாருங்கள். சரி, இப்போது அந்த காரமான பேசில் தாய் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


காரமான பேசில் தாய் சிக்கன்

தேவையான பொருட்கள்: 

எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ 
துளசி இலை - 1/2 கப் 
சிவப்பு மிளகாய் - 3 (நறுக்கியது) 
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
மீன் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
சர்க்கரை - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை: 

முதலில் சிக்கனை நன்கு சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மீன் சாஸ் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

 மற்றொரு அடுப்பில் வேறொரு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துளசி இலைகளை சேர்த்து மொறுமொறுவென்று வறுத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மற்றொரு அடுப்பில் உள்ள சிக்கனில் மிளகாய், சோயா சாஸ், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைவில் வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். 

சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள துளசி இலைகளை சேர்த்து பிரட்டினால், பேசில் தாய் சிக்கன் ரெடி!!!


Labels:

சுண்டைக்காய் வத்தக் குழம்பு..

தமிழ்நாட்டில் கிராமபுறங்களில் சமைக்கப்படும் ஒரு பிரபலமான ரெசிபி தான் சுண்டைக்காய் வத்தக் குழம்பு. இந்த வத்தக் குழம்பானது அருமையான ருசியில் இருக்கும். அதிலும் இதனை சூடான சாதத்துடன், நெய் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் வர முடியாது. 

இங்கு கிராமபுறங்களில் செய்யப்படும் சுண்டைக்காய் வத்தக் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்: 

சுண்டைக்காய் வத்தல் - 2 டேபிள் ஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பூண்டு - 10 பற்கள் 
புளிச்சாறு - 1 கப் 
கடுகு - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

மசாலாவிற்கு... 

மல்லி - 2 டேபிள் ஸ்பூன் 
வரமிளகாய் - 10 
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
அரிசி - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 2 டீஸ்பூன் 
மிளகு - 1 டீஸ்பூன் 
வெந்தயம் - 1 டீஸ்பூன் 
பூண்டு - 6 பற்கள் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். 

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு மற்றும் சுண்டைக்காய் சேர்த்து தாளித்து, பின் இதனை குழம்புடன் சேர்த்து, மீண்டும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி!!! 

Labels:

மிளகு அவல்

மாலையில் குட்டி டிபன் போன்று ஏதேனும் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், மிளகு அவலை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் போன்று இருக்கும். மேலும் குளிர்காலத்தில் டீ/காபி குடிக்கும் போது, இதனை செய்து சாப்பிடலாம். 

இங்கு அந்த மிளகு அவலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

மிளகு அவல்

தேவையான பொருட்கள்: 

அவல் - 3/4 கப் 
மிளகு - 1 டீஸ்பூன் 
முந்திரி - 5 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

தாளிப்பதற்கு... 

எண்ணெய் - 2 டீஸ்பூன் 
நெய் - 1 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
வரமிளகாய் - 2 

செய்முறை: 

முதலில் மிளகை வாணலியில் போடடு வறுத்து இறக்கி குளிர வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும். 

பின் முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும். 

பின்பு அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். 

பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், பெப்பர் அவல் ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/soups-snacks-drinks/2014/pepper-poha-recipe-006948.html

Labels:

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? எதுவுமே பயனளிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள், கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. 

அதில் முதன்மையானது தான் எலுமிச்சை. ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க... எலுமிச்சை எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவை பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பொருளாக உள்ளது. அதிலும் இதில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம். 

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்... அதற்கு எலுமிச்சையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எலுமிச்சையை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தை விரைவில் வெண்மையாக்கலாம்.

 

டிப்ஸ் 1 எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.



டிப்ஸ் 2 எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.



டிப்ஸ் 3 எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.



டிப்ஸ் 4 ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.




டிப்ஸ் 5 பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.



டிப்ஸ் 6 வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.



டிப்ஸ் 7 ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.


டிப்ஸ் 8 எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.







Labels:

நெத்திலி கருவாட்டு குழம்பு..

பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மீன் குழம்பை விட, கருவாட்டு குழம்பு தான் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். இங்கு கருவாட்டில் ஒரு வகையான நெத்திலி கருவாட்டைக் கொண்டு செய்யப்படும் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. 

இது மிகவும் ஈஸியான செய்முறை. உங்களுக்கு கருவாட்டு குழம்பு செய்யத் தெரியாதெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ள நெத்திரி கருவாட்டு குழம்பின் செய்முறையைப் படித்து, நெத்திலி கருவாட்டு குழம்பு 

தேவையான பொருட்கள்: 

நெத்திலி கருவாடு - 1 கப் 
கத்திரிக்காய் - 3 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் 
வறுத்த அரிசி மாவு - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
க்காளி - 1 (நறுக்கியது) 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
புளி - 1 எலுமிச்சை அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
கடுகு - 1 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் 
எண்ணெய் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கருவாடை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும். 

பின்னர் புளியை நீரில் 3 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேங்காய் மற்றும் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதனை புளிச்சாற்றில் சேர்த்து கலந்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து பூண்டை தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். 

பின் அதில் கருவாடை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், மிளகுத் தூள், வறுத்த அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, மசாலா அனைத்து ஒன்று சேரும் வரை நன்கு வதக்க வேண்டும். 

பிறகு அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், நெத்திலி கருவாட்டு குழம்பு ரெடி!!!

Labels:

குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!



குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. உங்கள் டிஷ்களில் பார்ப்பதற்கு அழகாகவும், கலர் ஃபுல்லாகவும் இருப்பதோடு நல்ல ருசியையும் கொடுக்கிறது குடைமிளகாய். அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது. அதைப் பச்சையாகச் சாப்பிட்டாலும் சரி, சமைத்துச் சாப்பிட்டாலும் சரி... அது தரும் நன்மைகளுக்கு அளவே இல்லை. 

இப்போது நம் உடல் ஆரோக்கியத்திற்குக் குடைமிளகாய் அளிக்கும் 7 நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.



செரிமானத்திற்கு... செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.



நீரிழிவுக்கு... இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.



வலிகளுக்கு... குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.



இதயத்திற்கு... இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்.



நோயெதிர்ப்புக்கு... குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.



முதுகெலும்புக்கு... குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.



கொழுப்பு குறைவதற்கு... குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்!








Labels:

Monday, 10 November 2014

ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை

சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. 

குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இங்கு அந்த சத்து மாவு உருண்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை அன்றாடம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை
தேவையான பொருட்கள்: 

சத்து மாவு - 1 கப் 
வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப் 
நெய் - 2 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை 

செய்முறை: 

முதலில் சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும். 

பின்பு அதனை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி!!!

Labels:

வேர்க்கடலை லட்டு: தீபாவளி ரெசிபி

இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான பலகாரங்கள் செய்ய நினைத்தால், வேர்க்கடலை லட்டு செய்யுங்கள். இந்த லட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். 

இங்கு வேர்க்கடலை லட்டு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக செய்து சுவைத்து மகிழுங்கள்.

வேர்க்கடலை லட்டு: தீபாவளி ரெசிபி

தேவையான பொருட்கள்: 

பச்சை வேர்க்கடலை - 1 கப் 
வெல்லம் - 1/2 கப் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

எப்போது வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அதனை இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும். 

பின்னர் அதனை சிறிது நேரம் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று பொடி செய்து, அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து நன்கு 5 நிமிடம் நன்கு அடிக்க வேண்டும். 

பின்பு அதனை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு, அதனை உருண்டைகளாக பிடிக்க வேண்டும். இதில் நெய் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. வேர்க்கடலையிலேயே ஏற்கனவே எண்ணெய் இருப்பதால், சாதாரணமாக உருண்டைகளாகப் பிடிக்கலாம். 

இறுதியில் அதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் இதனை வைத்து சாப்பிடலாம்.

Labels:

பாதாம் பால் பூரி

மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டுமெனில், பாதாம் பால் பூரியை செய்து கொடுங்கள். இந்த பாதாம் பால் பூரியானது மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக இதில் பால், பாதாம் சேர்த்திருப்பதால், இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் எலும்பு மற்றும் கற்கள் வலிமையடையும். 

மேலும் இதில் உள்ள பாதாம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே அவ்வப்போது குழந்தைகளுக்கு பாதாம் பால் பூரியை செய்து கொடுங்கள். 

இதனை பால் போளி என்றும் சொல்வார்கள். சரி, இப்போது அந்த பாதாம் பால் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

பாதாம் பால் பூரி

தேவையான பொருட்கள்: 

பால் - 1 லிட்டர் 
கோதுமை மாவு - 2 கப் 
சர்க்கரை - 2 கப் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
பாதாம் - 10 
மஞ்சள் நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை 
பாதாம் எசன்ஸ் - 4 துளிகள் 
குங்குமப்பூ - 2 சிட்டிகை 

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து, அதில் நெய், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் பாதாமை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, அதில் உள்ள தோலை நீக்கிவிட்டு, பின் அதனை மிக்ஸியில் போட்டு பால் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் அந்த பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் கேசரி பவுடர் மற்றும் எசன்ஸ் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் பாலானது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து, பின் பூரிகளை அதனுள் சேர்த்து ஊற வைத்து பரிமாறினால், சுவையான பாதாம் பால் பூரி ரெடி!!!

