Monday, 4 February 2013

மக்ரோனி சூப்

Keep adding water makroniyai speed. Take boiled peas. Potato, pumpkin rind removed, fragmentation. Remove rind chop the onion. Melted butter, pumpkin, onion, potatoes good fry 5 minutes.என்னென்ன தேவை?

சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
மிளகுத்தூள் – ருசிக்கேற்ப,
உப்பு – சுவைக்கேற்ப.
சூப் செய்ய:
வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
உருளைக்கிழங்கு – 1,
பெரிய வெங்காயம் – 1,
பால் – அரை கப்,
உப்பு – சுவைக்கேற்ப,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மக்ரோனியை தண்ணீர் சேர்த்து வேகவையுங்கள்.

 பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள்.

வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள்.

வெண்ணெயை உருக்கி, பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள்.

அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வையுங்கள்.

இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்ததை மீண்டும் முதலில் வேகவைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இறக்கிய சூப்பில், பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத்தூள் தூவிப் பரிமாறுங்கள்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home