Tuesday, 25 June 2013

சீஸ் வாழைப்பழ போண்டா

மாலையில் போண்டா சாப்பிட்டால் நன்றாக இருக்கும். அதிலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு இனிப்பான சுவையில் போண்டா செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ஆரோக்கியத்தை தரும் வாழைப்பழத்தைக் கொண்டு, அருமையான முறையில் ஒரு போண்டா செய்து கொடுக்கலாம். 
 
 இப்போது அந்த சீஸ் வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

cheesy banana bonda  
தேவையான பொருட்கள்: 
 
சீஸ் - 1 கப் (துருவியது) 
கனிந்த வாழைப்பழம் - 4 (மசித்தது) 
கோதுமை மாவு - 1 கப் 
மைதா - 1/2 கப் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
மிளகு தூள் - தேவையான அளவு 
தயிர் - 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் 
 எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் ஒரு பௌலில் வாழைப்பழம், துருவிய சீஸ், கோதுமை மாவு, மைதா மாவு, மிளகு தூள், சீரகப் பொடி, தயிர், சர்க்கரை சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீர் ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து, 2-3 மணிநேரம் மூடி ஊற வைக்க வேண்டும். 
 
 பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை உருண்டை பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான சீஸ் வாழைப்பழ போண்டா ரெடி!!!

Labels:

சப்போட்டா மில்க் ஷேக்

சப்போட்டாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதனை அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், சப்போட்டாவை மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். இது கோடை காலத்தில் குடிக்கும் ஆரோக்கிய பானங்களுள் சிறந்தது. இந்த சப்போட்டா மில்க் ஷேக் செய்வது மிகவும் எளிமையானது. 
 
இப்போது அந்த சப்போட்டா மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

chikku milkshake  
தேவையான பொருட்கள்: 
 
சப்போட்டா - 1 கப் (தோலுரித்தது) 
குளிர்ந்த பால் - 1/2 லிட்டர் 
தேன் - தேவையான அளவு 
ஐஸ் கட்டி - தேவையான அளவு 
 
செய்முறை: முதலில் மிக்ஸி/பிளெண்டரில் சப்போட்டாவைப் போட்டு, 1 கப் பாலை ஊற்றி நன்கு 20-30 நொடிகள் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 
 
 பின்னர் மீதமுள்ள பால் மற்றும் தேன் சேர்த்து, சில நிமிடங்கள் அடித்துக் கொண்டு, அதனை டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி!!!

Labels:

ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி

உடலைப் புத்துணர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று தான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் விருப்பமான பழங்களை தனித்தனியாகவோ அல்லது அவை அனைத்தையும் சேர்த்தோ ஸ்மூத்தி செய்யலாம். மேலும் இந்த முறை பழங்களை சாப்பிடாத குழந்தைகளுக்கு, பழங்களைக் கொடுப்பதற்கான ஒரு சிறந்த வழியும் கூட. 
 
இப்போது மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பப்பாளியைக் கொண்டு எப்படி ஸ்மூத்தி செய்வதென்று பார்ப்போமா!!!

fruits smoothie  
தேவையான பொருட்கள்: 
 
பப்பாளி - 1/2 பழம் (நறுக்கியது) 
அல்போன்சா மாம்பழம் - 2 (பெரியது மற்றும் நறுக்கியது) 
வாழைப்பழம் - 2 (நறுக்கியது) 
சர்க்கரை - தேவையான அளவு 
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் பிளெண்டரில் அனைத்துப் பழங்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான ஃபுரூட்ஸ் ஸ்மூத்தி ரெடி!!!

Labels:

சூப்பரான... மாம்பழ குல்பி

குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அருமையான முறையில் ஒரு குல்பி செய்து கொடுக்கலாமே! 
 
அதிலும் இந்த மாம்பழ குல்பி செய்வது என்பது மிகவும் எளிது. இப்போது அந்த மாம்பழ குல்பியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

kid s special recipe mango kulfi  

தேவையான பொருட்கள்: 
 
பால் - 3 கப் 
கன்டென்ஸ்ட்டு மில்க் - 1/2 கப் 
மாம்பழ கூழ் - 1 கப் 
பால் பவுடர் - 1/2 கப் 
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன் 
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 
 
 செய்முறை:
 
 முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால், கன்டென்ஸ்ட்டு மில்க், சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். 
 
பின்னர் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை அணைத்து, அதனை குளிர வைக்க வேண்டும். 
 
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவில் வைத்து, 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து, பின் வெளியே எடுத்து குளிர வைத்து, கிண்ணத்தில் இருந்து எடுத்து பரிமாறினால், சூப்பரான மாம்பழ குல்பி ரெடி!!!

Labels:

லிச்சி மில்க் ஷேக்

லிச்சி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது. இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சிறப்பான முறையில் மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். 
 
மேலும் இந்த லிச்சி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

lychee shake delicious summer delight  

தேவையான பொருட்கள்:  
 
லிச்சி - 250 கிராம் 
பால் - 3 கப் 
சர்க்கரை - 2 டீஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் லிச்சி பழத்தை கழுவி, தோலுரித்து விதைகளை நீக்க வேண்டும். 
 
பின்பு மிக்ஸி/பிளெண்டரில் லிச்சி, பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
 
 கலவையானது நன்கு மென்மையான பின்பு, அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டியை சேர்த்து பரிமாறினால், சூப்பரான லிச்சி மில்க் ஷேக் ரெடி!!!

Labels:

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்

இதுவரை எத்தனையோ மில்க் ஷேக் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஓட்ஸ் மில்க் ஷேக் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், ஓட்ஸை வைத்து வித்தியாசமான சுவையில் மில்க் ஷேக் செய்யலாம். அதிலும் ஓட்ஸ் உடன், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து மில்க் ஷேக் செய்தால், சூப்பராக இருக்கும். 
 
இப்போது அந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஓட்ஸ் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

strawberry oats milkshake recipe  

தேவையான பொருட்கள்: 
 
ஸ்ட்ராபெர்ரி - 10-12 
வறுத்த ஓட்ஸ் - 1/4 கப் 
குளிர்ந்த பால் - 1 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
 
 செய்முறை:  
 
முதலில் ஸ்ட்ராபெர்ரியை கழுவி, இலையை நீக்கிவிட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பிளெண்டர்/மிக்ஸியில் வறுத்த ஓட்ஸ், ஸ்ட்ராபெர்ரி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, 1-2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
 இறுதியில் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சூப்பரான ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!

Labels:

ஈஸியான... கேரட் அல்வா

அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா மட்டும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். ஏனெனில் அங்கு தான் அல்வா நன்கு சுவையோடு, சூப்பராக இருக்கும். ஆனால் அத்தகைய அல்வாவில் ஒன்றான கேரட் அல்வாவை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் 30 நிமிடங்களிலேயே அருமையான சுவையில் கேரட் அல்வா செய்யலாம்.
 
பொதுவாக நிறைய பேர் கேரட் அல்வாவை ட்ரை செய்திருப்பார்கள். ஆனால் அல்வாவை செய்ய போய், அல்வாவைத் தவிர பசையை செய்தவர்கள் தான் அதிகம். இங்கு கேரட் அல்வாவை எப்படி எளிதில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பார்த்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

ஈஸியான... கேரட் அல்வா
தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 4 கப்
பால் - 2 கப்
தண்ணீர் - 1.5 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/3 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 12
உலர் திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

அதே சமயம், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பிரஷர் குக்கரை திறந்து, அதனை அப்படியே அடுப்பில் வைத்து, 10-15 நிமிடம் தீயை குறைவில் வைத்து கொதிக்க விட வேண்டும். (அதுவும் கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.)

அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். (சர்க்கரை சேர்க்காததால், தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.)

பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளறி, அத்துடன் அந்த நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியில் அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி, பிரட்டி விட வேண்டும். கலவையானது நன்கு அல்வா பதத்திற்கு வந்த பின்னரே, அதனை அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரட் அல்வா ரெடி!!!

குறிப்பு:

வேண்டுமெனில் கேரட் அல்வா செய்த பின்னர், பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி, அதன் மேல் தூவி பரிமாறலாம்.

Labels:

மாம்பழ பால்

மாம்பழம் மிகவும் பிடிக்குமா? அப்படியெனில் அந்த மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடாமல், சற்று வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிடலாமே! ஆம், இதுவரை மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ், மில்க் ஷேக், குல்பி என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் மாம்பழ பால் செய்து குடித்திருப்போமா? இல்லை தானே! 
மாம்பழ பால் என்பது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு வித்தியாசமான பானம். இந்த பானத்தை செய்து குடித்தால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த மாம்பழ பாலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

மாம்பழ பால் 
தேவையான பொருட்கள்: 
மாம்பழம் - 1 
தேங்காய் பால் - 1/2 கப் 
குளிர்ந்த பால் - 1/4 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
செய்முறை:  
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கி விட்டு, அதனை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அதில் தேங்காய் பால், குளிர்ந்த பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து பரிமாறினால், சுவையான மாம்பழ பால் ரெடி!!! 
வேண்டுமெனில் இதனை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்தும் குடிக்கலாம்.

Labels:

வீட்டை அலங்கரிக்க பயன்படும் வித்தியாசமான லாந்தர் விளக்குகள்!!!

பொழுதுபோக்குகள் என்றால் விளையாட்டு, பாட்டு கேட்பது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது போன்றவை மட்டும் இல்லை. அவற்றில் தோட்டம் அமைப்பது, தோட்டத்தை பராமரிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டை பலவாறு அலங்கரிப்பது போன்றவையும் அடங்கும். பொதுவாக வீட்டை அலங்கரிப்பதற்கு கலர் கலர் பேப்பர்கள், பூ ஜாடிகள், சுவருக்கு அழகான நிறத்தில் பெயிண்ட் அடிப்பது என்று தான் செய்வோம். ஆனால் வீட்டை லாந்தர் விளக்குகள் கொண்டும் அலங்கரிக்கலாம். 
லாந்தர் விளக்குகள் என்பது காற்றடித்தாலும் அணையாமல் இருக்கும். அக்காலத்தில் எல்லாம் டார்ச் விளக்குகள் இல்லை. ஆகவே அப்போது அவர்கள் மண்ணெண்ணெய் விளக்குகளின் மேல் ஒரு கண்ணாடியை வைத்து தான், வெளிச்சத்தை உண்டாக்கினார்கள். அத்தகைய மண்ணெண்ணெய் விளக்குகள் நாளடைவில் பல்புகள், டியூப் லைட்டுகளாக மாறின. 
மேலும் மண்ணெண்ணெய் விளக்குகளை அடிப்படையாகக் கொண்டு தான், லாந்தர் விளக்குகள் பலவாறு வந்துள்ளன. இத்தகைய விளக்குகளைக் கொண்டு, இரவு உணவின் போது, விழாக்களின் போது ஒரு நல்ல அழகான சூழலை உருவாக்கலாம். இப்போது அந்த லாந்தர் விளக்குகளைப் பார்ப்போமா!!!

 
பூசணிக்காய் லாந்தர்கள்  
வீட்டில் ஏதேனும் விழா நடக்கும் போது, வீட்டை வித்தியாசமாக அலங்கரிக்க வேண்டுமெனில், பூசணிக்காயின் உட்பகுதியில் உள்ள சதைப்பகுதியை நீக்கிவிட்டு, அதனுள் ஆங்காங்கு ஓட்டைகளை போட்டு, அதனுள் மெழுகுவர்த்தியை வைத்துவிட்டால், அழகான வெளிச்சத்தைப் பெறலாம்.

 
பேப்பர் லாந்தர்கள் 
இந்த மாதிரியான பேப்பர் லாந்தர்களை வீட்டில் வைத்தால், அது நன்கு பெரியதாக, வண்ணமயமான பலூன் போன்று பார்ப்பதற்கே அழகாக காணப்படும்.

 
விண்டேஜ் லாந்தர்கள் 
இது 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு பழமையான பாரம்பரிய லாந்தர் போன்று காணப்பட்டாலும், "ஓல்டு இஸ் கோல்டு" என்பதற்கு ஏற்றவாறு இருக்கும்.

 
செராமிக் லாந்தர் 
 செராமிக் என்பது ஒரு மெட்டீரியல். இத்தகைய செராமிக் வகையான லாந்தர்களை ஓவியம் வரையும் அறைகளில் தொங்கவிட்டால், வரைந்திருக்கும் ஓவியம், இதிலிருந்து வரும் வெளிச்சத்தில் இன்னும் அழகாக இருக்கும்.

 
கண்ணாடி லாந்தர்கள் 
 கண்ணாடி லாந்தர்கள் புத்திசாலித்தனத்தால் வந்தவை. எப்படியெனில் வீட்டில் உள்ள தேவையில்லாத கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு, புத்திசாலித்தனத்துடனும், கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டவை என்பதாலேயே ஆகும்.

 
ஹாலோஜன் விளக்குகள் 
இந்த மாதிரியான விளக்குகள் இருட்டான இடத்தில் அதிகமான வெளிச்சத்தைத் தரக்கூடியவை. அதிலும் இதனை சமையலறை டேபிளில் வைத்தால், சமைப்பதற்கு எளிதாக இருப்பதோடு, சாப்பிடுவதற்கு போதிய வெளிச்சமானதாகவும் இருக்கும்.

 
துணி லாந்தர்கள் 
துணியால் செய்யப்பட்ட லாந்தர்கள் மிகவும் விலை அதிகமானது மற்றும் பார்ப்பதற்கே ஒரு கிராண்ட்டான அலங்காரம் போன்று இருக்கும். குறிப்பாக இந்த லாந்தர்களை பயன்படுத்தும் போது, குறைந்த பவர் கொண்ட பல்புகளை வைப்பது நல்லது. இல்லாவிட்டால், அதிகப்படியான பவரினால், துணியானது எரிந்துவிடும்.

 
பிளாஸ்டிக் லாந்தர்கள் 
 இந்த வகையான லாந்தர்கள் பொதுவானவை. இவை மிகவும் விலை மலிவானவை. அதிலும் இவற்றில் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் இருப்பதைப் பயன்படுத்தினால், மிகவும் அழகாக இருக்கும்.

 
வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி 
லாந்தர்கள் நன்கு அழகான வேலைப்பாட்டுடன் கூடிய கண்ணாடி லாந்தர்களைப் பயன்படுத்தினால், அது வீட்டிற்கே ஒரு புதுவிதமான பொலிவைக் கொடுக்கும்.

Labels:

2013-ல் குளிக்கும் அறையின் டிசைன்கள்!!!

முந்தைய காலத்தில் வீட்டில் குளியலறைகளே இருக்காது. குளிப்பதென்றால் ஆற்றுக்கு தான் செல்வார்கள். நாகரீகம் வளரத் தொடங்கியதும், குளிப்பதென்றால் அது வீட்டு முற்றத்தில் அல்லது பின்புறத்தில். பின்னர் சற்று முன்னேறி குளிப்பதற்கு என்று தனி அறை கட்டப்பட்டது. ஆனால் வீட்டோடு சேர்ந்து இல்லாமல் தனியாக இருக்கும். 
 
காலம் மாற குளியலறை என்பது நம் படுக்கை அறையிலேயே அமைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலும் வீட்டில் உள்ள அறைகளைப் போல, அதற்கு அதிக ஆடம்பரம் செய்வதில்லை. இப்போது நிலைமை தலை கீழாக உள்ளது. நம் படுக்கை அறைக்கு ஈடாக, குளியலறைக்கும் ஆடம்பரம் சேர்க்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் குளியலறை என்பது அனுபவிக்கவும், சொகுசை பெறவும் வடிவமைக்கப்படுகிறது. 
 
குளியலறையில் கனமான, பெரியதாக வடிவமைக்கப்பட்ட துப்புரவுப் பொருட்கள் பயன்படுத்திய காலம் பறந்தோடி விட்டது. எளிமை மற்றும் சுத்தமான வேலைப்பாடுகளே, இன்றைய காலக்கட்டத்தில் ஆட்சிப் புரிகிறது. தற்காலத்திய டிசைன்கள், இடைநிலை டிசைன்களை பழமையாக்கி அதனை யாரும் விரும்பாத நிலை ஏற்பட்டு விட்டது.

bath design trends 2013  
இடத்தை சேமிக்கும் பெட்டகங்கள்: 
 
இன்றைய குளியலறைகளில் பெட்டகங்கள் (Cabinet) வைப்பது கண்டிப்பான ஒன்றாகி விட்டது. இதனால் குளியலறை பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குளிப்பதற்கு தேவையான பொருட்களை இந்த பெட்டகத்தில் வைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் இன்றைய வீடுகள் சின்னதாக இருப்பதால், பெட்டகம் வைத்தால் குளியலறையை சின்னதாக கட்டிக் கொள்ளலாம். 
 
ஸ்பா போன்ற குளியலறைகள்:

துண்டுகளை அடுக்கி வைக்க ஆடம்பர அடுக்குகள், தரையை வெப்பத்தோடு வைக்க தரைக்கு அடியில் வைக்கப்படும் வெப்ப அமைப்பு, தண்ணீரில் நனையாத ஒலிபெருக்கி (குளியலறையில் இசையை கேட்டு மகிழ), ஷவரில் வண்ணம் மாற்றும் LED விளக்கு மற்றும் ஆங்காங்கே வண்ண விளக்குகளை பொருத்துதல் என ஸ்பாவில் உள்ளதை போல் பெரிய அளவிலான ஷவர் போன்ற ஆடம்பர வசதிகளை இன்றைய குளியலறையில் பொறுத்த விரும்புகின்றனர். 
 
சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நண்பன்:

தண்ணீர் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பற்றாக்குறையான இயற்கை வளமாக மாறி வருவதால், ஆடம்பரம் என்ற பெயரால் தண்ணீரை விரயம் ஆக்குவதை அனுமதிக்கக்கூடாது. எனவே சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் நண்பனாக குளியலறை இருப்பது ரொம்ப முக்கியம். 
 
உலோக நிறப்பூச்சு (மெட்டாலிக் பெயிண்ட்):

குரோமிய உலோகப் பூச்சு தான் அதிகமாக குளியலறைக்கு விரும்பப்படும் வண்ணமாக திகழ்கிறது. கருப்பு வெள்ளை காலகட்டத்தை சேர்ந்த டிசைன்கள், இப்போது மக்கள் மனதில் அடியோடு தகர்த்து எறியப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் தங்க நிறத்திலான டைல் கற்களும், உபரி பொருட்களும் குளியலறையில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் பெண்களின் அழகு சாதனக் கடைகளில் தான் பயன்படுத்தப்படுகின்றன.

Labels:

வீட்டின் மதிப்பை உயர்த்த 8 சிறந்த வழிமுறைகள்

உணவு, உடை, உறைவிடம் இவை மூன்றும் மனித வாழ்க்கையின் முக்கியமான தேவைகள், உணவு மற்றும் உடைகளில் நம் பல முன்னேற்றமும், பரிமானங்களையும் அடைந்துளோம். இன்றைய வாழ்க்கை முறையில் வீடும், பல மாற்றங்களை அடைந்துள்ளது. அத்தகைய வீட்டை தேடி அலைபவர்கள் எத்தனையோ பேர். 
 
ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருக்கும். எனினும், தங்கும் இடத்தை கனவு இல்லமாக மாற்றுவதற்கு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். நாம் வசிக்கும் இடம் சுத்தமாகவும், மனதிற்கு இதமாகவும் இருந்தால் தான் அது நம்முடைய மனநிலை மற்றும் உடல் நிலையின் ஆரோக்கியத்தை அளிக்க கூடியதக இருக்கும். அந்த வகையில் நம்முடைய வீட்டை நாம் பராமரித்து வரும் போது, வீட்டின் மதிப்பும் உயர்வது இயற்கை. 
 
வீட்டை வாங்கும் முன் அல்லது கட்டும் முன் வீட்டின் இட வசதி, அந்த இடத்தின் தோற்றம் மற்றும் பல அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டை அழகுப்படுத்தவும், மின்னச் செய்திடவும் மற்றும் அதன் மதிப்பை உயர்த்தவும் எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அத்தகைய வீட்டை அழகுப்படுத்துவதற்கான சில வழிமுறைகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 
கலையுணர்வு 
 
மீன் தொட்டிகள், சுவற்றில் பதிக்கப்படும் வளையங்கள், சரவிளக்கு மற்றும் ஓரியண்டல் விளக்கு வெளிச்சங்கள் ஆகியவை வீட்டை கலையுணர்வுடன் வைத்திருக்க உதவும். பிடித்தமான இந்த கலை வேலைப்பாடுகளை வீட்டு சுவற்றில் உருவாக்க முயற்சி செய்யுங்கள். மேலும், வீட்டில் உள்ள ஓவியங்கள் மற்றும் குடும்ப படங்களுக்கிடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அதிலும் அருமையான வண்ணங்கள் மற்றும் வடிவங்களை பயன்படுத்துவதன் மூலம் கலைநயமிக்க சூழலை இல்லத்திற்கு உருவாக்க முடியும். சரியான அளவிலான வண்ணங்களைக் கொண்ட வெளிச்சம் மற்றும் சுவற்றின் வண்ணங்களை கொண்டு வீட்டை உருவாக்கினால், அதன் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சென்று விடும். அக்ஸன்ட் (Accent) லைட்டிங், கேலரி (gallery) லைட்டிங், கேபினட் (cabinet) லைட்டிங் மற்றும் ஸ்டேர் (stair) லைட்டிங் ஆகியவை மின்சார கட்டணத்தை சேமிப்பதுடன், வீடும் சரியான வெளிச்சத்தை கொண்டிருக்கும்.

 
மையக்கருத்துடன் அலங்கரிக்கவும்! 
 
பொதுவாகவே வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள், வீட்டின் உட்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் வேலைப்பாடுகளையே அதிகம் கவனிப்பார்கள். ஆகவே வீட்டை உயிரோட்டத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் வகையில் அலங்கரிக்க வேண்டியது மிகவும் அவசியம். சரியான அளவுகளிலான மேசை மற்றும் நாற்காலிகள், வெளிச்சம், உள்கட்டமைப்பு மற்றும் சுவர் அலங்காரங்கள் ஆகியவற்றை செய்வதன் மூலமாக வீட்டை அழகாக்க முடியும். குறிப்பாக வேகமாக வீடு கட்டி விற்க நினைப்பவர்கள், அதன் தோற்றத்தையும், காண்பவரின் முகத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துமாறு வீடு இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இதற்காக ஹோம் ஸ்டாகிங் எக்ஸ்பர்ட்டின் (home staging) ஆலோசனை முலம், வீட்டை குறைந்த செலவில் மிகுந்த அழகுடன் காண்பிக்க முடியும். சில வீட்டு உரிமையாளர்கள், உலோகங்கள் மற்றும் கண்ணாடிகள் கொண்டு, மிகவும் நவீனமான மற்றும் தற்கால வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். சிலர், பாரம்பரியமிக்க மரப் பொருட்களை பயன்படுத்தி வீட்டின் மதிப்பையும் மற்றும் ஈர்ப்பையும் அதிகப்படுத்துவர்.

 
போதுமான இடத்தை பயன்படுத்தவும்!  
 
குடியிருப்பவர்கள் அல்லது விருந்தினர்கள் என யாராக இருந்தாலும், வீட்டில் எவ்வளவு இடம் உள்ளது அதற்கேற்றவாறு வீட்டை அலங்கரிக்க கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் பெரிய ஹால் இருந்தால், வீட்டை அமைதியாக காட்ட முடியும் மற்றும் அழகிய சோபா செட்டுகள் மற்றும் சாய்வு நாற்காலிகளுடன் அந்த இடத்தை பொழுதுபோக்கிடமாகவும் மாற்றிட முடியும். சிறிய அறைகளின் மூலைகளில் விளக்குகள் மற்றும் கண்ணாடிகளை வைத்து, அவற்றை ஒளி பொருந்திய அறைகளாக மாற்றலாம். மேலும், மடிக்கக்கூடிய உணவருந்தும் நாற்காலிகள், சிறிய இடத்தை சிறப்பாக பயன்படுத்த ஏற்றவையாகும். எனவே, சிறிய அறைகளில் கண்ட படி பொருட்களை வைத்திருக்காமல், உடனடியாக அழகு படுத்துங்கள்.

 
பசுமை 
 
வீட்டில் பசுமையான புல்வெளிகள் இருக்க வேண்டும். பசுமையான புல்வெளிகள் வீட்டை கவரும் முதன்மையான அம்சமாக இருக்கும். வீட்டின் முன் பகுதியில் குளம் இருந்தால், எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேப்போல, வீட்டின் கூரைகள் மற்றும் வெளிப்புற சுவர்கள் ஆகியவைகளுக்கும் அவ்வப்போது பெயிண்ட் அடித்து புதிதாக வைத்திருக்கவும். மேலும் வீட்டின் முன்பகுதி அல்லது தோட்டத்தில் சரியான மேசை நாற்காலிகளை வைத்து உருவாக்கப்படும் காலை உணவு அல்லது மதிய விருந்து ஏற்பாடுகள், வீட்டிற்கு குடும்பப் பாங்கான தோற்றத்தை கொடுக்கும். தேக்கு, கண்ணாடி மற்றும் கரும்பு போன்றவற்றையும் வீட்டை அழகுபடுத்தப் பயன்படுத்தலாம். பூந்தொட்டியில் வைக்கப்பட்டிருக்கும் செடிகள் மற்றும் அழகாக பூத்திருக்கும் பூக்கள், வீட்டை ஆடம்பரமாகவும், அழகாகவும் வெளிப்படுத்தும்.
 
மர வேலைப்பாடு 
 
மரத்தாலான சுவர்கள் மற்றும் தளங்கள் கொண்ட வீடுகள் மிகவும் வசதியானவையாகும். மரத்தை தேய்த்தோ அல்லது மெருகேற்றியோ, அவற்றை சுத்தமாக வைத்திருக்க முடியும். வினைல் தளங்களையும், டைல்ஸ்களையும் வேறு வகையில் சுத்தப்படுத்திட முடியும். 'கிரீச்' என்று சத்தமெழுப்பும் தளங்களை உடனடியாக கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டின் மரப்பொருட்களை அவ்வப்போது முழுமையாக கழுவ வேண்டியது அவசியமாகும். ஏனெனில் செல்லரித்தல், உடைசல் அல்லது பூச்சி அரிப்புகள் போன்றவை மரத்தாலான பொருட்களை அரித்து அவற்றின் மதிப்பை கெடுத்து விடும், வீட்டின் மதிப்பையும் குறைத்து விடும்.
 
ப்ளம்பிங் (plumbing) மற்றும் அலமாரிகள் 
 
குளியல் தொட்டிகள், குழாய் திறப்புகள் மற்றும் ஷவர்கள் சரியான இடங்களில், சரியான அளவுகளில் இருக்க வேண்டும். ஒழுகும் குழாய் திறப்புகள் மற்றும் அழுக்கான தொட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வீட்டின் மதிப்பை பெருமளவு குறைத்து விடும். டி.ஐ.ஒய்-ன் (DIY)-ன் திட்டங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் ப்ளம்பிங் மற்றும் இழுவை மேஜைகளில் உள்ள சில குறைபாடுகளை நீக்கி, அவற்றை பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிக்கச் செய்திட முடியும். உடைந்த ஜன்னல்கள் மற்றும் சரிந்து கிடக்கும் மேஜை டிராயர்கள், ஒழுகத் தயாராக உள்ள குழாய்கள் மற்றும் விரிசல் மிக்க டைல்ஸ்கள் என அனைத்தையுமே குறைந்த செலவில் சரி செய்திட முடியும்.
 
திரைகள் 
 
வீட்டின் ஜன்னல் அல்லது ஷவர்களுக்கான தரை விரிப்புகள் என எந்த விதமான திரைகள் வாங்க வேண்டியிருந்தாலும், அதற்கு முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், எந்த வகை திரை வீட்டிற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும் என்று கவனிப்பது தான். சுவருக்கேற்றபடியான தரை விரிப்புகள், பொழுதுபோக்கு கேபினட் மற்றும் ஹாலில் உள்ள நாற்காலிகள் ஆகியவற்றுடன் இயல்பாக இணைக்கப்பட்டிருக்கும் திரைகளால் வீட்டின் அழகு பன்மடங்கு அதிகரிக்கும். சுவற்றை ஒட்டியுள்ள அலமாரிகள், புத்தக அலமாரிகள் மற்றும் பிற ஷெல்ப்கள் மற்றும் தரையின் அமைப்பு ஆகியவை வீட்டை அழகாக காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. புதுமையான அமைப்பில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் அமைப்புகளில் சுற்றும் வகையில் அமைக்கப்பட்ட சி.டி ஸ்டாண்ட்கள், தொங்கும் விளக்குகள், புத்தக அலமாரிகள் மற்றும் வீடுகளில் செய்யப்பட்ட மறுமுறை பயன்படுத்தக் கூடிய குப்பை தொட்டிகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

 
பாதுகாப்பு 
 
வீட்டின் பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டே வீட்டின் மதிப்பு இருக்கும். வீட்டை கஷ்டப்பட்டு அழகாகவும், நாகரீகமாகவும் காட்டி விட்டு, அதனை பாதுகாப்பில்லாமல் விட்டு விடுவதில் அர்த்தம் இருக்காது. சர்க்யூட் கேமராக்கள் அல்லது அலாரம் என ஏதாவது ஒன்றை வைத்து பாதுகாப்பினை உறுதி செய்வதும் அவசியம். அதே நேரத்தில், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதற்காக சர்க்யூட் மற்றும் மின்சார இணைப்புகளை கவனிப்பதும், சுவிட்ச் போர்டுகள் மற்றும் பிற இணைப்புகள் ஆகியவற்றை கவனிப்பது மிகவும் அவசியமானதாகும்.

Labels:

Monday, 17 June 2013

சுவையான... பன்னீர் குல்ச்சா

காலை வேளையில் சாதாரண சப்பாத்திகளை செய்து போர் அடித்திருந்தால், அவர்களுக்காக சூப்பரான சுவையிலும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஒரு வகையான சப்பாத்தி போன்று இருக்கும் குல்ச்சாக்களை செய்யலாம். அதிலும் இந்த பன்னீர் குல்ச்சா செய்வது மிகவும் எளிது. குறிப்பாக இத்தகைய குல்ச்சாக்களை ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிட்டிருப்போம். 
 
ஆனால் அந்த குல்ச்சாக்களை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இப்போது குல்ச்சாக்களில் மிகவும் பிரபலமான பன்னீர் குல்ச்சாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை ட்ரை செய்து பாருங்கள்.

delicious paneer kulcha
தேவையான பொருட்கள்: 
 
மைதா - 2 கப் 
வெதுவெதுப்பான பால் - 1/2 கப் 
தயிர் - 1/3 கப் 
உப்பு - 1/2 டீஸ்பூன் 
எள் - 2 டீஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 
தண்ணீர் - 2 கப் 
 
உள்ளே வைப்பதற்கு..
 
பன்னீர் - 1/2 கப் (துருவியது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 2 (தட்டியது) 
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:  
 
முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் தயிர், பால் சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். 
 
வேண்டுமெனில் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு அதனை 2 மணிநேரம் ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
2 மணிநேரம் ஆனப் பின்பு, மீண்டும் அதனை பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய பௌலில் உள்ளே வைப்பதற்கு என்று குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின் உருட்டு வைத்துள்ள மைதா உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே பன்னீர் கலவையை சிறிது வைத்து மடித்து, மீண்டும் அதனை சப்பாத்திகளாக தேய்க்க வேண்டும். 
 
அடுத்து ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள குல்ச்சாக்களை போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி லேசான பொன்னிறத்தில் வந்ததும், எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மைதா உருண்டைகளையும் செய்ய வேண்டும்.
 
 இப்போது சுவையான பன்னீர் குல்ச்சா ரெடி!!! 
 
இதனை மசாலாவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Labels:

பன்னீர் பஜ்ஜி

பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும். அந்த வகையில் பெரும்பாலும் வாழைக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்றவற்றைக் கொண்டு மட்டும் தான் பஜ்ஜி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பன்னீரைக் கொண்டு பஜ்ஜி செய்திருப்போமா? என்ன புதிதாக உள்ளதா? ஆம், உண்மையில் பன்னீரைக் கொண்டும் பஜ்ஜி செய்யலாம். 
 
மேலும் இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். குறிப்பாக பன்னீர் பஜ்ஜி செய்வது என்பது எளிமையானது. இப்போது பன்னீர் பஜ்ஜியின் செய்முறையைப் பார்ப்போம்.

paneer bajji  

தேவையான பொருட்கள்:
 
 பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது) 
கடலை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
 செய்முறை  
 
முதலில் பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். 
 
 பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!

Labels:

பச்சை பட்டாணி சப்பாத்தி

காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை பட்டாணி சப்பாத்தி சரியானதாக இருக்கும். பொதுவாக சப்பாத்தி செய்வது மிகவும் எளிமையானது. அதேப் போல் பச்சை பட்டாணி சப்பாத்தி செய்வதும் ஈஸியான ஒன்று.

குறிப்பாக இந்த பச்சை பட்டாணி சப்பாத்தியை குழந்தைகளுக்கு காலையில் செய்து கொடுத்தால், அது மதிய வேளையில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு உணவாக இருக்கும். மேலும் பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, கே மற்றும் கலோரி குறைவாக இருப்பதால், இதனைக் கொண்டு சப்பாத்தி செய்வது மிகவும் ஆரோக்கியமானது. சரி, இப்போது அந்த பச்சை பட்டாணி சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

green peas chapathy easy breakfast recipe
தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 2 டீஸ்பூன் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பிறகு மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்.

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பட்டாணி சப்பாத்தி ரெடி!!!

Labels:

பன்னீர் கட்லெட்

அனைவருக்குமே கட்லெட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மாலை வேளையில், பருவமழையின் போது டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுவது என்றால் சூப்பராக உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் கட்லெட்டில் பல வகைகள் உள்ளன. அதில் பன்னீரானது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பிடித்த ஒரு உணவுப் பொருளாகும். 
 
 அத்தகைய பன்னீரைக் கொண்டும் கட்லெட் செய்யலாம். அந்த பன்னீர் கட்லெட் செய்வது என்பது எளிமையான ஒன்று. அதன் செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.
paneer cutlet monsoon special recipe  

தேவையான பொருட்கள்: 
 
பன்னீர் - 250 கிராம் (துருவியது) 
பிரட் துண்டுகள் - 2 இஞ்சி பூண்டு 
பேஸ்ட் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
பிரட் தூள் - 1 கப் 
மைதா - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
 
செய்முறை:  
 
முதலில் பிரட் துண்டுகளை 1 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பின் அதிலுள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும். 
 
 பின்னர் ஒரு பாத்திரத்தில் பன்னீர், பிழிந்து வைத்துள்ள பிரட் துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகு தூள், உப்பு, புதினா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, கட்லெட்டுகளாக தட்டிக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு பௌலில் மைதா மாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கட்லெட்டுகளை நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். 
 
இப்போது சூப்பரான பன்னீர் கட்லெட் ரெடி!!!

Labels:

Thursday, 13 June 2013

பெண்களுக்கான சில டேட்டிங் டிப்ஸ்: பெண்களிடம் இருந்து பெற்றவை!!!

இந்த உலகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதை அனுபவிக்கும் முன் அதனைப் பற்றி அனுபவம் உள்ளவர்களிடம் முழுவதுமாக கேட்டு தெரிந்து கொண்டால் தான் அதில் முழுமையாக ஈடுபடலாம். அப்படிப்பட்ட ஒன்று தான் டேட்டிங். உங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் இந்த விளையாட்டில் இறங்கி, தவறுகள் மூலம் பாடம் கற்பதை விட, இதில் உள்ள நல்லது கெட்டதை பற்றி முன்பே அறிந்து, அதன் பின் செயலில் இறங்குவதே பாதுகாப்பானதாகும். 
டேட்டிங் செல்வதால்! உறவுகள் வளரவும், மனது ஒத்து போகவில்லையென்றால் இந்த உறவு பிரியவும் செய்யும். சில நேரம் நமக்கு ஆபத்தை தரும் வகையிலும் போய் முடியும். அதனால் நாம் சொன்னது போல் அனுபவம் பெற்றவர்களிடம் டிப்ஸ் பெறலாம். இணையதளத்தின் மூலம் அல்லது பொதுவான டேட்டிங்கில் ஈடுபட்டவர்களிடம், அவர்களுடைய அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமா? 
இதோ இதில் அனுபவம் உள்ள பெண்கள், இந்த விளையாட்டில் புதிதாக அடியெடுத்து வைக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகளை வைத்திருக்கின்றனர். பெண்களிடம் இருந்து பெற்ற இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால், டேட்டிங் செல்லும் போது தேவையற்ற பயத்தை உதறி விட்டு, அமைதியுடன் சந்தோஷத்துடன் இருக்கலாம்.

useful dating advice from women  
தனித்துவத்தை காத்திடுங்கள் 
இணையத்தளம் மூலம் டேட்டிங் செய்பவர்களுக்கு இது மிகவும் பொருந்தும். இணையதளத்தில் யாரையுமே நம்பக்கூடாது. பாதுகாப்பாக இருக்க விரும்பினால், அதற்கான ஒரே வழி, விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாமல் வைத்திருப்பதே. முழுப்பெயர், முகவரி, வாழும் ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஒரு போதும் வெளிப்படுத்தக் கூடாது. முக்கியமாக தொலைபேசி எண்ணை கண்டிப்பாக சொல்லக் கூடாது. மேலும் குடும்பத்தைப் பற்றியோ, வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியோ வாயைத் திறக்கவே கூடாது. 
முதல் டேட்

தனிமையான ஒரு இடத்தில் சந்திப்பதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ளாதீர்கள். அவரை ஒரு உணவகத்தில் சந்திக்க போகிறீர்களா? அப்படியானால் அந்த உணவகம் கூட்டம் நிறைந்த இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முதல் சந்திப்பின் நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் வேண்டும். அடுத்தடுத்து நடக்கும் சில சந்திப்பிற்கும், இந்த கவனம் இருத்தல் அவசியம். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கண்டிப்பாக சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டாம். குடும்பத்தாருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ யாரோடு, எங்கு, எப்போது செல்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவும். பத்திரமாக வீடு வந்து சேர்ந்த தகவலை தெரிவிப்பீர்கள் என்பதை சொல்லிவிடுங்கள். ஒருவேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைப்பு வரவில்லை என்றால் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். 
 நேர்மை

எப்போதும் எதற்காகவும் நடிக்க வேண்டாம். சில காலம் வரை அவரை முட்டாளாக்கலாம்/ அனால் சீக்கிரமே உண்மையான நிறம் வெளிவரத் தொடங்கி விடும். உண்மையான பெண்களையே ஆண்கள் விரும்புவர். அவரை கவர பகட்டாக செயல்படுவது, புத்திசாலியாக காட்டுவது, நகைச்சுவை உணர்வை போலியாக வெளிப்படுத்துவது போன்றவைகள் உங்களையே முட்டாளாக்கி விடும். 
தயாராக இருக்கவும்

யாருக்குத் தெரியும்? இந்த உறவு நல்ல அலைவரிசையில் இருந்தால், அடுத்தக் கட்டத்துக்குக் கூட்டிச் செல்லலாம். அதனால் டேட்டிங்கை படுக்கையறையில் தொடர நேரிடலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நன்றாக குளித்திருக்க வேண்டும். உடம்பில் இருந்து வாடை வந்தால், குளித்த பின் நல்ல வாசனையுள்ள திரவத்தை உடம்பிற்கு பூசிக் கொள்ளுங்கள். உடம்பில் உள்ள தேவையற்ற ரோமங்களை ஆண்கள் விரும்ப மாட்டார்கள்; அதனால் அதை நீக்கவும் மறந்து விடாதீர்கள். பாதுகாப்பான உடலுறவு மிகவும் அவசியம், அதனால் பாதுகாப்பாக இருங்கள். 
மோசமான விளைவு

முதல் முறை டேட்டிங்கில் சந்திக்கிறீர்களா? அப்படியானால் சில நெருக்கடியான நிலைக்கு தயாராக இருக்கவும். தாக்க முற்பட்டால், மிளகு ஸ்ப்ரேயை (pepper spray) எப்போதும் பையில் வைத்திருங்கள் அல்லது கூர்மையான காலணியை வைத்து காலை நசுக்க முயற்சி செய்யுங்கள். அருகில் இருப்பவர் கவனத்தை ஈர்க்க கத்தி கூச்சலிட்டு ஊரை கூட்டுங்கள். இது தாக்குதலில் இருந்து தடுத்து நிறுத்தும். மேலும் கிடைத்த இந்த சிறிய நேரத்தை தப்பித்து ஓட கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

Labels:

முறிந்து போன நிச்சயதார்த்தத்தில் இருந்து மீள்வது எப்படி?

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு ஏதோ காரணத்தினால், அது முறிந்து போயிருந்தால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது மிகவும் கடினம். கனவுகள், நம்பிக்கைகள், எதிர்காலத்தைப்பற்றிய ஆசைகள் அனைத்தும் ஒரு கணத்தில் தரை மட்டமாகியிருக்கும். வீட்டில் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்த, மணப்பெண்களுக்கான மணக்கோலத்தில் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகள் பீரோவில் தொங்கிக் கொண்டிருக்க, திருமண அழைப்பிதழ்கள், அனுப்பப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்க.. 
 
நிச்சயம் மனம் வேதனையின் உச்சத்திற்குச் சென்றிருக்கும். நிச்சயதார்த்தம் முறிந்து போய் திருமணம் நின்ற பிறகு, அதன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, உங்களுக்கென்று ஒரு மாறுபட்ட புதிய எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கான சில வழிகளைக் கீழே காண்போம். பழைய 
 
காதலன்/காதலியைப் போல், வேறு ஒருவரை எங்குமே காண முடியாது என்று நம்பாதீர்கள். அது உடனடியாக இல்லை என்றாலும், நீங்கள் அப்படிப்பட்ட ஒருவரை விரைவிலேயே சந்திப்பீர்கள். எதற்குமே தகுதியானவர் இல்லை என்று தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணம் வராமல் தடுத்திடுங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை வரக் காரணம், இரண்டு பேர் சேர்ந்து சரியாக செயல்படாமல் போனது தான்.
 
பழைய நினைவுகள் 
 
பழைய காதலையும், காதலரைப் பற்றியும் நினைவுபடுத்தும் பொருள்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான கட்டாயமான முதல் நடவடிக்கை இதுவாகும். அப்பொருட்களை தூக்கி தூரப் போடுங்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாமல் பரண் மேல் போடவும்.

 
உணர்ச்சிகள் 
 
அழ முடிந்தால் அழுதுவிடுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதுவிடுங்கள்.சில நாட்களுக்கு சோகத்தில் புரளுங்கள். சோகத்தை வெளிப்படுத்துகள். இறுதியில் புதிய வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள புத்துணர்வுடன் பூப்போல மலருங்கள். ஒவ்வொரு முடிவிலிருந்தும் ஒரு அழகிய தொடக்கம் பிறக்கும். இதுதான் வாழ்க்கை, உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நீதி.

 
தெரியப்படுத்தவும் 
 
பழைய சகஜமான நிலைக்கு உறுதியாகத் திரும்பியவுடன், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் திருமணம் நிறுத்தப்பட்ட விஷயத்தை தெரியப்படுத்தவும். அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, திருமணத்திற்காக பதிவு செய்திருந்த பயணச் சீட்டு, ஹோட்டல் அறைகளை ரத்து செய்யவும். நண்பர்களும் உறவினர்களும் பாசத்தோடு அளித்த பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பிவிடுங்கள். வந்திருந்த பரிசுப் பொருட்களைத் தவறாமல் திருப்பி அனுப்பும்போது, "நன்றி" செய்தியுடன் அனுப்ப மறக்காதீர்கள்.

 
நேரம் 
 
அக்கறை கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். நின்றுபோன திருமணத்தை நினைவிலிருந்து மறக்க இது உதவும். மேல் அன்பும், பரிவும், பாசமும் காட்டும் மக்கள் உங்களைச் சுற்றி இந்த நேரத்தில் இருப்பது அவசியம். அவர்கள் வேதனையையும், சோகத்தையும் பகிர்ந்து கொண்டு, இம்மாதிரியான சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்று உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். மேலும் அவர்கள் தம்மையே ஒரு நிரூபணமாக்கி நம்பிக்கையூட்டுவார்கள்.

 
தேன் நிலவு 
 
ஒரு உண்மையான நண்பருடனோ அல்லது தனியாகவோ,எங்காவது தூரமான ஒரு இடத்திற்குப் பயணம் சென்று தங்கி வாருங்கள். வித்தியாசமான இடமாக அது இருக்கட்டும். மேலும் வித்தியாசமாக அல்லது துணிச்சலாக ஏதாவது செய்யுங்கள். வழக்கமான வாழ்க்கைப் பயணத்தில் செய்து வந்ததை விட, வித்தியாசமாக ஏதாவது செய்யும் போது புத்துணர்வு பெருகும், பழையன மறந்து போகும். புதிய இடங்களுக்குச் சென்று தங்கியிருக்கும் போது, ரிலாக்ஸ் செய்வதோடு, விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள மறந்துவிடாதீர்கள்.

 
கற்றுக்கொள்ளுங்கள், மன்னியுங்கள் 
 
 திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் செய்து கொள்வதென்ற முடிவு, இரண்டு நபர்களால் செய்யப்பட்டது. அடுத்தவரிடம் மட்டும் குறை கண்டுபிடிக்கத் தொடங்கி ஆராய்ந்தால், அது கோபத்தினை மேலும் தூண்டிவிடும். என்ன நடந்தது என்று கொஞ்சம் ஆராயுங்கள். மிகையாக அலசி ஆராய வேண்டாம். இரண்டு பக்கமும் தவறு இருப்பதாக கருதினாலோ அல்லது உங்கள் பக்கம் மட்டுமே தவறு உள்ளது என்று கருதினாலோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். தவறினை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். காதலரின்/காதலியின் தவறினை மன்னித்துவிட்டதாகக் கூறுங்கள். அடுத்தவரது தவறுகள் குறித்துக் குறை கூறாமல் அதனை நீக்கும் வண்ணம் மன்னிப்பு அமையட்டும். இனிமையான தருணங்களைத் தந்ததற்காக காதலருக்கு நன்றி கூறுங்கள்.

 
மோதிரம் 
 
நிச்சயதார்த்த மோதிரத்தினை இன்னும் வைத்திருந்தால், அதனை காதலர்/காதலிக்கு அணிவியுங்கள். அது இல்லையென்றாலோ, விற்றுவிட்டாலோ, காலமெல்லாம் மனம் வருந்தி வருந்தி நொந்து போக நேரிடலாம்.

Labels:

பெண்களை கவர, ஆண்களுக்கான 10 டிப்ஸ்!!!

அணு அறிவியலை விட மிகச் சிக்கலான ஒன்று உலகில் உண்டெனில் அது கண்டிப்பாக பெண்களின் மனமாக தான் இருக்க முடியும். எதை எதையோ ஆராய முடிந்த மனிதனால். பெண்களின் மனதை அறிய முடியவில்லை. அதிலும் ஆண் பெண் உறவானது மிகவும் சிக்கலானது. இந்த சிக்கலில் மாட்டி வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர். பெண்களுக்கு என்ன பிடிக்கும்? என்கிற மிகச் சாதாரண கேள்வி ஆண்களுக்கு பல தூக்கம் இல்லாத இரவுகளே பரிசாக கிடைத்துள்ளது. ஆனால் இந்த கேள்வியின் விடை, ஆண் பெண் உறவுச் சிக்கலை சுலபமாக தீர்த்து வைக்க உதவுகிறது. 
 
எனவே உங்களுக்காக இந்த கேள்வியின் பதிலை கண்டுபிடிக்க தமிழ் போல்டு ஸ்கை, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம். அதற்காக இந்த ஆராய்ச்சிக்கு பல்வேறு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஜோடிகளை தேர்ந்தெடுத்தோம். இதன் பயனாக ஆண் பெண் உறவை பலப்படுத்துவதற்கான 10 ரகசியங்களை கண்டுபிடித்துள்ளோம். அது என்னவென்றால் பெண்களின் உண்மையான விருப்பத்தை தெரிந்து கொள்வது தான்.
 
 அதற்கு பெண்கள் விரும்பும் 10இரகசியங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

 
கரிசனம் 
 
பெண்களுக்கு உணர்ச்சி மிகுந்த ஆண்களை மிகவும் பிடிக்கும். அதிலும் பெண்கள் மனவருத்தத்தில் உள்ள போது ஆறுதல் அளிக்கும் ஆண்களை மிகவும் விரும்புவார்கள். எனவே, பெண்கள் மனதளவில் சோர்ந்து இருக்கும் பொழுது, அவர்களை ஆறுதலாக தோள் மீது சாய்த்துக் கொண்டு அவர்களின் கண்ணீரை துடைப்பது, அவர்களுக்கு இடையே உள்ள இணைப்பை பலப்படுத்தும்.

 
பண்பு 
 
பண்பான செயலுக்கு இன்றும் இடம் உண்டு. ரொமன்ஸைப் பொறுத்த வரை ஆண்கள் வலிமை மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள். பெண்கள் தங்களுடைய நாற்காலியை தள்ளுவதற்கும் அல்லது ஒரு கதவை திறப்பதற்கும் திறமை உடையவர்கள். ஆனாலும், ஆண்கள் இதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு பண்பாளராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

 
ஸ்டைல் 
 
 "ஆள் பாதி ஆடை பாதி" என்னும் கூற்றுக்கு ஏற்ப அடிக்கடி மாறக்கூடியது ஸ்டைல். ஆனாலும், மனிதர்களின் சிகையலங்காரம் மற்றும் ஆடைகளை பற்றிய ஆர்வம் மாறாதது. பெண்களுக்கு இறுக்கமான ஜீன்ஸ் பிடிக்கும் என்றால், நீங்களும் இறுக்கமான ஜீன்ஸ் அணிய வேண்டும்.
 
குறைபாடுகள் 
 
"பெண்கள் தனிநபர் வளர்ச்சியை நேசிக்கிறார்கள், அவர்கள் விரும்புவது சிந்தனை மற்றும் செயல்திறன் உள்ள ஒரு மனிதனைத் தான்". மேலும் ஆண் தன்னுடைய குறைபாட்டை ஒப்புக் கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு குறுகிய காலத்தில் நிதானத்தை இழப்பது அல்லது வேலைக்குப் பிறகும் கோபமான மனநிலையோடு இருப்பதை ஒப்புக் கொண்டு, அதை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சி, பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

 

புகழ்தல் 
 
பெண்கள் அவர்களின் அழகைப் பற்றி, பிறர் கூற பிரியப்படுவார்கள். எனவே அவர்களுடைய புதிய ஹேர்கட் மற்றும் ஆடைகளை பற்றி புகழ்ந்து கூறுங்கள். இது இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும்.
 
வெளிப்படையான பேச்சு 
 
பெண் தன்னுடைய உறவைப் பற்றி பேச விரும்புகிறாரெனில், ஏதோ தவறு செய்தது போல் பயப்படாதீர்கள். இது ஒரு நல்ல விஷயம் தான். ஒரு நேர்மையான, திறந்த மனதுடன் கூடிய பேச்சு நெருக்கத்தை அதிகரிக்கும்.
 
காதல்  
 
காதல் என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அது இரண்டு மாத காதலானலும், 20 வருட காதலானாலும் ஒன்று தான். பெரும்பாலான பெண்களுக்கு எளிமையான காதல் சைகைகள் மிகவும் பிடிக்கும். அவர்கள் அதை மறைமுகமாக பாராட்டுவார்கள்.
 
பிடித்தவை 
 
என்ன பிடிக்கும் என்பதை கேளுங்கள். அதிலும் நீங்கள் விரும்புவதை அவளிடம் ஒரு நேர்மறையான மற்றும் உறுதிப்படுத்திய வழியில் கேட்பது நல்லது.

 
ஆதரவு 
 
பெண்கள் பிரச்சனையில் இருக்கும் பொழுது, அறிவுரையை விட, ஆதரவையே தேடுகிறார்கள். ஆண்கள் எப்பொழுதும் தீர்வு சார்ந்த விஷயங்களை யோசித்து பிரச்சனைகளை சரி செய்யவே விரும்புவார்கள். ஆனால் பெண்களுக்கு, பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பது ஒரு உன்னதமான மற்றும் அற்புதமான விஷயம் ஆகும்.

 
தலையாட்டியது போதும் 
 
கவனித்தல் மிக முக்கியமானது. அதை பெண்கள் உணர்வது அதைவிட முக்கியமானது. தலையசைப்பது என்பது பிரச்சனைக்கு தீர்வாகாது. பெண்கள் பிரச்சனைகளை கூறும் பொழுது கொடுக்கும் ஒரு சிறு மெளனம் என்பது ஒரு கருணையுடன், அக்கறையான வழியில் பதிலை கொடுப்பதற்கு தரும் ஒரு சந்தர்ப்பம் ஆகும். அவர்கள் தன் மேலதிகாரி ஒரு கடினமான வேலையை கொடுத்தார் என கூறினால், அவர்கள் உங்களிடமிருந்து , "நான் மிகவும் வருந்துகிறேன், உன்னுடைய வேலை இன்று முழுவதும் உன்னை ஆட்கொண்டு விட்டது" என்கிற பதிலை எதிர்பார்க்கிறார்கள் என அர்த்தம்.
 
இறுதியாக ஒன்று 
 
 தீர்வுகளை வழங்க துடிக்கும் ஆண்கள் ஆர்வத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்.



Labels:

காதல் செய்ய வேண்டாம் என்பதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாத இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக, கண்ட உடன் காதல், காணாமலே காதல், தொலைப்பேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம். இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன்!!. 
 
இது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா ? என்ன செய்வது ? என்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள்.
 
காதல் ஒரு உன்னதமான உணர்வு. காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப் பூர்வமாக தான் அறிய முடியும். மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பது காதல். இது போல காதலை தலையில் தூக்கி கொண்டாடுபவர்கள் பலர். ஆனால், எங்களைப் பொறுத்த வரை காதல் ஒரு வலி. சந்தோஷமாக, உல்லாசமாக வாழ்க்கையை அனுபவிக்கும் மனிதனுக்கு வரக்கூடாத ஒரு உணர்வு, காதல். சரி, அப்படி என்ன காதல் மேல் இவ்வளவு கோபம் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் இருங்கள். காதலே வேண்டாம் பாஸ்... 
 
இதை விட நல்ல விஷயங்கள் உலகில் எவ்வளவோ இருக்கிறது என்ற தரப்பு நியாயத்தை வலுப்படுத்த, இதோ உங்களுக்காக 10 காரணங்கள்.
 
சின்ன அட்வைஸ் 
 
இவை அனைத்தையும் விட, காதல் வந்ததும் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வேறு எதுவுமே செய்ய முடியவில்லை என்று சிலர் சொல்வதைத் தான் சுத்தமாக ஜீரணிக்கவே முடியவில்லை. என்னமோங்க... நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டோம்... இனிமேல் நீங்கள் தான் உங்கள் கருத்துக்களைச் சொல்லணும்!

 
காதல் ஒரு வலி 
 
தலை வலி, கால் வலி, முதுகு வலி போன்ற வலிகள் எல்லாம் மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும். ஆனால் இந்தக் காதல் இருக்கே, மனதை வருடி, ஏமாற்றி, பிறகு உடைத்தே விடும். இந்த வலிக்கு மருந்தே கிடையாது. இப்படி உடைந்து போன பழைய காதலை மறப்பதற்கு, நாம் படும் அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஏன் இப்படி காதலில் விழுகிறோம் என்று பார்த்தால், அதற்கு முக்கிய காரணம் நம் பலவீனம் தான். காதல் செய்ய முடிவெடுத்துவிட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக காதலில் விழுந்தேன் என்று தான் சொல்வார்கள். விழுவது என்பது சுயநினைவோடு செய்யும் செயல் அல்ல, அது ஒரு விபத்து. காதலும் அப்படி தான். இந்த விபத்தில் அகப்படாமல் இருப்பதே, வாழ்கையை வலியில்லாமல் வாழ சிறந்த வழியாகும்.

 
ரகசியம்  
 
காதலில் இரு மனங்கள் ஒன்றாக கலந்து, இரு உடல் ஓர் உயிராக மாறிவிடுகின்றனர். அப்படியிருக்கும் போது, எந்த ஒரு ரகசியத்தையும் மனதுக்குள் வைத்திருக்க முடியாது. நம்மைப் பற்றி எல்லாவற்றையும் காதலரிடம் சொல்ல வேண்டும் என்பது கட்டாயம். என்ன தான் காரணம் சொன்னாலும், காதலன்/காதலி என்பவர் ஒரு வெளி நபர். நம்மைப் பற்றி, நம் குடும்பத்தைப் பற்றி, நம் ரகசியங்களைப் பற்றி, வெளி நபர் ஒருவரிடம் சொல்வது எந்தளவுக்கு நம்பகத் தகுந்ததாக இருக்கும். நம்முடைய ரகசியங்களை வேறொரு நபருக்கு எதற்காக சொல்ல வேண்டும்? நம்முடைய பலவீனங்களை நாமே எதற்கு வெளிகாட்டிக் கொள்ள வேண்டும்? வேணவே வேணாம்


மைனர் ஜாலி, மணி பர்ஸ் காலி  
 
கொஞ்ச நஞ்சம் இருக்கும் காசும், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தே தீர்ந்து விடும். காதலரின் பிறந்த நாள் தொடங்கி, அவர் வளர்க்கும் நாய்குட்டியின் பிறந்தநாள் வரைக்கும், அனைத்துக்கும் பரிசுப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் வாங்கிக் கொடுக்கணும். அப்போது தான் அவர்களை சந்தோஷப் படுத்தி பார்க்க முடியும். நாம் இருக்கும் பொருளாதார நிலைமையில் இதெல்லாம் நமக்கு தேவையா பாஸ் ? இப்படி காதலுக்காக தேவையில்லாமல் பணம் செலவழிப்பதை விட, நிம்மதியா 10 ரூபாய் கொடுத்து, ரோட்டு ஓர கடையில் பானி பூரி சாப்பிடுவது எவ்வளவோ மேல். கோவப்படாதீங்க... கொஞ்சம் பொறுமையாக கேளுங்க... காதலில் விழாதீங்க...

 
ளையை நசுக்கிப் பிழியும்  
 
காதலரை எப்படி ஆச்சர்யப்படுத்துவது? எந்த மாதிரி பரிசுப் பொருட்கள் கொடுக்கலாம்? வார இறுதியில் எங்கு அழைத்துச் செல்லலாம்? எந்த மாதிரியெல்லாம் செய்தால் காதலர் நம் அன்பை நினைத்து மகிழ்வார்? இப்படி யோசித்து யோசித்து, நமக்கு இருக்கும் மூளையை கசக்கிப் பிழிய வைக்கும் இந்தக் காதல். காதலுக்காக இவ்வளவு சிரமப்பட்டு சிந்தனை செய்வதற்கு பதிலாக, வேறு ஏதாவது நல்ல விஷயத்துக்கு சிந்தனை செய்தால், வாழ்வில் முன்னேற வழிவகுக்கும். ஆனால், இந்தக் காதல் நம் காலை வாரி விடவே பார்க்கும்.
 
சுதந்திரமே போச்சு 
 
இத்தனை நாட்கள் பெற்றோரின் பேச்சு வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்திருப்போம். அது நல்லது, நம் வாழ்கையை நல்வழிப்படுத்த உதவும். ஆனால், காதலுக்குப் பிறகு, காதலரின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். இவன் கிட்ட பேசாதே... அவள் கிட்ட பேசாதே... நீ ஏன் அவளுக்கு போன் பண்ணே ? நேற்று ரொம்ப நேரம் போன் பிசியாகவே இருந்ததே... யார் கிட்ட பேசினீங்க? இப்படி எல்லாவற்றிலும், நம் சுதந்திரம் போய்விடும். ஆசைப்பட்டு நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போன்ற இந்த காதல் நமக்கு தேவையா?

 
சந்தர்ப்பங்கள்  
 
கதவு தட்டினாலும், திறக்க முடியாது ஒரு சமயத்தில் ஒருவரைத் தானே காதலிக்க முடியும். சில சமயங்களில், நமக்கு ஏற்ற துணை கொஞ்சம் கால தாமதமாக வரலாம். ஆனால், அதற்குள் அவசரப்பட்டு காதலில் விழுந்துவிடுகிறோம். அவ்வாறு, காதலரை விட சிறப்பான, அன்பான வேறு ஒருவர் நம் வாழ்வில் வர முயன்றாலும், அவருக்கு நோ சொல்லி அனுப்பி விட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவரைக் காதலிப்பதால், இப்படிப்பட்ட நல்ல சந்தர்ப்பங்களை இழக்க வேண்டி வரும்.
 
காசு மற்றும் நேரச் செலவும் அதிகம் 
 
நம்முடைய பொன்னான நேரத்தை காதல் வீணடிக்கும். நாம் ஒருவரை காதலிக்கும் போது, அவருக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும், பேச வேண்டும், வெளியே செல்ல வேண்டும். இதுமட்டுமல்லாமல், ஓயாமல் இரவும், பகலும் காரணமே இல்லாமல் போனில் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற நிர்பந்தங்களால் நம்முடைய நேரம் பெரும்பாலும் காதலருக்காகவே செலவு செய்கிறோம். இதெல்லாம் நமக்கு தேவையா? இப்படி நேரத்தை வீணடிப்பதற்கு, டிவி சீரியல் பார்ப்பது எவ்வளவோ மேல். சண்டை, சச்சரவு இல்லாமல் பொழுது போகும்.
 
அழகு 
 
காதலில் விழுந்தவுடன், அனைவரும் காதலரின் கண்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என்று நினைப்போம். இந்த கலர் சுடிதார் போடுவதா, என்ன பொட்டு வைப்பது, கம்மல் நல்லா இருக்குமா, பூ வெச்சுக்கலாமா வேணாமா, லிப்ஸ்டிக் போட்டா அவருக்குப் பிடிக்குமா பிடிக்காதா என தன்னை தன் காதலர் விரும்ப என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். ஒரு காலத்தில், தன் வெளித்தோற்றத்தைப் பற்றியெல்லாம் அதிகமாக கவலைப்படாமல் இருந்திருப்போம். ஆனால், இப்போது கதை அப்படியே தலை கீழாக மாறிவிட்டது பாருங்கள். கண்ணாடி முன்னாடி ஒரு மணி நேரம் நிற்க வைக்கும் இந்த காதல் தேவையா மேடம்...கொஞ்சம் யோசிச்சு பாருங்க!

 
கனவையும் லட்சியத்தையும் நாசமாக்கும் 
 
காதல் வந்தவுடன் காதலே கதி என்று சுற்றி உள்ள அனைத்தையும் புறக்கணிப்பார்கள். கேட்டால் அது ஒரு உணர்வு, அது வந்தால் அப்படித் தான் இருக்கும். சரி, அது எப்படியோ இருந்து விட்டு போகட்டும். ஆனால், இந்தக் காதலினால், படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, வேலை போன்ற விஷயங்களில் நாட்டம் இல்லாமல் இருப்பது என வாழ்க்கையின் கனவையும், லட்சியத்தையும் காதலுக்கு அடகு வைக்கும் நிலைமை ஏற்படுகிறது. காதலுக்கு முன்னுரிமை கொடுப்பதால், வாழ்க்கையின் லட்சியங்களை அடையவிடாமல் தடுக்கிறது. இப்படி நம் வாழ்கையையே சீரழிக்கும் காதல் நமக்கு தேவைதானா?

 
முட்டாளாக்கும் 
 
 10 நிமிடம் காதலரை சந்திப்பது தொடர்பாக, 4 மணி நேரம் அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். சிறிது சிறிதாக சேமித்த பணம் அனைத்தையும் காதலருக்கு பரிசுப் பொருட்கள் வாங்க செலவு செய்வார்கள். காதல் நம்மை எப்படி முட்டாளாக்குகிறது என்று பாருங்கள். ஆனால், காதலில் இருக்கும் போது இதெல்லாம் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதை ஒப்புக் கொள்ளும் நிலையில் மனம் இருக்காது. எதைச் செய்வது முட்டாள்தனம் என்று நினைத்திருப்போமே, காதல் வந்த பின் நம்மை அறியாமலேயே அதே முட்டாளதனத்தைச் செய்வோம். என்னமோ போங்க, இவ்வளவு அவஸ்தைப்பட்டு காதல் செய்யணுமா?

Labels: