Thursday, 31 January 2013

பச்சை பட்டாணி இட்லி

காலை வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரத்தில், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சற்று வித்தியாசமானதாகவும் சமைக்க வேண்டுமென்று நினைத்தால், அப்போது வீட்டில் பச்சை பட்டாணி, ரவை மற்றும் வெந்தயக்கீரை இருந்தால், எளிதில் சூப்பராக வித்தியாசமான சுவையில் ஒரு இட்லி செய்யலாம். 
 
இந்த இட்லி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளுக்கு பிடித்தவாறும் இருக்கும். இப்போது அந்த பச்சை பட்டாணி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

delicious green peas idli
தேவையான பொருட்கள்
 
ரவை - 2 கப் (வறுத்தது) 
பச்சை பட்டாணி - 3/4 கப் (வறுத்து, லேசாக அரைத்தது) 
வெந்தயக்கீரை - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) 
தயிர் - 2 டீஸ்பூன் 
ஓட்ஸ் - 2 டீஸ்பூன் 
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
 செய்முறை: 
 
 ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், வெந்தயக்கீரை, பட்டாணி, ஓட்ஸ், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். 
 
 பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும். 
 
 பிறகு 10 நிமிடம் கழித்து, இட்லிப் பாத்திரத்தை திறந்து இட்லிகளை எடுக்க வேண்டும். இப்போது வித்தியாசமான பச்சை பட்டாணி இட்லி ரெடி!!! 
 
இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Labels:

வெஜிடேபிள் சமோசா

ஸ்நாக்ஸ்களில் சமோசா மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய சமோசா வகைகளில் பல உள்ளன. அவை வெஜிடேபிள் சமோசா, பன்னீர் சமோசா என்பன.
 
 அதிலும் இந்த மாதிரியான சமோசாக்களை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

vegetable samosa recipe
தேவையான பொருட்கள்: 
 
 உள்ளே வைப்பதற்கு....
 
 உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
 பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது) 
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது) 
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) 
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
 
 மாவிற்கு.... 
 
மைதா - 2 கப் 
எண்ணெய் - 3 கப் 
உப்பு - 1 சிட்டிகை 
தண்ணீர் - 2 கப் 
 
செய்முறை:  
 
ஒரு பெரிய பௌலில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 
 
பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பௌலில் பன்னீர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மற்றும் பச்சை பட்டாணி போட்டு, நன்கு அனைத்தையும் ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
 
 பின்பு அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 
 அடுத்து ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, அதில் அந்த உருண்டையை வைத்து அரைவட்டமாக தேய்த்து, பின் அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
 இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அந்த சமோசாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
 
 இப்போது சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Labels:

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா?


சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ’யாக விட்டுவிடுவார்கள்.

அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.
உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்…

பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Labels:

குழந்தைகளுக்கான உணவு ஊட்டறீங்களா? பொறுமை தேவை….


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்


புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.
அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

Labels:

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்காதீங்க !


உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று நச்சரித்தால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 4 வயது முதல் 8 வயதுடைய குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அப்போது ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

உணவின் மீது வெறுப்பு

குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும். பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சேர்ட் உல்ப்சன், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Labels:

வளரும் பருவத்தில்…

வளரும் பருவத்தில்...

குழந்தைப் பருவம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. இந்தப் பருவம் சரியாக அமையும் குழந்தைகள் தான் எதிர்காலத்தில் பிரகாசிக்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு என்பது உணவு, உடை, கல்வி இவற்றுடன் முடிந்து விடாது. இதை விடவும் முக்கியம், அவர்களுடைய பழக்க வழக்கங்கள். அதிலும் முக்கியமாக நல்லொழுக்கம்.

பிள்ளைகள் வளரும் பருவத்தில் நாம் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் தான் பெரியவர்களாகும் போதும் அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கும் . அவர்கள் காணும் ஒவ்வொரு விஷயமும் மனதில் ஆழமாக பதிந்து விடும்.
அது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் விஷயமாக மாற வாய்ப்பிருக்கிறது. கடுமையான உள்ளப் பதிவுகள் அவர்களை மனநோயாளியாக மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. அவர்களின் பல தீய செய்கைகளுக்கு கடந்த கால வாழ்க்கையும் காரணமாக இருக்கலாம்.

