சாதாரண கேக்
தேவையான பொருள்கள்
மைதா 200 கிராம்,
வெண்ணை 200 கிராம்,
சர்க்கரை 200 கிராம்,
முட்டை பெரியதாக 4,
பேக்கிங் பவுடர் 1/2 தேக்கரண்டி,
அதில் கால்பாகம் சமையல் சோடா,
மைதா, பேக்கிங் பவுடர், சோடாப்பு மூன்றையும் சேர்த்து சலித்து கொள்ளவும்.
சர்க்கரையைத் தூளாக்கவும்.
வெண்ணையைப் பாத்திரத்தில் போட்டு சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்கு அடிக்கவும். மிகவும் நன்றாக அடிக்கவும். வெண்ணையும் சர்க்கரையுமாக நுரைத்துக்கொண்டு கனமற்றுத் தெரியும். அப்படி வரும் வரை அடிக்கவும். முட்டைகளை தனியேஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதையும் அடித்துக் கொள்ளவும். அடித்த முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணை சர்க்கரை கலவையில் கலந்து கொள்ளவும்.
முட்டை முழுவதையும் கலந்தும் மாவைச் சேர்க்கவும். மெல்லக் கைவிரல்களால் பிசைய வேண்டும்.
பரப்பி மாவுக் கலவையை இட்டு ஆவெனுக்குள் அழுத்தி மூடவும். கேக் வெந்ததும்
நடுவில் லேசாக வெடிப்புத் தெரியும். எதற்கும் குச்சியால் குத்திப் பார்த்துக்
கொள்ளவும். மாவு ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டது என்று பொருள்.
கேக் தயாரிப்பின் அடிப்படை இதுதான் , இதில் விரும்பிய பழங்கள்:
எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றாக வந்தால் நான் பொறுப்பு,
நன்றாக வரவில்லை என்றால் உங்கள் தவறு.
Labels: கேக்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home