Wednesday, 17 April 2013

உயிர்ப்பின் வெம்மை

முன் எப்போதோ
தன் பறத்தலிலிருந்து
நிலம் மீண்ட மயிலிறகு
ஒளிந்திருக்கிறது
என் குழந்தையின் புத்தக இடைவெளிக்குள்
தன் உயிர்ப்பின் வெம்மையோடு
அவனது கனவுகளை அடைக்காத்தபடி

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home