ஆரோக்கிய உணவு
:

 ஆரோக்கியமான உணவு வகைகளை ஐந்து வயதுக்குள் சாப்பிட பழக்கி விட வேண்டும். சிறுவயதில் பழக்கப்படாத உணவு வகைகளை அப்புறமாய்  உடல் ஏற்காது. அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதனால் எல்லா வகையான உணவுகளையும் சிறுவயது முதற்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட பழக்கிவிட வேண்டும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் வீட்டில் பிள்ளைகள் சாப்பிட மறுக்கும் போது அப்படியே விட்டுவிடக் கூடாது. மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல உணவகத்திற்கு அழைத்துச் சென்று சுவையான உணவு வகைகளை சாப்பிட பழக்கிவிடும் போது அதை விரும்பிச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். பிறகு நாம் வீட்டில் சமைக்கும் உணவு சுவை குறைவாக இருந்தாலும் அதை தொடர்ந்து சாப்பிடுவார்கள்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை அடித்து பயமுறுத்துவது தவறான அμகுமுறை. அவர்களுக்கு நல்ல பசியை வரவழைத்து உணவை கொடுத்துப் பாருங்கள். அதே போல திருமண வீடுகளுக்குச் சென்றாலும் அருகில் அமர வைத்து எதை முதலில் சாப்பிட வேண்டும். எதை கடைசியில் சாப்பிட வேண்டும் என்பதையும், இலையில் மீதம் வைக்காமல் எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் கற்றுத் தாருங்கள்.
அதுமாதிரி தொடர்ந்து சைவம் சாப்பிட்டு வரும் குழந்தைகளிடம் திடீரென்று அசைவத்தை திணிக்க வேண்டாம். அது புட் பாயிசனாக மாறிவிடும் அபாயம் உண்டு. அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஐந்து வய துக்குள் தீர்மானித்து விடுங்கள்.


எதிர்பார்ப்பு:

அதிகமாக சேட்டைகள் செய்யும் குழந்தைகளை உற்றுப் பார்த்தால் நிச்சயம் அவர்களிடம் ஏதாவது எதிர்பார்ப்பு இருப்பதை உணர முடியும். நம் கவனத்தை ஈர்க்க அப்படி சேட்டைகள் செய்யலாம். நாம் சிறிய குழந்தைகளை அதிகம் கவனிக்கும் போது தங்கள் மீது கவனம் திரும்ப வேண்டும் என்று பெரிய குழந்தைகள் சேட்டைகள் செய்யலாம். அவர்கள் கோபத்தை எரிச்சலை நம் மீது காட்ட எதையாவது உடைக்கலாம்.
நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பொருளை தொலைத்து விட்டு தேட விடலாம். இதற்கெல்லாம் உள் காரணங்கள் என்ன என்பதை மனோரீதியாக உணர்ந்தால் சேட்டைகளை குறைக்க வகை தேடலாம். நீங்கள் அன்பை கொட்டினால் பதிலுக்கு அவர்களும் வள்ளலாக மாறி பாசத்தை கொட்டுவார்கள்.

மேலும் தம்பி, தங்கைகளின் முக்கியத்துவத்தை அன்பாக சொல்லி புரியவைத்தால், அவர்களும் பராமரிப்பில் கைகொடுப்பார்கள். மாறாக திட்டி உதைத்து அவர்கள் மனதை மாற்ற முற்பட்டால், தன்னை மற்றவர்கள் வெறுக்க காரணமான தம்பி தங்கைகளை அவர்கள் வெறுக்கலாம். அதுவே காலப் போக்கில் பாச இடைவெளியை ஏற்படுத்தி விடும் அபாயமும் உண்டு.

ஒப்பிடும் குணம்: 

 பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.
அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.

குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.
பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல்.

மரியாதை:

குழந்தைகள் தானே என்று நினைத்து மரியாதை கொடுக்காமல் ஒதுக்கி விடாதீர்கள். குறிப்பாக உறவினர்கள் மத்தியில் தங்களை குறைகூறுவதை அவர்கள் ஒரு போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நாம் பெரியவர்களுக்கு நிகராக அவர்களுக்குத்தரும் மரியாதை அவர்களைப் பெருமைப்படுத்தி மகிழ வைக்கும். அது அவர்கள் நமக்கு கட்டுப்பட்டு நடக்க அனுகூலமாக இருக்கும். அவர்களும் மகிழ்ச்சியாக மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.

சண்டை வேண்டாம்:
முக்கியமான, தீர்க்க முடியாத குடும்ப பிரச்சினைகளை ஒருபோதும் குழந்தைகள் முன் பேசிக் கொள்ளாதீர்கள். அது அவர்கள் மனதில் பதிந்து ஒரு ஆழமான திகிலை உண்டாக்கி விடும். நம் குடும்பத்தில் இப்படி தீர்க்க முடியாத பிரச்சினை தொடர்ந்து விட்டால் என்னாவது என்று அவர்கள் தீவிரமாக கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இது அவர்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி விடும். நாளடைவில் மனோவியாதியாகவும் மாறி விடும். பிள்ளைகள் முன்பாக சில பெற்றோர் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதன் விளைவு மிகவும் விபரீதமாக இருக்கும். பெற்றோர் சண்டை முடிந்து இயல்பான பின்னும் பிள்ளைகள் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இது அவர்களை எதிர்காலத்தில் மன நோயாளிகளாக மாற்றி விடும். படிப்பில் கவனக் குறைவு ஏற்படலாம். எதிர்கால நம்பிக்கையை இழக்கலாம். குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர் ஒரு போதும் தங்கள் பிள்ளைகள் முன் எந்த சண்டை சச்சரவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது.


குழந்தைகள் ஒருவரிடம் மற்றவர் அன்பாக இருக்க கற்றுக் கொடுங்கள். சண்டை சச்சரவுகள் வரும்போது எரிச்சலோடு நடந்து கொள்ளாதீர்கள். பிரச்சினையை கேட்டு அதற்கு தீர்வு சொல்லுங்கள். சண்டை ஏற்படாமல் இருக்க நல்ல ஆலோசனைகளை கூறுங்கள். தவறு செய்த பிள்ளைகளை மென்மையாக கண்டிக்கவும் செய்யுங்கள்.


இதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு உங்களிடம் ஓடிவரும் குழந்தைகளை அன்பாக அணுகி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை கூறுங்கள். அந்த ஆலோசனைகள் அவர்களுக்கு வருங்காலத்திலும் பயன்படலாம்.
சிறிய குழந்தைகள் பெரிய குழந்தைகளை தாக்க வரும் போது அவர்களை திருப்பி அடிக்கவோ கீழே தள்ளி விடவோ கூடாது. மாறாக அவர்களிடமிருந்து விலகிக் கொள்ளவும், முடிந்தால் தப்பித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள்.


படிப்பில் கவனம்:  

குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சில நேரங்களில் அது எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. அப்போது அவர்களிடம் சிடுசிடுக்காமல் மூலகாரணம் என்னவென்று ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய சோர்வுக்கு பின் னால் ஏதேனும் ஒரு வலியிருக்கும்.
வெளியில் ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம். எதையாவது பார்த்து பயந்திருக்கலாம். அதை கேட்டறிந்து தெளிவு படுத்திய பின் பாடத்தை தொடரச் சொல்லுங்கள். எப்போதும் நீங்கள் துணையிருப்பதை நினைவுபடுத்துங்கள்.

புதிய பலம் பெறுவார்கள். தூக்கத்தில் உளறுவது, கெட்ட கனவு கண்டு அடிக்கடி அலறுவது போன்ற செயல்களிருந்தால் சிறுவயதில் ஏற்பட்ட ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கலாம். நல்ல குழந்தை மனநல மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு குணப்படுத்துங்கள். கவனிக்காமல் விடும்பட்சத்தில் அந்தப் பிரச்சினை அவர்க ளுடைய எதிர்காலத்தை பெரிதாக பாதிக்கலாம்.

Labels:

31 Embroidered Designer ans Silk Sarees

Labels:

70 Printed Salwar Suit. & Cotton Embroidered Salwar Suit.

Labels: