Wednesday, 17 April 2013

வேறென்ன செய்ய

எனது இதயம்
நிரம்பி உள்ளது
உனதும் அப்படியே
உங்களதும் அப்படியே
எவர் ஒருவரையும்
குற்றம் சொல்லாதே
ஏனெனில்
அது பொய்யாக இருக்கக்கூடும்

ஏதொன்றினால்
இதயம் நிரம்பும் என்பதை
நானறிவேன்
நீயும் அறிவாய்
யாவரும் அறிவோம்
நிரம்பிய இதயத்தைப்
பகிர்தலின்றி
வேறென்ன வேண்டும்
உனக்கும் எனக்கும்

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home