Wednesday, 17 April 2013

விரியும் பாலை

அந்திமக் கால விளிம்புகளாய்
உருமாறிக்கொண்டிருந்த பொழுதுகளில்
உன்னை நினைத்துக் கொள்வேன்
கூரையில் துடிக்கும் கிளிக்கூண்டின் மணிகளில்
எப்படியோ இசை நுழைந்திடும்
திகிலூட்டும் விதத்தில்
விளையாட்டு மைதானமாகும் இவ்வறைவெளி
சுவர்கள் தம் வேர்க்கால்கள் உதறி
எங்கோ செல்ல
பிடிமானமிழந்து நொறுங்கிவிடுகின்றன
ஜன்னல் கம்பிகள்
தயக்கம் குறைந்த காற்று
தன் கைகளில் என்னை அள்ளிக்கொள்ள
வான்பரப்பெங்கும் மழையென
உதிர்ந்து பரவுவேன் நான்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home