Wednesday, 17 April 2013

பாடல்களைப் பற்றி

இந்த இரவையே கலைத்துவிட முயலும்
சிள் வண்டுகள்
இரவுகளைப் பற்றியும்
நட்சத்திரங்கள் மிகுந்த
வானம் பற்றியும் மனம் ததும்பும்
ஏராளமான பாடல்கள்
இருக்கக் கூடும்
என்னிடமும் உண்டு
இசைவின்மையைப் பிரதிபலிக்கும்
இந்த இரவுக்கான பாடல்
அது மொத்த உலகையும் கூட
அபத்தத்திற்குள்ளாகலாம்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home