Tuesday, 26 February 2013

முகம் பளபளக்க...For a Cleaning and Shining Face


முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்கமின்றி இருக்கவும்... இதோ வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...
  • எலுமிச்சை சாறும், தேனும் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனால் முகத்தில் விழும் சுருக்கங்கள் மறையும். 

  • முகத்திற்கு உருளைக்கிழங்கு சாற்றையும் தடவலாம். இதனால் முகம் பளிச்சென்று இருக்கும். 

  • தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டார் ஒரு ஸ்பூன், ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும். 

  • தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ் செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும். 

  • ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணை ஒரு ஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். 

  • இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள் காலையில் முகம் கழுவி வரவும். சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக மாறும். 
  •  
  • வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியாமல் இருக்கும், முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home