Tuesday, 5 February 2013

வேர்க்கடலை போண்டா

Groundnut Bread Bonda - Cooking Recipes in Tamil
போண்டா சாப்பிட ஆசையா இருக்கு.. ஆனா கடலைமாவு ஒத்துக்காது. அஜீரணத்தொல்லையால அவதிப்பட வேண்டியிருக்குமேனு அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்.. இதோ இந்த சத்தான வேர்க்கடலை போண்டா செய்து சாப்பிடுங்கள் ருசி பிரமாதமாயிருக்கும். பிரட் சேர்த்திருப்பதால் மிருதுவாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். திண்ணத் திண்ண ஆசையை தூண்டும்.....

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
முந்திரி பருப்பு - அரை கப்
பிரட் துண்டுகள் - 2 கப்
பால் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொரிப்பதற்கு எண்ணை - 400 கிராம்

செய்முறை:

* வேர்க்கடலை, முந்திரி பருப்பு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, எல்லாவற்றையும் மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
* பிரட் துண்டுகளை உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து, பால் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
* தேவையான உப்பைக் கடைசியாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும், செய்துவைத்திருக்கும் கலவையை போண்டாக்களாக கிள்ளி எண்ணையில் போடவும்.
* நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிகட்டியில் போடவும்.
* ஒருதட்டில் வைத்து சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: கடலை மாவு சேர்க்காதலால் குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே கொடுக்கலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home