ஒரு விரல் ஒய்யப்பன்!- மருது அழகுராஜ்
கொஞ்சம்
கொஞ்சமாய்
விழுங்கும் குஷ்டம்
விட்டு வச்சிருக்கும் மிச்சம்
ஒரு விரல்!
அதனால,
ஒய்யப்பனை
ஒரு விரல் ஒய்யப்பன்னு
ஊரு கூப்புடும்
சுழன்றடிச்ச சூறாவளியில
சுத்தமா நெனைவிழந்து
தரதட்டி நின்ன கப்பலா
அவன் வந்து நின்னது
தகரக் கொட்டகைன்னு
ஊரு சொல்லும்
எங்க ஊரு
பஸ் ஸ்டாண்டில்.....
மொத்தமா நிக்கும்
மனுசனையே
வெறிச்சுப் பாக்கும்
எங்க கூட்டம்
செல்லரிச்சுப்போய்
மிச்சமா நிக்கும்
அந்த சேதார மனுசன
உத்துப் பாத்து
உச்சு கொட்டுச்சு
காலத்தோட சுழற்சியில
புதுசா ஊருக்குள்
நுழையும் முதல் பிரவேச
மனுசங்களுக்கு
அட்ரஸ் சொல்ற
ஆட்காட்டி
ஆகிப்போனான்
ஒய்யப்பன்
நாய்க்கும் பூனைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
ஆகாரம் போடும் ஊரு
ஒய்யப்பனுக்கும்
சோத்துப் பஞ்சம்
வராம பாத்துக்கிச்சு
"ஒய்யப்பனுக்கு
கருநாக்கு.
சொன்னா வாக்கு
பலிக்கும்"
எவனோ கொளுத்திப்
போட்ட
ஒத்த வெடியில
நம்ம ஒய்யப்பன்
அருள் வாக்கு
சித்தரானான்!
அலுமினியத் தட்டுல
அஞ்சு பைசாவ போட்டுட்டு
'நான் பாஸ்ன்னு சொல்லு'
வரங்கேட்டு நிக்கும்
பள்ளிக்கூடத்துப் பயலுக
"இந்த வருசம்
நல்லா வெளையும்ன்னு
நல் வார்த்தை சொல்லுப்பா"
வெத நெல்லு
சுமந்து கொண்டு
நல்வாக்கு கேக்கும்
சுப்பம்மா
"போற காரியம்
நெறையாகணும்னு
வெளஞ்ச வார்த்தையா
சொல்லுப்பா"
வேண்டி நிக்கும்
கேசவஞ்செட்டியார்
இப்படி,
ஒய்யப்பன் நாக்குக்கு
ஊரு மரியாத
கூடிப்போச்சு
நல்வார்த்தை சொல்லும்
ஒய்யப்பனின் தட்டுல
சில்லரைகள் விழுந்துச்சு
காலப்போக்குல சில்லரை
விழுந்தா மட்டுமே
ஒய்யப்பனின் நாக்கு
நல்ல வார்த்தைகளைச்
சொல்லுச்சு
காசு போடாம
ஓசியில ஆசி கேட்டா,
'போடா தோசி'ன்னு
நாராசர நடையில
விசுவாமித்திரரா
விசுவரூபம் எடுப்பான்
அஞ்சாம் வகுப்புவர
எல்லோரையும்
பாசாக்கணும்கிறது
கவர்மெண்ட உத்தரவு!
ஆனா,
அதை அறியாத
எங்க ஊரு பொடுசுக
ஒரு விரலாரின்
கருநாக்கே காரணம்
என்றன!
மனுசன் வடிச்ச
வேர்வையும்
மானம் வடிச்ச
மாரியும்
வெளஞ்ச வெள்ளாமைக்கு
காரணங்கிறது போயி,
'ஒய்யப்பன் நாக்கே
பிரதானம்'னு
பேசப்பட்டுச்சு
எப்படியோ....
ஊரோடயும், மக்களோடயும்
ஒன்றிப்போனான்
ஒய்யப்பன்
ஆனா,
சமீபமா அவனுக்கு
சீக்கு முத்திப்போச்சு
"பட்டணத்து
ஆஸ்பத்திரியில
குஷ்டக்காரனுக்கு
வைத்தியம் கெடையாது"ன்னு
வெரட்டிட்டாங்க
'ரெண்டொரு நாள்ல
முடிஞ்சு போயிடும்'னாங்க
அன்னைக்கு
சந்திரகிரணம்
ஊரே கூடி
வேடிக்கை பாத்துச்சு
'நெலாவ பாம்பு
முழுங்குது'ன்னு
உச்சு கொட்டுச்சு ஊரு!
அப்ப....
சப்பாணி வேகமா
ஓடியாந்தான்
'ஒய்யப்பன்
செத்துட்டான்'னான்.
இங்க மிச்ச
சந்திரனையும்
பாம்பு முழுங்கிடுச்சு
நம்ம ஒய்யப்பன
முழுங்கன
குஷ்டங் கணக்கா
இருந்தாலும்,
கொஞ்ச நேரத்துல
நெலா மீண்டும் வந்துருச்சு!
ஆனா....
நம்ம ஒய்யப்பன்?
கொஞ்சமாய்
விழுங்கும் குஷ்டம்
விட்டு வச்சிருக்கும் மிச்சம்
ஒரு விரல்!
அதனால,
ஒய்யப்பனை
ஒரு விரல் ஒய்யப்பன்னு
ஊரு கூப்புடும்
சுழன்றடிச்ச சூறாவளியில
சுத்தமா நெனைவிழந்து
தரதட்டி நின்ன கப்பலா
அவன் வந்து நின்னது
தகரக் கொட்டகைன்னு
ஊரு சொல்லும்
எங்க ஊரு
பஸ் ஸ்டாண்டில்.....
மொத்தமா நிக்கும்
மனுசனையே
வெறிச்சுப் பாக்கும்
எங்க கூட்டம்
செல்லரிச்சுப்போய்
மிச்சமா நிக்கும்
அந்த சேதார மனுசன
உத்துப் பாத்து
உச்சு கொட்டுச்சு
காலத்தோட சுழற்சியில
புதுசா ஊருக்குள்
நுழையும் முதல் பிரவேச
மனுசங்களுக்கு
அட்ரஸ் சொல்ற
ஆட்காட்டி
ஆகிப்போனான்
ஒய்யப்பன்
நாய்க்கும் பூனைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
ஆகாரம் போடும் ஊரு
ஒய்யப்பனுக்கும்
சோத்துப் பஞ்சம்
வராம பாத்துக்கிச்சு
"ஒய்யப்பனுக்கு
கருநாக்கு.
சொன்னா வாக்கு
பலிக்கும்"
எவனோ கொளுத்திப்
போட்ட
ஒத்த வெடியில
நம்ம ஒய்யப்பன்
அருள் வாக்கு
சித்தரானான்!
அலுமினியத் தட்டுல
அஞ்சு பைசாவ போட்டுட்டு
'நான் பாஸ்ன்னு சொல்லு'
வரங்கேட்டு நிக்கும்
பள்ளிக்கூடத்துப் பயலுக
"இந்த வருசம்
நல்லா வெளையும்ன்னு
நல் வார்த்தை சொல்லுப்பா"
வெத நெல்லு
சுமந்து கொண்டு
நல்வாக்கு கேக்கும்
சுப்பம்மா
"போற காரியம்
நெறையாகணும்னு
வெளஞ்ச வார்த்தையா
சொல்லுப்பா"
வேண்டி நிக்கும்
கேசவஞ்செட்டியார்
இப்படி,
ஒய்யப்பன் நாக்குக்கு
ஊரு மரியாத
கூடிப்போச்சு
நல்வார்த்தை சொல்லும்
ஒய்யப்பனின் தட்டுல
சில்லரைகள் விழுந்துச்சு
காலப்போக்குல சில்லரை
விழுந்தா மட்டுமே
ஒய்யப்பனின் நாக்கு
நல்ல வார்த்தைகளைச்
சொல்லுச்சு
காசு போடாம
ஓசியில ஆசி கேட்டா,
'போடா தோசி'ன்னு
நாராசர நடையில
விசுவாமித்திரரா
விசுவரூபம் எடுப்பான்
அஞ்சாம் வகுப்புவர
எல்லோரையும்
பாசாக்கணும்கிறது
கவர்மெண்ட உத்தரவு!
ஆனா,
அதை அறியாத
எங்க ஊரு பொடுசுக
ஒரு விரலாரின்
கருநாக்கே காரணம்
என்றன!
மனுசன் வடிச்ச
வேர்வையும்
மானம் வடிச்ச
மாரியும்
வெளஞ்ச வெள்ளாமைக்கு
காரணங்கிறது போயி,
'ஒய்யப்பன் நாக்கே
பிரதானம்'னு
பேசப்பட்டுச்சு
எப்படியோ....
ஊரோடயும், மக்களோடயும்
ஒன்றிப்போனான்
ஒய்யப்பன்
ஆனா,
சமீபமா அவனுக்கு
சீக்கு முத்திப்போச்சு
"பட்டணத்து
ஆஸ்பத்திரியில
குஷ்டக்காரனுக்கு
வைத்தியம் கெடையாது"ன்னு
வெரட்டிட்டாங்க
'ரெண்டொரு நாள்ல
முடிஞ்சு போயிடும்'னாங்க
அன்னைக்கு
சந்திரகிரணம்
ஊரே கூடி
வேடிக்கை பாத்துச்சு
'நெலாவ பாம்பு
முழுங்குது'ன்னு
உச்சு கொட்டுச்சு ஊரு!
அப்ப....
சப்பாணி வேகமா
ஓடியாந்தான்
'ஒய்யப்பன்
செத்துட்டான்'னான்.
இங்க மிச்ச
சந்திரனையும்
பாம்பு முழுங்கிடுச்சு
நம்ம ஒய்யப்பன
முழுங்கன
குஷ்டங் கணக்கா
இருந்தாலும்,
கொஞ்ச நேரத்துல
நெலா மீண்டும் வந்துருச்சு!
ஆனா....
நம்ம ஒய்யப்பன்?
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home