Monday, 11 February 2013

தயிர் மசாலா

Curd Masala - Cooking Recipes in Tamil
தேவையான பொருட்கள்:-

கெட்டி தயிர் - 2 கப்
தக்காளி - 3
கடலைமாவு - கால் கப்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க:-

பூண்டு - 5
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
முந்திரி - 6
செய்முறை:-

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள்.

அரைத்த விழுதுடன், தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கரையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள்.

 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்துக் காயவைத்து, தக்காளித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள்.

இதனுடன், விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சப்பாத்தி, பூரிக்கான சுவை மிகு சைட்டிஷ் இது.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home