கேக் - மைக்ரோ வேவ் அவனில் செய்வது எப்படி
மைக்ரோ வேவ் மற்றும் கண்வென்சனல் அவன் சற்றே வேறுபட்டவை. மைக்ரோ வேவ் அவனில் நேரம் மற்றும் பவர் செட்டிங் மாத்திரம் உண்டு. சில மைக்ரோ வேவ் அவனில் ப்ரிசெட் மெனு உண்டு. ஆனால் சிலவற்றில் இல்லை. சரி இப்போது கேக் மைக்ரோ வேவ் அவனில் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 3/4 கப் (120 கிராம் )
பொடியாக்கிய சர்க்கரை - 3/4 கப் / அல்லது சற் று குறைவாக பயன்படுத்தவும் (120 கிராம் )
முட்டை - 2
வெண்ணிலா சாறு - 1/4 சிட்டிகை
பேகிங் பவ்டர் - 1/4 சிட்டிகை
வெண்ணை - 2 முதல் 3 மேஜை கரண்டி
பால் - 2 மேஜை கரண்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் பேகிங் பவுடர் ஆகியவற்றை சல்லடை கொண்டு சலித்து கலக்க வேண்டும்.
இதை ஒரு பக்கமாக வைக்கவும். பிறகு மைக்ரோ வேவ் பத்திரத்தின் உள் சுவர்களில் வெண்ணை வைத்து நன்றாக தேய்க்கவும் .
இன்னொரு வட்ட பாத்திரத்தில் hand wshisker or hand belnder or electric blender பயன் படுத்தி வெண்ணை மற்றும் சர்க்கரையை நன்கு அடிக்கவும். கிரீம் போன்று மாறியவுடன் வெண்ணிலா சாறு ஊற்றவும்.
நன்கு அடித்து கலக்கவும். இரண்டு முட்டைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அடித்து கலக்கவும்.
நன்றாக கலக்கிய பிறகு. ஒரு மேஜை கரண்டி அளவு பால் சேர்த்து அடிக்கவும். பிறகு கலந்து வைத்த மைதா மாவை இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெதுவாக கலக்கவும்.
கட்டிகள் இன்று கலக்கிய பின்பு மைக்ரோ வேவ் பத்திரத்தின் உள்ளே கொட்ட வேண்டும். பிறகு மைக்ரோ வேவ் அவனில் வைக்கவும். பின்பு 2.30 நிமிடங்கள் முதல் 3.30 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும்.
அவன் அணைக்கப்பட்ட பிறகு 10 நிமிடங்கள் அப்படியே உள்ளே வைத்து காத்திருக்கவும். பின்பு வெளியே எடுத்து நன்றாக ஆற வைக்கவும்.. பின்பு ஒரு வட்ட தட்டில் கேக்கை கவிழ்த்து வைத்து உங்கள் விருப்பப்படி பரிமாறவும்.
Labels: கேக்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home