Labels:

மலாய் குலாப் ஜாமூன்

ரக்சா பந்தன் வரப்போகிறது. அனைவரும் தங்கள் அண்ணன்களுக்கு ஏதேனும் ஸ்பெஷல் ரெசிபியை செய்து அசத்த ஆசைப்பட்டால், அத்தகையவர்களுக்காக ஒரு எளிமையான முறையில் மலாய் குலாப் ஜாமூன் ரெசிபியைக் கொடுத்துள்ளோம். 

இந்த ரெசிபியை ரக்சா பந்தன் அன்று அண்ணன்கள் கையில் ராக்கி கட்டும் போது, செய்து கொடுத்தால், அண்ணனின் பாராட்டை நிச்சயம் பெறலாம். இப்போது அந்த மலாய் குலாப் ஜாமூன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

மலாய் குலாப் ஜாமூன்

தேவையான பொருட்கள்: 

பால் பவுடர் - 1 கப் 
வை - 4 டேபிள் ஸ்பூன் 
மைதா - 4 டேபிள் ஸ்பூன் 
பால் - 1 கப் 
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் 
நெய் - தேவையான அளவு 

உள்ளே நிரப்புவதற்கு... 

மலாய் - 1 கப் 
தேங்காய் - 1/2 கப் (துருவியது) 

சர்க்கரை பாகுவிற்கு... 

சர்க்கரை - 2 கப் 
தண்ணீர் - 2 கப் 

செய்முறை:


முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, பால் பவுடர், பால், பேக்கிங் பவுடர் மற்றும் நெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு மணிநேரம் கழித்தப் பின்னர், அதில் மீண்டும் சிறிது பால் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் சிறு உருண்டைகளாக்கி, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதே நேரத்தில், மற்றொரு அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை போட்டு, தீயை குறைவில் வைத்து சர்க்கரை கரையும் வரை கிளறி, அதனை இறக்கி வடிகட்டி, குளிர வைக்க வேண்டும்.

 இப்போது நெய்யானது காய்ந்திருக்கும். இந்நிலையில் தீயை குறைவில் வைத்து, உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, சர்க்கரை பாகுவில் போட்டு, 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

Labels:

பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல்

எப்போதும் காலையில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் தோசையான பச்சை பயறு தோசையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையான தோசை. 

மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. சரி, இப்போது ஆந்திரை ஸ்டைல் பச்சை பயறு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல்

தேவையான பொருட்கள்: 

பச்சை பயறு/பாசி பயறு - 2 கப் 
அரிசி - 3 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 

மேலே தூவுவதற்கு... 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

செய்முறை:

முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள கெட்டியான மாவில் சிறிதை எடுத்து, கல்லில் போட்டு வட்டமாக கையால் பரப்பி விட்டு, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, தோசை கரண்டியால் லேசாக தட்டி, பின் மேலே எண்ணெயை ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். 

இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

l

Labels:

ஆரோக்கியமான ராகி தோசை

காலையில் எழுந்ததும் மிகவும் ஈஸியாக செய்யுமாறு என்ன ரெசிபி உள்ளது என்று யோசிக்கிறீர்களா? அதிலும் ஆரோக்கியமான ரெசிபி என்ன உள்ளது என்று சிந்திக்கிறீர்களா? அப்படியானால் ராகி தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபி செய்வதற்கு 10 நிமிடம் போதும். மேலும் பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை காலை வேளையில் செய்து சாப்பிடலாம். 

அந்த அளவில் மிகவும் ஈஸியான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி. சரி, இப்போது அந்த ராகி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

ஆரோக்கியமான ராகி தோசை

தேவையான பொருட்கள்: 

ராகி மாவு - 1/2 கப் 
கோதுமை மாவு - 1/4 கப் 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
கறிவேப்பிலை - சிறிது 
சீரகம் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

 பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், ராகி தோசை ரெடி!!!

Labels:

தேங்காய் கோதுமை தோசை

டயட்டில் இருப்போர் காலையில் தானியங்களை உணவாக எடுத்து வந்தால் நல்லது. அதற்காக பலர் காலை உணவாக எடுத்து வருவது ஓட்ஸ் தான். பலருக்கு ஓட்ஸ் சாப்பிட்டு போர் அடித்திருக்கும். ஆகவே சற்று வித்தியாசமாக முழு கோதுமையை அரைத்து, அத்துடன் தேங்காய் சேர்த்து அருமையான சுவையில் ஒரு காலை உணவை கொடுத்துள்ளது. அந்த தேங்காய் கோதுமை தோசையானது காலையில் செய்வதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த தேங்காய் கோதுமை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேங்காய் கோதுமை தோசை

தேவையான பொருட்கள்: 

கோதுமை - 2 கப் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் 
தண்ணீர் - 1 கப் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கோதுமையை நீரில் நன்கு கழுவி, பின் 1/2 மணிநேரம் அதனை உலர வைக்க வேண்டும். 

கோதுமையானது நன்கு உலர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள தோசை மாவை தோசைகளாக சுட்டு, எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், தேங்காய் கோதுமை தோசை ரெடி!!!

Labels:

முருங்கைக்கீரை தோசை

முருங்கைக்கீரையில் நிறைந்துள்ள நன்மைகளைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த அளவில் அதன் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே தெரியும். குறிப்பாக உடலின் இரும்புச்சத்து அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடலாம். 

அதற்கு முருங்கைக்கீரையை பொரியல் செய்து தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாறாக அதனைக் கொண்டு தோசை செய்தும் சாப்பிடலாம். சரி, இப்போது அந்த முருங்கைக்கீரை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

முருங்கைக்கீரை தோசை

தேவையான பொருட்கள்: 

முருங்கைக்கீரை - 1 கப் 
தோசை மாவு - தேவையான அளவு 
நெய் - சிறிது 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முருங்கைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும். 

பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை கொண்டு தோசைகளாக ஊற்றி எடுத்தால், முருங்கைக்கீரை தோசை ரெடி!!!

Labels:

சத்தான கைக்குத்தல் அரிசி தோசை

உணவில் கைக்குத்தல் அரிசியை சேர்த்து வருவது நல்லது. அதிலும் டயட்டில் இருப்போர் இதனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் கிடைப்பதுடன், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இங்கு கைக்குத்தல் அரிசி தோசையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சத்தான கைக்குத்தல் அரிசி தோசை

தேவையான பொருட்கள்: 

கைக்குத்தல் அரிசி - 3 கப் 
உளுத்தம் பருப்பு - 1 கப் 
கடலைப் பருப்பு - 1/2 கப் 
பாசிப்பருப்பு - 1/2 கப் 
துவரம் பருப்பு - 1/2 கப் 
அவல் - 1 கப் 
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் கைக்குத்தல் அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மற்றம் பாசிப் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் காலையில் எழுந்ததும் வெந்தயம் மற்றும் அவலை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு அவை அனைத்தையும் நீரில் மீண்டும் கழுவிவிட்டு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து, 8-9 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

மாவானது நன்கு புளித்ததும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவி மாவைக் கொண்டு தோசைகளாக சுட்டு எடுத்தால், கைக்குத்தல் அரிசி தோசை ரெடி!!! 

இந்த தோசையானது தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Labels:

பேசன் ஆம்லெட்

காலையில் முட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அந்த முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் சிறந்தது. ஆனால் பலருக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் காலையில் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம். அதுவும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், முட்டையை கடலை மாவுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். 

இங்கு அந்த பேசன் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்கள்.

பேசன் ஆம்லெட்

தேவையான பொருட்கள்: 

கடலை மாவு - 1 1/2 கப் 
முட்டை - 3 (நன்கு அடித்துக் கொள்ளவும்) 
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி - 1/2 (நறுக்கியது) 
பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது) 
சீரகம் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 

செய்முறை: 

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், சீரகம், கொத்தமல்லி மற்றும் தக்காளி சேர்த்து, அத்துடன் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தேய்த்து, கலந்து வைத்துள்ள கலவையை ஆம்லெட்டுகளாக சுட்டு எடுத்தால், பேசன் ஆம்லெட் ரெடி!!!

Labels:

சிம்பிளான... முட்டை தொக்கு

வாரந்தோறும் சிக்கன், மட்டன் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் முட்டையைக் கொண்டு தொக்கு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை தொக்கு அருமையான செட்டிநாடு ரெசிபி போன்று மிகவும் சுவையாக இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட செய்து சாப்பிடும் அளவில் மிகவும் ஈஸியாகவும் இருக்கும். 

சரி, இப்போது அந்த சிம்பிளான முட்டை தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!


சிம்பிளான... முட்டை தொக்கு

தேவையான பொருட்கள்: 

முட்டை - 3 (வேக வைத்தது மற்றும் ஆங்காங்கு கீறியது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 

தாளிப்பதற்கு... 

எண்ணெய் - 3 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 

வறுத்து அரைப்பதற்கு... 

எண்ணெய் - 1 டீஸ்பூன் 
தக்காளி - 1 (நறுக்கியது) 
வரமிளகாய் - 2-3 
சின்ன வெங்காயம் - 10 
மல்லி - 1 டீஸ்பூன் 
பட்டை - 1/2 இன்ச் 
ஏலக்காய் - 1 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
கசகசா - 1/2 டீஸ்பூன் 
மிளகு - 1/2 டீஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். 

அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் பேனை வைத்து, அதில் முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2 நிமிடம் முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை தொக்கு ரெடி!!!


Labels: